ராஜா ராணி (தொலைக்காட்சித் தொடர்)

ராஜா ராணி 2017 இல் வெளியிடப்பட்ட இந்திய தமிழ்மொழியிலான தொலைக்காட்சித் தொடர் ஆகும். இதில் சஞ்சீவ் மற்றும் அல்யா மானசா ஆகியோர் முதன்மைப் பாத்திரம் ஈற்று நடித்துள்ளனர்.[1][2]. இந்த தொடர் வங்காளி மொழி தொடரான கீ அபோன் கீ போர் எனும் தொடரின் தமிழ் பாதிப்பாகும். இது விஜய் தொலைக்காட்சியில் மே 29 2017 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை 7 (இந்திய சீர் நேரம்) மணிக்கு ஒளிபரப்பாகி 13 ஜூலை 2019ஆம் ஆண்டு அன்று 683 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.

ராஜா ராணி
வகை காதல்
குடும்பம்
நாடகம்
இயக்கம் பிரவீன் பேனாட்
திரைக்கதை மருது ஷங்கர் (வசனம்)
நடிப்பு
  • சஞ்சீவ்
  • அல்யா மானசா
  • ஸ்ரீதேவி
  • ஷப்னம்
முகப்பிசைஞர் இளையவன்
முகப்பிசை இளையவன்
நாடு இந்தியா
மொழி தமிழ்மொழி
இயல்கள் 683
தயாரிப்பு
தயாரிப்பு வெங்கடேஷ் பாபு
குளபல் வில்லஜெர்ஸ்
தொகுப்பு
  • D. Pream
  • P.A. Vinoth Kumar
நிகழ்விடங்கள் தமிழ் நாடு
படவி  பல்வகைக் கமரா
ஓட்டம்  தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசை விஜய் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 29 மே 2017 (2017-05-29)
இறுதி ஒளிபரப்பு 13 சூலை 2019 (2019-07-13)
காலவரிசை
முன் தெய்வம் தந்த வீடு
தொடர்பு கீ அபோன் கி போர்
புற இணைப்புகள்
வலைத்தளம்

ஒளிபரப்பப்படுகின்றது.[3][4]

கதைத் தளம்

கதைத் தளம் இராஜசேகர் குடும்பத்து வேலைக்காரியான செம்பா(அலியா மனோசா)வை மையமாகக் கொண்டது. இராஜசேகரும் அவரது மனைவி லக்‌ஷ்மியும் செம்பாவை தமது மகளாக பாவனை செய்கின்ற அதே வேளை அவர்களது மருமக்களாகிய அர்ச்சனாவும் வடிவும் அப்படி கொள்ளாமல் அவளை ஒதுக்குகின்றார்கள். இராஜசேகரின்கா இளைய மகன் கார்த்திக் (சஞ்சீவ்) நீண்ட காலம் சிங்கப்பூரில் இருந்து விட்டு சென்னை திரும்புகிறான். செம்பா படும் சிரமங்களுக்கு எதிராக கார்த்திக் ஒரு நிலைப்பாட்டை எடுக்கின்றான். சூழ்நிலை கார்த்திக்கை செம்பாவைத் திருமணம் செய்ய வைக்கின்றது. செம்பா கார்த்திக்குக்கு உரிய குடும்ப பெண்ணாக தன்னை நிரூபிப்பாரா? என்பதுதான் கதை.

கதை செல்லும் போக்கில் இராஜசேகரின் மூத்த மருமக்கள் இருவரும் மற்றும் அவரது மூத்த மகளும் வேலைக் காரியான செம்பாவுக்கு இளைய மகன் கார்த்திக்கும் எதிராகவே உள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை கார்த்திக் அவர்களுக்கு வந்து சேர வேண்டிய குடும்ப சொத்தில் பங்கு பெற்று தமது பங்கு குறைவதற்கு காரணமாக உள்ள ஒருவன்.

ஒரு நாள் கார்த்திக் பூசை ஒன்றில் இருக்கும்போது இளைய மருமகளான வடிவின் தம்பி சஞ்சை செம்பாவுடன் தவறாக நடக்க மூற்படுகின்றான். இதனை கார்த்திக் வெளிப்படுத்துகின்றான். இதன் பின் கார்த்திக் சம்பாவின் திருமணத்துக்கு ஆலோசனை வழங்குகின்றான் செம்பாவின் விபரத்தை திருமண சேவையில் பதிவு செய்கின்றான். ஆயினும் வரும் மாப்பிள்ளைகளெல்லாம் எல்லாம் சஞ்சை கூறும் செம்பாவைப் பற்றிய அவதூறுகளால் திரும்பிவிடுகின்றார்கள். இதில் அர்ச்சனாவும் இணைந்து வடிவு மற்றும் சஞ்சையுடன் செயற்படுகின்றாள்.

அர்ச்சனா தனது தூரத்து உறவு முறையான ஒருவரை மாப்பிள்ளையாக கொண்டுவவ்து தனது சூழ்ச்சியை ஆரம்பிக்கின்றார். ஆரம்பத்தில் கார்த்திக் இதில் சந்தேகப்பட்டாலும் பின் தன தீர்மானத்தை மாற்றிக் கொள்கிறார். மாப்பிள்ளையின் குடும்பம் இரண்டு நாட்களில் திருமணத்தை முன்மொழிய அதை இராஜசேகர் ஏற்றுக் கொள்கிறார். அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால் திருமணத்தின் போது அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதும் மனைவியைக் கைவிட்டு செம்பாவுடம் திருமணத்திற்கு உடன்பட்டிருப்பதும் தெரியவருகின்றது.

இறுதியாக திருமணம் நிறுத்தப்படுகின்றது. செம்பாவின் இந்த நிலைமைக்காக இராஜசேகரனை அனைவரும் குற்றஞ்சாட்டுகின்றனர், அடுத்து இராஜசேகர் செம்பாவை கார்த்திக்கு திருமணம் முடிக்க தீர்மானிக்கின்றார்.கார்த்திக் தான் திவ்யாவைக் காதலிப்பதை தனது குடும்பத்திற்கு தெரிவிக்கின்றான்.கார்த்திக்கின் விருப்பத்திற்கு வீட்டில் அனைவரும் சம்மதிக்கின்றனர். செம்பாவுக்கு திருமணம் நடக்கவிருந்த அதே நாளில் திவ்வியா கார்த்திக் நிட்சயதார்த்தத்தையும் நடாத்த தீர்மானிக்கப்படுகின்றது. திவ்யா சிங்கப்பூரில் இருந்து வரும் தம் பெற்றோர்களை அழைத்துவர திவ்வியா விமான நிலையம் செல்கிறாள். இதனிடையில் இராஜசேகர் கார்த்திக்கை செம்பாவைத் திருமணம் செய்ய உடன்படவைக்கின்றார். இறுதியாக செம்பாவை கார்த்திக் திருமணம் செய்கிறான். கடைசி நேரத்தில் திவ்வியா வந்தடைகின்றாள். திவ்வியா பெரும் அதிச்சிக்குள்ளாகின்றாள்.

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • சஞ்சீவ் - கார்த்திக்
  • அல்யா மானசா- செம்பருத்தி (செம்பா)

துணை கதாபாத்திரம்

  • ராஜலட்சுமி - லட்சுமி ராஜசேகர்
  • ஆடிடோர் ஸ்ரீதர் - ராஜசேகர்
  • எம் .ஜே ஸ்ரீராம் - சந்திரசேகர்
  • ஈஸ்வர் → குரோஷி - சந்திரன்
  • ஸ்ரீதேவி - அர்ச்சனா
  • ஷப்னம் - வடிவு சந்திரன்
  • பவித்திரா → அனுஷ் ரெட்டி - திவ்வியா
  • கார்த்திக் சசிதரன் - சஞ்சய்
  • கோவை பாபு - அமுர்தன்
  • வைஷாலி → கீதாஞ்சலி → ரித்திகா - விநோதினி
  • கே.எஸ். ஜெயலக்ஷ்மி
  • அஷ்வர்யா -நதினி
  • சாந்தினி பிரகாஷ் - ஸ்வர்ணா

விருதுகள்

இந்த தொடர் 4வது விஜய் தொலைக்காட்சி விருதுகள் மற்றும் கலாட்டா நட்சத்திரா விருதுகளில் சிறந்த தொடர், சிறந்த நாயகன் மற்றும் நாயகி, சிறந்தவில்லி, சிறந்த தாய், சிறந்த ஜோடி போன்ற 19 க்கும் மேலுள்ள பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டு 5 விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வேறு மொழிகளில் மறுதயாரிப்பு

இது ஒரு வங்காளி மொழி தொடரின் தமிழ் மறுதயாரிப்பு எனினும் இவ் தொடர் தமிழிருந்து கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே தருணம் இந்த தொடரின் பல காட்சிகள் தமிழ் நேயர்களுக்கேட்ப மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மொழி தலைப்பு தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டது அத்யாயங்கள்
வங்காளி கீ அபோன் கீ போர் ஸ்டார் ஜல்ஷா 25 ஜூலை 2016 ஒளிபரப்பில்
தமிழ் ராஜா ராணி விஜய் தொலைக்காட்சி 29 மே 2017 ஒளிபரப்பில்
கன்னடம் புத்மல்லி ஸ்டார் சுவர்ணா 11 டிசம்பர் 2017 22 ஜூன் 2018
தெலுங்கு காதலோ ராஜகுமாரி ஸ்டார் மா 29 ஜனவரி 2018 ஒளிபரப்பில்

இவற்றை பார்க்க

மேற்கோள்கள்

  1. "Vijay TV launches new serial Raja Rani". timesofindia.indiatimes.com.
  2. "All about love, hatred and conflicts". timesofindia.indiatimes.com.i at 7 PM|work=|publisher=tvnews4u.com}}
  3. "விஜய் டிவியில் புதிய தொடர் ராஜா ராணி". cinema.dinamalar.com.
  4. "Vijay TV to launch new fiction show Raja Rani at 7 PM". tvnews4u.com.

வெளி இணைப்புகள்

விஜய் தொலைக்காட்சி : திங்கள்-சனி இரவு 7 மணிக்கு
Previous program ராஜா ராணி
(29 மே 2017 – 13 ஜூலை 2019)
Next program
தெய்வம் தந்த வீடு ஆயுத எழுத்து
(15 ஜூலை 2019 - ஒளிபரப்பில் )
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.