சபிதா ஆனந்த்
சபிதா ஆனந்த் (மலையாளம்: സബിത ആനന്ദ്) ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மலையாளத்தில் 1980களின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்த இவர், 1950, மற்றும் 1960களில் மலையாளத் திரைப்படத்துறையில் முன்னணி நடிகரான ஜே. ஏ. ஆர். ஆனந்தின் மகளாவார்.
சபிதா ஆனந்த் | |
---|---|
தேசியம் | இந்தியன் |
பணி | திரைப்பட நடிகை |
செயல்பட்ட ஆண்டுகள் | 1982 - தற்போது வரை |
திரை வாழ்க்கை
1987ஆம் ஆண்டில் உப்பு என்னும் மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். மலையாளத்தில் சுமார் 100 திரைப்படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்துள்ள இவர் மலையாளத்தில், மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவருடனும் கதாநாயகியாக நடித்துள்ளார். மலையாளத்தை தொடர்ந்து தமிழிலும், கன்னடத்திலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது துணை கதாப்பாத்திரங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
நடித்த திரைப்படங்கள்
தமிழ் திரைப்படங்கள்
- 2008 வம்புசண்டை
- 2006 சாசனம்
- 2006 ஈ
- 2005 செல்வம்
- 2004 மீசை மாதவன்
- 2004 எங்கள் அண்ணா
- 2002 பாலா
- 2000 வானத்தைப் போல
- 1998 புதுமைப்பித்தன்
- 1996 காதல் கோட்டை கமலியின் சகோதரி
- 1994 வீரப் பதக்கம்
- 1994 சக்திவேல்
- 1993 உள்ளே வெளியே - ராஜலட்சுமி
- 1992 சின்னத் தாயே - ராசம்மா
- 1989 திருப்புமுனை
- 1988 என்னை விட்டுப் போகாதே
- 1987 சின்னப் பூவே மெல்லப் பேசு - எஸ்தர்
- 1985 ஹேமாவின் காதலர்கள்
- 1982 கோபுரங்கள் சாய்வதில்லை
தொலைக்காட்சித் தொடர்கள்
ஆண்டு | தொடர் | கதாப்பாத்திரம் | தொலைக்காட்சி | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
2004 | கோலங்கள் | தைலாம்பாள் | சன் தொலைக்காட்சி | தமிழ் | |
2006 | பெண் | சன் தொலைக்காட்சி | தமிழ் | ||
2008 | ஓமனத்திங்கள் பக்சி | ஏசியாநெட் | மலையாளம் | ||
2010-2013 | தியாகம் | சன் தொலைக்காட்சி | தமிழ் | ||
2011-2013 | சினேககூடு | சூர்யா தொலைக்காட்சி | மலையாளம் | ||
2013–தற்போது வரை | தெய்வமகள் | சரோஜா தேவராஜ் | சன் தொலைக்காட்சி | தமிழ் |
2017 மாப்பிள்ளைை விஜய் tv
2019 நாம் இருவர் நமக்கு இருவர் விஜய் டிவி
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.