சேவகன்

சேவகன் (Sevagan), 1992 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை அர்ஜுன் இயக்கி தயாரித்தார். இதுவே அர்ஜுன் இயக்கிய முதல் தமிழ் படமாகும். இத்திரைப்படத்தில் அர்ஜுன், குஷ்பூ, கேப்டன் ராஜு, நாசர், ராக்கி, வெண்ணிறாடை மூர்த்தி, செந்தில், சாருஹாசன், ரா.சங்கரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 19 ஏப்ரல் 1992 இல் வெளியான இப்படத்திற்கு இசை அமைத்தவர் மரகத மணி ஆவார்.

சேவகன்
இயக்கம்அர்ஜுன்
தயாரிப்புஅர்ஜுன்
இசைமரகத மணி
நடிப்புஅர்ஜுன்
குஷ்பூ
கேப்டன் ராஜு
நாசர்
ராக்கி
வெண்ணிறாடை மூர்த்தி
செந்தில்
சாருஹாசன்
ரா. சங்கரன்
ஒளிப்பதிவுலட்சுமி நாராயணன்
படத்தொகுப்புபி. சாய் சுரேஷ்
வெளியீடு19 ஏப்ரல் 1992
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

  • அர்ஜுன் - டி.எஸ்.பி. சஞ்ஜை
  • குஷ்பூ - அஞ்சலி
  • கேப்டன் ராஜு - சபாபதி
  • நாசர் - அசோக்
  • ராக்கி - டோனி/சிங்
  • வெண்ணிறாடை மூர்த்தி - ஏகாம்பரம்
  • செந்தில் - கனகாம்பரம்
  • சாருஹாசன் - சத்யமூர்த்தி
  • ரா.சங்கரன் - ஷண்முகம், அஞ்சலியின் தந்தை.
  • எம்.ஆர்.கே - ஆறுமுகம்
  • ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
  • கவிதா - சஞ்ஜையின் தாய்
  • தயிர் வடை தேசிகன்
  • சிவராமன்
  • பயில்வான் ரங்கநாதன்
  • சக்திவேல் - ஸ்ரீதர்
  • வினோத் - வினோத்
  • சி.ஆர். சரஸ்வதி - அசோக்கின் தாய்
  • தேவிபிரயா
  • ஷர்மிலி
  • ரவிச்சந்திரன் - கௌரவ வேடம்
  • மேஜர் சுந்தர்ராஜன் - கௌரவ வேடம்

கதைச்சுருக்கம்

மிகவும் நேர்மையான, யாருக்கும் அஞ்சாத காவல் துறை அதிகாரியாக திகழும் சஞ்சய் (அர்ஜுன்) ஒரு புதிய நகரத்திற்கு பணிமாற்றம் செய்யப்படுகிறார். அந்த நகரத்தில் தன் தங்கை மற்றும் விதவை தாயுடன் வாழ்ந்து வருகிறார். சஞ்சய் தந்தையின் மற்றொரு தாரத்தின் மகனான அசோக் (நாசர்) ஊழல் மந்திரி சபாபதியிடம் (கேப்டன் ராஜு) வேலை செய்து வருகிறான். அந்த மந்திரி, மது, மாது, சூது ஆகிய சட்டத்திற்கு புறம்பான பல தொழில்களை நடத்திவருகிறார். அவ்வாறாக ஒரு நாள், ஸ்ரீதர் (சக்திவேல்) என்ற ஊழல் போலீஸ் அதிகாரி, அப்பாவி கல்லூரி பெண்ணான அஞ்சலியை (குஷ்பூ) பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்கிறான். சரியான நேரத்தில் அங்கே வந்த சஞ்சய் அஞ்சலியை காப்பாற்றுகிறார். அதனால் அஞ்சலி அவர் மீது காதல் கொள்ள, பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். மற்றொரு மந்திரியான சத்யமூர்த்தி (சாருஹாசன்) மிகவும் நேர்மையானவராகவும், மக்களுக்கு நல்லது நினைப்பவராகவும் இருக்கும் காரணத்தினால், அவருக்கு மிகவும் ஆதரவான காவல் துறை அதிகாரியாக சஞ்சய் நடந்து கொள்கிறார். இந்நிலையில் நடக்கும் தேர்தலில் சபாபதி வென்றதால் அவரது அரசியல் சக்தி பன்மடங்காக உயர்கிறது. ஊழல்வாதி சபாபதி தனக்கு ஆதரவாக நடந்துகொள்ளாத சஞ்சயை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார். சஞ்சயின் பலவீனம் அஞ்சலி என்று கண்டறிந்து, அவளுக்கு குறிவைக்கிறார். சபாபதியின் திட்டத்தை எவ்வாறு சஞ்சய் அணுகி முறியடித்து நீதியை நிலைநாட்டினார் என்பதே மீதிக் கதை ஆகும். வெண்ணிறாடை மூர்த்தியும், செந்திலும் இப்படத்தில் முக்கிய நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இசை

இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் மரகத மணி ஆவார். இப்படத்தின் 5 பாடல்களையும் எழுதியவர் வைரமுத்து.

பாடல்களின் பட்டியல்
வரிசை

எண்

பாடல் பாடகர்கள் பாடல் ஒலிக்கும் நேரம்
1 கல்லூரி மண்டபத்தில் சித்ரா 04:10
2 நன்றி சொல்லி எஸ். பி. பாலசுப்பிரமணியம் 02:47
3 நன்றி சொல்லி பாடுவேன் சித்ரா, மனோ 04:02
4 சேவகன் எஸ். பி. பாலசுப்பிரமணியம் 03:15
5 தங்க காவலன் சித்ரா, மரகத மணி 04:30

வரவேற்பு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்-யின் ஆர்எஸ்பி இப்படத்திற்கு,கதையில் ஆழம் இல்லை என்றும், குஷ்பூவின் கதாபாத்திரம் சரிவர வடிவமைக்கவில்லை என்றும், கேப்டன் ராஜ்-யின் நடிப்பு ஈர்க்கும் வகையில் அமையவில்லை என்றும், மரகத மணியின் முதல் பாட்டு அவர் பாணியில் இருந்தது என்றும் கலந்த விமர்சனத்தை கொடுத்தார்.

மேற்கோள்கள்

  1. https://spicyonion.com/movie/sevagan/
  2. http://www.sify.com/movies/arjun-announces-jai-hind-2-news-tamil-nfmhqScecbg.html
  3. https://news.google.com/newspapers?id=rmJlAAAAIBAJ&sjid=H5QNAAAAIBAJ&pg=342%2C1267659
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.