12 பி (திரைப்படம்)
12 பி திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஷாம், ஜோதிகா, சிம்ரன், விவேக் போன்றவர்கள் நடித்துள்ளனர். இயக்குனர் ஜீவாவின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும்.[1]
12 பி | |
---|---|
![]() 12 பி | |
இயக்கம் | ஜீவா |
தயாரிப்பு | விக்ரம் சிங் |
கதை | பாக்யராஜ் |
இசை | ஹாரிஸ் ஜெயராஜ் |
நடிப்பு | ஷாம் ஜோதிகா சிம்ரன் சுனில் செட்டி மூன் மூன் சென் விவேக் |
வெளியீடு | May 15, 2001 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
வகை
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
வேலை தேடிச்செல்லும் நபரான சக்தி ஒரு அழகிய பெண்ணைப் பார்த்து மயங்குகின்றார். அவர் அப்பெண்ணின் பின்னே செல்கின்றார். மேலும் அவர் செல்ல வேண்டிய பேருந்தும் சென்றது வங்கியில் அவருக்குக் கிடைக்க வேண்டிய வேலையும் பறிபோனது. அதே வேளை கதையில் மாற்றம். இவ்வாறு அவர் வேலைக்குச் சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என்ற கற்பனைக்கதையினுள்ளும் அழைக்கப்படுகின்றோம் நாம். அவ்வாறு வேலைக்குச் செல்லும் சக்திக்கு வங்கியில் வேலை கிடைத்தது. அங்கு அவர் பின் தொடர்ந்து சென்ற பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்த முயற்சி செய்தும் பயனெதுவும் இல்லை. ஆனால் வங்கியிலிருந்த ஒரு பெண்ணால் காதலிக்கப்பட்டார். பேருந்து நிலையத்தில் பெண்ணைத் தொடர்ந்து சென்ற சக்தியோ வேலை கிடைக்காது பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடுகின்றது. இறுதியில் நண்பர் ஒருவரின் உதவியுடன் வாகனங்களைத் திருத்துபவராகப் பணி புரிந்தார். இவ்வாறு இருக்கும் போது அவர் பின் தொடர்ந்து சென்ற பெண்ணைப் காண்கின்றார். அவரிடம் உள்ள தன் காதலை வெளிப்படுத்துகின்றார். இருவருக்கும் ஏற்படும் காதலில் திடீரென அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வந்த அவள் மாமன் அவளைத் தான் காதல் செய்வதாகக் கூறுகின்றான். இப்பிரச்சனையிலிருந்து எவ்வாறு சக்தியும் அவன் காதலியும் தப்பிக்கின்றனர் என திரைக்கதை நகருகின்றது.
மேற்கோள்கள்
- ஆர்.சி.ஜெயந்தன் (2018 சூன் 8). "பேருந்தைத் தவறவிட்டவர் ஷாமா, ஜீவாவா?". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 9 சூன் 2018.