மாயாவி (சித்திரக்கதை)

மாயாவி 1939 ஆம் ஆண்டு லீ பாக் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைச் சித்திரக்கதையாகும். இது பெப்ரவரி 17, 1936 முதல் நாளாந்த செய்தித்தாளில் கருப்பு வெள்ளை சித்திரக் கீற்றாக வெளியாகி மே 1936 தொடக்கம் ஞாயிறு வண்ணக் கீற்றாகவும் வெளியாகிறது. மாயாவி சித்திரக் கதைகளையும் தாண்டி தொலைக்காட்சி திரைப்படங்கள் என்பவற்றிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மாயாவி (எ) "கிட்" வாக்கர்

மாயாவியின் வரலாறு

மாயாவி "பெங்காலியா" எனும் அடர்ந்த வனப்பகுதியில் வசிப்பவர் ஆவார். அவ்வனத்தின் இயற்கை வளங்களையும், அங்கு வாழும் பழங்குடிகளையும் பல தலைமுறைகளாகக் காத்து வரும் காவலர் அவர். இவர் எப்பொழுதும் ஊதா நிற முகமூடி அணிந்திருப்பதால் இவரை முகமூடி வீரர் என்றும் அழைப்பர். இவரது மனைவியின் பெயர் டயானா பால்மர் என்பதாகும்.

தமிழில் மாயாவி

தமிழில் ராணி காமிக்ஸ் மூலம் மாயாவி எனும் கதை பாத்திரம் தமிழ் வாசகர்கள் மத்தியில் பெரும் பிரபல்யம் அடைந்தது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.