சிட்டிசன்

சிட்டிசன் 2001 ஆம் ஆண்டில் சரவண சுப்பையா இயக்கத்தில் வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். இது கே. குஞ்சுமோனின் தயாரிப்பிலும் எஸ். சுப்பிரமணியத்தின் வழிகாட்டலிலும் அஜித் குமார், வசுந்தரா தாஸ், மீனா, நக்மா மற்றும் மணிவண்ணனின் நடிப்பில் உருவாகிய திரைப்படமாகும். இதற்கான இசையைத் தேவா உருவாக்கியிருந்தார். இத்திரைப்டத்தில் அஜித் குமார் 9 வேடங்களில் தோன்றியது குறிப்பிடத்தக்கதாகும்.

சிட்டிசன்
இயக்கம்சரவண சுப்பையா
தயாரிப்புஎஸ். எஸ். சுப்ரமணியம்
கதைசுஜாதா
வசனம்பாலகுமாரன்
இசைதேவா
நடிப்புஅஜித் குமார்
வசுந்தர தாஸ்
மீனா
நக்மா
மணிவண்ணன்
வெளியீடு2001
ஓட்டம்172 நிமிடங்கள்
மொழிதமிழ்
ஆக்கச்செலவு20 கோடி
($ 4.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்)

திரைக்கதை

ஒரு மாவட்ட கலெக்டர், நீதிபதி, காவற்துறை அதிகாரி ஆகியோர் பகல் நேரத்திலேயே கடத்தப்படுகின்றனர். இதற்கு சிட்டிசன் (அஜித்) என்பவரே உரிமை கோருகின்றார். மத்திய புலனாய்வுப் பிரிவு அலுவலர் சரோஜினி (நக்மா) இவற்றைப் ஆராய்ந்தபோது இவர்கள் அத்திப்பட்டி என்னும் ஒரு சிறு மீனவக் கிராமத்துடன் தொடர்பிருந்தமையும் அதில் இருந்த 600 கிராமத்தவர்களும் அடையாளமே இல்லாதபடி அழித்தொழிந்து போயிருந்தமை தெரியவருகின்றது. பல்லாண்டுகளுக்கு முன்னர் இக்கிராமத்தில் ஒரு கூட்டுப் படுகொலை நிகழ்ந்ததும் தெரியவருகின்றது. பின்னர் திரையில் சிட்டிசன் 20 வருடங்களிற்கு முன்னர் சிறுவனாக இருந்து எவ்வாறு காப்பாற்றப்பட்டது என்பது தெரியவருகின்றது.

நடிப்பு

நடிகர் மற்றும் நடிகர்கள்கதாபத்திரம்
அஜித்அறிவானந்தம், அப்துல்லா, அந்தோனி, சிட்டிசன் மற்றும் சுப்ரமணி
வசுந்தர தாஸ்இந்து
மீனாசிவாலி
நக்மாCBI சரோஜி அரிச்சந்திரன்
பாண்டியன்'வாப்பா'
'நிழலகள்' ரவிMகலெக்டர்
தேவன்DGP தேவசகாயம்
அஜேய் ரதனம்ACP

பாடல்கள்

Untitled

தேவாவின் இசையமைப்பில் உருவான இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றன. பாடகர் திப்பு பாடிய மேற்கே உதிக்கும் சூரியனே எனும் பாடல் மிகச் சிறப்பான ஒரு வெற்றிப் பாடலாகும்.

எண் தலைப்புபாடகர்(கள்) நீளம்
1. "ஆஸ்திரேலிய தேசம் "  ஹரிஹரன், ஹரிணி 6:46
2. "மேற்கே உதிக்கும் சூரியனே"  திப்பு 6:12
3. "பூக்காரா பூக்காரா"  சங்கர் மகாதேவன், வசுந்தரா தாஸ் 6:20
4. "சிக்கிமுக்கி கல்லு"  சங்கர் மகாதேவன், சாதனா சர்கம், 6:51
5. "ஐ லைக் யூ"  வசுந்தரா தாஸ் 6:52
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.