மணிவண்ணன்

மணிவண்ணன் (சூலை 31, 1954 - சூன் 15, 2013[2]) தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குநரும், தமிழுணர்வாளரும் ஆவார். 400 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும், 50 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.

மணிவண்ணன்

பிறப்பு சூலை 31, 1954(1954-07-31)
கோயம்புத்தூர் , இந்தியா
இறப்பு சூன் 15, 2013(2013-06-15) (அகவை 58)
சென்னை
வேறு பெயர் மணிவண்ணன் இராசகோபால்[1]
தொழில் நடிகர். திரைப்பட இயக்குனர்
நடிப்புக் காலம் 1983 -2013
துணைவர் செங்கமலம்
குறிப்பிடத்தக்க படங்கள் அப்பா

வாழ்க்கைச் சுருக்கம்

கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் மணிவண்ணன். இவரின் இயக்கத்தில் 50 திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளிவந்துள்ளன. மேலும் இவர் நடிகர் சத்தியராஜின் கல்லூரி நண்பர் ஆவார், சத்யராஜை வைத்து சுமார் 25 திரைப்படங்கள் எடுத்துள்ளார்.

அரசியல் தாக்கம்

சிறு அகவையிலிருந்தே அரசியல் பின்னணியில் வளர்ந்த மணிவண்ணன் நக்சலைட்டுகளின் தலைவராக இருந்த சாரு மஜும்தாரைச் சந்தித்தவர். நாத்திகம் மற்றும் திராவிடக் கொள்கையில் பிடிப்புள்ள மணிவண்ணன் தனியீழப் போராட்டத்தையும் விடுதலைப் புலிகளையும் ஆதரித்தவர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திலும்[1] நாம் தமிழர் கட்சியிலும்[3] பணியாற்றியவர்.

மறைவு

மணிவண்ணன் 15 ஜூன் 2013 அன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.[2] மணிவண்ணன் ஏற்கனவே இதய அறுவைச் சிகிச்சையும், முதுகில் தண்டுவட அறுவைச் சிகிச்சையும் செய்து கொண்டிருந்தார். அதனாலேயே சில ஆண்டுகள் படங்கள் இயக்காமல் இருந்தார். மணிவண்ணனுக்கு மனைவியும் ஜோதி என்ற மகளும், ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர்.

நடித்த திரைப்படங்களில் சில

ஆண்டு படம் கதாபாத்திரம் மொழி
2013நாகராஜ சோழன் எம்.ஏ,எம்.எல்.ஏஅரசியல்வாதி(மணிமாறன்)தமிழ்
2011வேலாயுதம்அரசியல்வாதிதமிழ்
2011சதுரங்கம்தமிழ்
2010தில்லாலங்கடிதமிழ்
2008ராமன் தேடிய சீதைமாணிக்கவேல்தமிழ்
2008குருவிவெற்றிவேலின் தந்தைதமிழ்
2007நம் நாடுதமிழ்
2007சீனா தானாகாவல்துறை ஆய்வாளர்தமிழ்
2007சிவாஜிஆறுமுகம்தமிழ்
2006தம்பிதமிழ்
2006ஆதிஆதியின் வளர்ப்பு தந்தைதமிழ்
2006சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்ஜேபிதமிழ்
2006வாத்தியார்சுப்ரமணியன்தமிழ்
2005மஜாகோவிந்தன்
2005ஜீதமிழ்
2005லண்டன்தமிழ்
2004விஸ்வ துளசிதமிழ்
2004மதுரதமிழ்
2004சுள்ளான்மணிதமிழ்
2004ஜனாதமிழ்
2004எங்கள் அண்ணாகண்ணனின் தந்தைதமிழ்
2004அரசாட்சிதமிழ்
2004எனக்கு 20 உனக்கு 18தமிழ்
2003அலாவுதீன்தமிழ்
2003பார்த்திபன் கனவுசத்யாவின் தந்தைதமிழ்
2003வசீகராமணி(பூபதியின் தந்தை)தமிழ்
2003பிரியமான தோழிஜூலியின் தந்தைதமிழ்
2002பம்மல் கே. சம்பந்தம்தமிழ்
2002பஞ்சதந்திரம்தமிழ்
2002ரெட்நாராயணன்தமிழ்
2001ஆண்டான் அடிமைசூசைதமிழ்
2001டும் டும் டும்சிவாஜிதமிழ்
2001காசிதமிழ்
2001பிரியாத வரம் வேண்டும்தாடிதமிழ்
2001என்னவளேலட்சுமியின் தந்தைதமிழ்
2001பார்த்தாலே பரவசம்நெல்லை அமரன்தமிழ்
2001தாலி காத்த காளியம்மன்தர்மலிங்கம்தமிழ்
2000I Have Found Itபாலாவின் நண்பன்
2000முகவரிதமிழ்
2000ரிதம்தமிழ்
2000உன்னைக்கொடு என்னைத் தருகிறேன்தமிழ்
1999பூமகள் ஊர்வலம்சிதம்பரம்தமிழ்
1999தாஜ்மகால்தமிழ்
1999துள்ளாத மனமும் துள்ளும்மணிதமிழ்
1999சின்னத் துரைதமிழ்
1999காதலர் தினம்மணிவண்ணன்தமிழ்
1999முதல்வன்முதன்மைச் செயலாளர்தமிழ்
1999முகம்தமிழ்
1999நிலவே முகம் காட்டுதமிழ்
1999படையப்பாபடையப்பாவின் சித்தப்பாதமிழ்
1999ராஜஸ்தான்தமிழ்
1999சங்கமம்தமிழ்
1999தொடரும்தமிழ்
1998பொற்காலம்தமிழ்
1998என் ஆசை ராசாவேதமிழ்
1998கல்யாண கலாட்டாதமிழ்
1998ஜீன்ஸ்தமிழ்
1998காதலே நிம்மதிதமிழ்
1998தேசீய கீதம்தமிழ்
1997காதலுக்கு மரியாதைதமிழ்
1997பெரிய இடத்து மாப்பிள்ளைமணியன் கவுண்டர்தமிழ்
1997கடவுள்தமிழ்
1996அவ்வை சண்முகிமுதலியார்தமிழ்
1996காதல் கோட்டைதமிழ்
1995கோகுலத்தில் சீதைதமிழ்
1994அமைதிப் படைமணிமாறன்தமிழ்
1989கொடிபறக்குதுதமிழ்

இயக்கிய சில படங்கள்

ஆண்டுஇயக்கிய படம்மொழி
2001ஆண்டான் அடிமைதமிழ்
1994அமைதிப்படைதமிழ்
1990சந்தனக் காற்றுதமிழ்
1989கோபால ராவ் காரி அப்பாய் (Gopala Rao Gaari Abbai)தெலுங்கு
1989ஹம் பி இன்சான் ஹெய்ன் (Hum Bhi Insaan Hain)இந்தி
1989காதல் ஓய்வதில்லைதமிழ்
1987சின்னத் தம்பி பெரிய தம்பிதமிழ்
1985அன்பின் முகவரிதமிழ்
1984அம்பிகை நேரில் வந்தாள்தமிழ்
1984இங்கேயும் ஒரு கங்கைதமிழ்
1984இருபத்தி நாலு மணிநேரம்தமிழ்
1984ஜனவரி ஒன்னுதமிழ்
1984குவாகுவா வாத்துக்கள்தமிழ்
1984Noorava Rojuதெலுங்கு
1984நூறாவது நாள்தமிழ்
1983இளமைக் காலங்கள்தமிழ்
1983ஜோதிதமிழ்

கதை வசனம் எழுதிய திரைப்படங்கள்

மேற்கோள்கள்

  1. "manivannan profile". வீதி இணையதளம். பார்த்த நாள் சூன் 17, 2013.
  2. இயக்குநர்- நடிகர்- எழுத்தாளர் மணிவண்ணன் மரணம்
  3. "seeman covers manivannans body with ltte flag and pays homage manivannan". தமிழ்ஸ்டார் இணையதளம். பார்த்த நாள் சூன் 17, 2013.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.