நூறாவது நாள்
நூறாவது நாள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், நளினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம், குறைந்த செலவில், பன்னிரெண்டு நாட்களில் எடுக்கப்பட்டது.
நூறாவது நாள் | |
---|---|
இயக்கம் | மணிவண்ணன் |
தயாரிப்பு | எஸ். என். எஸ். திருமாள் திருப்பதி சாமி பிக்சர்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | மோகன் விஜயகாந்த் நளினி சத்யராஜ் |
வெளியீடு | பெப்ரவரி 23, 1984 |
ஓட்டம் | 135 நிமி. |
மொழி | தமிழ் |
இளையராஜா இசையமைத்திருந்தார். 'விழியிலே மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்..' என்ற பாடலை மணிவண்ணன் எழுதினார். இக்காதல் பாடலை எஸ். பி. பாலசுப்பிரமணியமும், எஸ். ஜானகியும் பாடியிருந்தனர். இப்படத்தின் பின்னணி இசையும், பாடல்களைப் போன்றே விற்பனையில் சாதனை படைத்தது.
பாடல்கள்
- விழியிலே மணி விழியில்..
- உருகுதே இதயமே..
- உலகம் முழுதும் பழைய ராத்திரி..
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.