முரளி (தமிழ் நடிகர்)

முரளி (மே 19, 1964 - செப்டம்பர் 8, 2010) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.[1] கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் 1984 இல் வெளி வந்த பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். 1990 இல் வந்த “புது வசந்தம்”, 1991 இல் வந்த “இதயம்” படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. “கடல் பூக்கள்” என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றார். [2]

முரளி

பிறப்பு மே 19, 1964 (1964-05-19)
பெங்களூரு, இந்தியா
இறப்பு செப்டம்பர் 8, 2010(2010-09-08) (அகவை 46)
சென்னை, இந்தியா
தொழில் நடிகர்
நடிப்புக் காலம் 1984 - 2010
துணைவர் ஷோபா

வாழ்க்கைக் குறிப்பு

சொந்த வாழ்க்கை

முரளியின் தந்தை சித்தலிங்கையா கன்னடர் ஆவார். அவர் பல படங்களை‌த் தயா‌ரித்துள்ளார். முரளியின் தாயார் தமிழகத்தைச் சேர்ந்தவர். முரளிக்கு ஷோபா என்ற மனைவியும், அதர்வா, ஆகா‌ஷ்‌ என்‌ற இரு மகன்களும், காவ்யா என்ற ஒரு மகளும் உள்ளனர். அதர்வா தற்போது தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளார்.

அதர்வா “பாணா காத்தாடி” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தில் முரளி சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றார்.

திரை வாழ்க்கை

இவர் சிவாஜி கணேசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சத்யராஜ், பிரபுதேவா, சூர்யா, பார்த்திபன், மம்மூட்டி, சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடனும் மீனா, சிம்ரன், ரோஜா, தேவயானி, லைலா, ரம்பா உள்ளிட்ட முன்னணி கதாநாயகிகளுடனும் இணைந்து நடித்துள்ளார்.[3]

அரசியல் வாழ்க்கை

இவர் அ.தி.மு.கவில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டார். இக்கட்சிக்காகத் தேர்தலில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரமும் செய்தார்.

நடித்த திரைப்படங்கள்

எண்ஆண்டுதிரைப்படம்கதாபாத்திரம்மொழிகுறிப்புகள்
11984பிரேம பர்வாகன்னடம்
2பூவிலங்குபாண்டியன்தமிழ்
3இங்கேயும் ஒரு கங்கைகாத்தமுத்துதமிழ்
4புதியவன்மனோகர்தமிழ்
51985பகல் நிலவுசெல்வம்தமிழ்
6கீதாஞ்சலிஜேம்ஸ்தமிழ்
7அந்தஸ்துதமிழ்
8அஜேயாகன்னடம்
9இளங்கன்றுதமிழ்
101986புதிர்தமிழ்முதல் இரட்டை வேடம்
11ஒரு மலரின் பயணம்தமிழ்
12மண்ணுக்குள் வைரம்தமிழ்
13காலமெல்லாம் உன் மடியில்தமிழ்
141987வண்ணக்கனவுகள்மூர்த்திதமிழ்
15வளையல் சத்தம்தமிழ்
16துளசிசிவாதமிழ்
17அவள் மெல்ல சிரித்தால்தமிழ்
18 மீண்டும் மகான்தமிழ்
191988புயல் பாடும் பாட்டுதமிழ்
20குடும்பம் ஒரு கோவில்தமிழ்
21தப்புக்கணக்குதமிழ்
221989தங்கமணி ரங்கமணிரங்கமணிதமிழ்
23கைவீசம்மா கைவீசுதமிழ்
24நினைவுச்சின்னம்தமிழ்
251990புது வசந்தம்பாலுதமிழ்
26பாலம்தமிழ்
27வெற்றிமாலைதமிழ்
28சிலம்புதமிழ்
29நானும் இந்த ஊருதான்தமிழ்
30நாங்கள் புதியவர்கள்தமிழ்
31சிறையில் சில ராகங்கள்தமிழ்
32புதியக்காற்றுதமிழ்
33நம்ம ஊரு பூவாத்தாதமிழ்
341991சாமி போட்ட முடிச்சுதமிழ்
35இதயம்ராஜாதமிழ்
36குறும்புக்காரன்தமிழ்
37இரவுச்சூரியன்தமிழ்
381992தங்க மனசுக்காரன்முருகேஷ் (முருகன்)தமிழ்
39சின்ன பசங்க நாங்கமுத்துக்காளைதமிழ்
40தங்கராசுதங்கராசுதமிழ்
41என்றும் அன்புடன்தமிழ்
42தாலி கட்டிய ராசாதமிழ்
431993மணிக்குயில்தமிழ்
44தங்கக்கிளிமூர்த்திதமிழ்
451994மஞ்சுவிரட்டுதமிழ்
46அதர்மம்தமிழ்
47என் ஆசை மச்சான்சுப்ரமணிதமிழ்
48சத்யவான்தமிழ்
491995ஆகாயப் பூக்கள்தமிழ்
50தொண்டன்தமிழ்
511996பூவே உனக்காகஅவராகவேதமிழ்சிறப்புத் தோற்றம்
52பூமணிதமிழ்
531997காலமெல்லாம் காதல் வாழ்கதமிழ்
54பொற்காலம்மாணிக்கம்தமிழ்
55ரோஜா மலரேகண்ணன்தமிழ்
561998காதலே நிம்மதிமோகன்தமிழ்
57தினம்தோறும்தமிழ்
58வீரத்தாலாட்டுதமிழ்
59ரத்னாரத்னா, முத்துவேல்தமிழ்
60பூந்தோட்டம்தமிழ்
61என் ஆச ராசாவேதமிழ்
62உன்னுடன்சந்தோஷ்தமிழ்
63தேசியகீதம்தமிழ்
641999கனவே கலையாதேஆனந்த்தமிழ்
65ஊட்டிபாலுதமிழ்
66பூவாசம்தமிழ்
67இரணியன்இரணியன்தமிழ்
682000வெற்றிக் கொடி கட்டுசேகர்தமிழ்
69மனுநீதிமுரளிதர்மா
702001கண்ணுக்கு கண்ணாகதர்மாதமிழ்
71சொன்னால் தான் காதலாமுரளிதமிழ்
72ஆனந்தம்மாதவன்தமிழ்
73சமுத்திரம்தங்கராசுதமிழ்
74அள்ளித்தந்த வானம்மாதவன்தமிழ்
75கடல் பூக்கள்கருத்தையாதமிழ்சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது
762002சுந்தரா டிராவல்ஸ்கோபிகிருஷ்ணாதமிழ்
77காமராசுகாமராசுதமிழ்
78நம்ம வீட்டு கல்யாணம்ரவிதமிழ்
792003காதலுடன்கல்யாதமிழ்
802004அறிவுமணிஅறிவுமணிதமிழ்
812006பாசக்கிளிகள்செவத்தய்யாதமிழ்
822009எங்கள் ராசி நல்ல ராசிவிஜய்தமிழ்
83நீ உன்னை அறிந்தால்கோபால்தமிழ்
842010பாணா காத்தாடி'இதயம்' ராஜாதமிழ்சிறப்புத் தோற்றம்

மறைவு

இவர் 46 வது வயதில் 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் மாரடைப்பால் மரணமடைந்தார்.[4]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.