பூமணி

பூமணி (பிறப்பு - 1947, இயற்பெயர் - பூ. மாணிக்கவாசகம்.) சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார்.இவர் எழுதிய 'அஞ்ஞாடி' என்ற நாவலுக்கு 2014 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது

பூமணி
பிறப்பு பூமணி பி.மாணிக்கவாசகம்
1947 ஆம் ஆண்டு.
ஆண்டிபட்டி
கோவில்பட்டி
தமிழ் நாடு
தொழில் நாவலாசிரியர்
சிறுகதை
எழுத்தாளர்
நாடு இந்தியன்
இலக்கிய வகை அறிவியல்
கருப்பொருட்கள் இலக்கியம்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
பிறகு
வெக்கை
வரப்புகள்
வாய்க்கால்
அஞ்ஞாடி

வாழ்க்கைக் குறிப்புகள்

இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டி எனும் ஊரில் பிறந்தார். இவரின் தந்தை பூலித்துரை, தாய் தேனம்மை. பூமணி தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர், தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளாராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.[1]

இலக்கியப் பணி

கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களைத் தனது எழுத்தில் வெளிப்படுத்திய எழுத்தாளர். இவருடைய கல்லூரிக் காலத்தில் இவருக்கு விமர்சகர் சி. கனகசபாபதி ஆசிரியராக இருந்தார். எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பூமணியை சிறுகதைகள் எழுத ஊக்குவித்தார். 1971இல் பூமணியின் முதல் சிறுகதை ‘அறுப்பு’ தாமரை இதழில் வெளிவந்தது. அதன் பிறகு தாமரை ஆசிரியராக இருந்த தி. க. சிவசங்கரன் பூமணியை ஊக்குவித்தார்.

ஆக்கங்கள்

சிறுகதைத் தொகுப்பு

  • வயிறுகள்.
  • ரீதி.
  • நொறுங்கல்கள்.

புதினங்கள்

திரைப்படம்

சிறப்புகள்

  • தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்துக்காக இவர் இயக்கிய கருவேலம்பூக்கள் திரைப்படம் பல முக்கிய உலகத் திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றது.
  • வெக்கை நாவல் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

விருதுகள்

  • இலக்கியச் சிந்தனை பரிசு
  • அக்னி விருது
  • திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விருது
  • இலக்கியத்துக்கான பங்களிப்புக்காக 2011க்கான விஷ்ணுபுரம் விருது
  • அஞ்ஞாடி புதினத்திற்கு 2014இல் சாகித்திய அகாதமி விருது [2]

மேற்கோள்கள்

  1. http://www.dinamani.com/india/2014/12/20/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5/article2580521.ece
  2. http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2014/12/141219_poomani_angyadi

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.