ஜி. திலகவதி

கோ. திலகவதி (பிறப்பு:1951 - )தமிழக காவல்துறையின் முதல் தமிழ்ப்பெண் தலைமை இயக்குனர். தமிழ் எழுத்தாளர். 2001ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கல்மரம் என்ற நாவலுக்காக, 2005ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர்.

கோ. திலகவதி
பிறப்புகோ. திலகவதி
1951
தர்மபுரி குமாரசாமி பேட்டை
இருப்பிடம்சென்னை
தேசியம்இந்தியர்
கல்விகலை முதுவர்
பணிகாவல்துறை தலைமை இயக்குநர்
பணியகம்தமிழ்நாடு அரசு காவல் துறை
பெற்றோர்கோவிந்தசாமி
வாழ்க்கைத்
துணை
இளங்கோ
நாஞ்சில் குமரன்
பிள்ளைகள்ஜாய்ஸ்ரேகா
பிரபு திலக்
திவ்யா

பிறப்பு

திலகவதி தர்மபுரி குமாரசாமி பேட்டையில் காதலித்து, சொந்தங்களைத் துறந்து, மணந்து வாழ்ந்த இணையர்களான கோவிந்தசாமி ரெட்டியாருக்கும் [1] அவர் மனைவிக்கும் 1951ஆம் ஆண்டில் பிறந்தவர். இவருக்கு உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லை.[2]

கல்வி

திலகவதி தன்னுடைய பள்ளிக் கல்வியை தர்மபுரியில் பெற்றார். வேலூர் ஆக்சீலியம் கல்லூரியில் பொருளாதாரத்தில் கலை இளவர் பட்டம் பெற்றார். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பயின்று பொருளாதாரத்தில் கலை முதுவர் பட்டம் பெற்றார்.[3] பின்னர் தமிழ்நாடு பிற்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஒன்றியப் பொதுப் பணியாளர் தேர்விற்கான பயிற்சி நடுவத்தில் (UPSC Civil Service coaching centre, run by Department of Backward Development) சேர்ந்து ஓராண்டு பயிற்சி பெற்றார்.[4] அத்தேர்வில் வெற்றிபெற்று தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியாகத் தேர்வானார்.[3]

பணி

திலகவதி தமிழ்நாட்டிலிருந்து இந்தியக் காவல் பணிக்குத் தேர்வான முதல் தமிழ்ப்பெண் ஆவார். இவர் 1976 ஆம் ஆண்டில் தமிழகக் காவல்துறையில் பணியில் சேர்ந்தார். 34 ஆண்டுகள் அத்துறையில் பல்வேறு பிரிவுகளில் பின்வரும் பதவிகளை வகித்துள்ளார்:

  • காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (Assistant Superintendent of Police - ASP)
வேலூர்.
  • காவல்துறை கண்காணிப்பாளர் (Superintendent of Police - SP)
  • காவல்துறை உதவித் தலைவர் (Deputy Inspector General of Police - DIG)
செங்கற்பட்டு
  • காவல்துறைத் தலைவர் (Inspector General of Police - IG)
ஊர்க்காவல் படை (Homeguard)
இருப்புப்பாதை காவல்துறை (Railway Police)
  • காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் (Additional Director General of Police - ADGP)
தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவு
பொருளாதார குற்றப்பிரிவு (2008 திசம்பர் 19 [5] முதல் 2010 சூன் 16 ஆம் நாள் வரை)
  • காவல்துறை தலைமை இயக்குநர் (Director General of Police - DGP)
தமிழக சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் (2010 சூன் 17 ஆம் நாள் முதல் 2011 மார்ச் 31 ஆம் நாள் வரை)[6]

காவல்துறை தலைமை இயக்குநர் பதவியை அடைந்த முதல் தமிழ்ப்பெண் இவரே. தமிழகத்தில் இப்பதவியை அடைந்த இரண்டாவது பெண் இவர் ஆவார்.[7]

காவல்துறை தலைமை இயக்குநர் தகுதியில் தமிழக சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராகப் பணியாற்றிய திலகவதி 2011 மார்ச் 31 ஆம் நாள் அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.[8]

மண வாழ்க்கை

முதல் திருமணம்

திலகவதி தான் பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும்பொழுது தன்னைப் பின்தொடர்ந்து வந்து தன் காதலைத் தெரிவித்த இளங்கோ என்பவரை தன் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். தனது படிப்பிற்கு தடைபோட்ட தன் மாமியாரோடு ஏற்பட்ட பிணக்கால் ஜாய்ஸ்ரேகா, பிரபுதிலக் என்னும் இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னர் மணவிலக்குப் பெற்றார்.[3]

இரண்டாவது திருமணம்

திலகவதி ஐ. பி. எஸ். தேர்வில் வெற்றி பெற்று, ஐதராபாத் நகரில் உள்ள தேசிய காவல் கழகத்தில் (National Police Academy) பயிற்சி பெற்றபொழுது உடன் பயிற்சி பெற்ற காவல் துறை அலுவலர் நாஞ்சில் குமரன் என்பவரை 1982ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார்.[1] இவர்களுக்கு திவ்யா என்னும் மகள் பிறந்தார். பின்னர் கருத்துவேற்றுமையின் காரணமாக 29.5.1987ஆம் நாள் திலகவதி தான் குமரனோடு குடும்பம் நடத்திய வீட்டிலிருந்து வெளியேறினார்.[1] பின்னர் மணவிலக்குப் பெற்றார்.[9]

படைப்புகள்

  1. வேர்கள் விழுதுகள்
  2. சமதர்மப் பெண்ணியம்
  3. மானுட மகத்துவங்கள்

நாவல்கள்

  1. கல்மரம்
  2. கனவைச் சூடிய நட்சத்திரம்
  3. ஒரு ஆத்மாவின் டயரி சில வரங்கள்
  4. உனக்காகவா நான்
  5. கைக்குள் வானம்
  6. தீக்குக் கனல் தந்த தேவி
  7. திலகவதி நாவல்கள் (தொகுப்

கவிதை

  1. அலை புரளும் கரையோரம்

சான்றடைவு

  1. http://indiankanoon.org/doc/1834716/
  2. திலகவதி ஐ.பி.எஸ்., மனது விட்டு: எனக்குள் நான்..., அவள் விகடன், 1998 நவம்பர் 1-14, பக்.48
  3. திலகவதி ஐ.பி.எஸ்., மனது விட்டு: எனக்குள் நான்..., அவள் விகடன், 1998 நவம்பர் 1-14, பக்.49
  4. இராசாராம், க. சாமானியனின் கதை, சூனியர் விகடன்
  5. http://www.tneow.gov.in/eow/ADGP_joining.html
  6. http://tamil.oneindia.in/news/2010/06/17/tamilnadu-police-thilagavathy-dgp.html
  7. இவருக்கு முன்னர் இப்பதவியை லத்திகா சரண் என்பவர் அடைந்திருக்கிறார்.
  8. http://tamil.oneindia.in/news/2011/04/01/thilagavathi-ips-retires-aid0091.html
  9. திலகவதி ஐ.பி.எஸ்., மனது விட்டு: எனக்குள் நான்..., அவள் விகடன், 1998 நவம்பர் 1-14, பக்.50-51

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.