மீ. ப. சோமு

மீ. ப. சோமசுந்தரம் (ஜூன் 17, 1921 - ஜனவரி 15, 1999 ) ஒரு தமிழ் எழுத்தாளர். மீ. ப. சோமு என்பது அவரது புனைப்பெயர். அவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். 1962ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சோமு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் பிறந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில் கீழ்த்திசையியல் படித்து வித்வான் பட்டம் பெற்றவர். இவர் புதுமைப்பித்தனின் நண்பர். 1938ல் ஆனந்த விகடன் நடத்திய சிறுகதைப் போட்டியில் வெற்றிபெற்றார். அவர் 1946ல் இளவேனில் என்ற அவரது கவிதைத் தொகுப்பு வெளியானது. அக்கவிதைத் தொகுப்பு மாநில அரசின் விருது பெற்றது. 1954 – 56களில் கல்கி தமிழ்ப் பத்திரிக்கையின் ஆசிரியராக பணி புரிந்தார். 1958 -60 களில் நண்பன் என்ற மாத இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராகப் பணியாற்றினார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அகில இந்திய வானொலியில் பணியாற்றி 1981 இல் ஓய்வு பெற்றார். அங்கு தலைமைத் தயாரிப்பாளராகவும் பண் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார். அவரது பயணக் கட்டுரை அக்கரைச்சீமையில் ஆறுமாதங்கள் 1962ன் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. அவர் எண்ணற்ற கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், ஆய்வுக் கட்டுரைகள், பயணக் கட்டுரைகள் மற்றும் இசை ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தமிழ்க்கலைக்களஞ்சியத்திலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. சோமு 1999ல் மரணமடைந்தார்.[1][2][3][4]

விருதுகள்

எழுதிய நூல்கள்

(முழுமையானதல்ல)

கவிதைகள்

  • இளவேனில்
  • குடிகாட்டு வேழமுகன் வெண்பா மாலை

சிறுகதைகள்

  • கேளாத கானம்
  • உதய குமாரி
  • மஞ்சள் ரோஜா
  • மனை மங்களம்
  • கல்லறை மோகினி
  • திருப்புகழ் சாமியார்

புதினங்கள்

  • ரவிச்சந்திரிகா
  • கடல் கண்ட கனவு
  • நந்தவனம்
  • வெண்ணிலவுப் பெண்ணரசி
  • எந்தையும் தாயும்

கட்டுரைகள்

  • கார்த்திகேயனி
  • ஐந்தருவி
  • பிள்ளையார் சாட்சி
  • நீங்காத நினைவுகள்
  • சித்தர் இலக்கியம் ( 3 பகுதிகள் )
  • நமது செல்வம்
  • அக்கரைச் சீமையில் ஆறு மாதங்கள்

சிறுகதைத் தொகுப்புகள்

  • புதுமைப்பித்தன் சிறுகதைகள் (நூல்)

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.