தமிழ்க் கலைக்களஞ்சியம் (நூல்)

தமிழ் மொழியில், தமிழர் கண்ணோட்டத்தில், தமிழர் சிந்தனைகளை உள்வாங்கிய கலைக்களஞ்சியத்தை தமிழ்க் கலைக்களஞ்சியம் எனலாம். இது தமிழின் தமிழ் வளர்ச்சிக் கழகம் முதல் கலைக்களஞ்சியத்தை சிறப்பாக குறிக்கிறது.

தமிழ்க கலைக்களஞ்சியம் பற்றிய பொதுவான தலைப்புக்கு தமிழ்க் கலைக்களஞ்சியங்கள் என்ற கட்டுரையைப் பார்க்க.
தமிழ்க் கலைக்களஞ்சியம் - தொகுதி 1

இந்திய மொழிகளில் தமிழில்தான் முதன்முதலில் இத்தகையப் பெரிய கலைக்களஞ்சியம் பத்து தொகுதிகளாக வெளிவந்தது.இதன் தொகுப்பாசிரியர் பத்மபூஷன் ம. ப. பெரியசாமித்தூரன்.[1] திருகூடசுந்தரம் துணைப் பொறுப்பாசிரியர்.

தமிழ்க் கலைக்களஞ்சிய வரலாறு

தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார் தலைமையில் தமிழ் வளர்ச்சிக் கழகம் 1947 ஆம் ஆண்டு தமிழ்க் கலைக்களஞ்சியம் ஆக்கும் பணிகளை ஆரம்பித்தது. இதற்கு 14 இலட்சம் செலவாகலாம் என்று மதிப்பிடப்பெற்று, தனியார், நிறுவன, அரச ஆதரவுடன் நிதி திரட்டப்பட்டது. பல நூறு அறிஞர்கள், பேராசிரியர்கள், பதிப்பாசிரியர்கள் பல குழுக்களாக பணி செய்து முதல் தொகுதி 1954 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் பின் ஏறக்குறைய ஆண்டுக்கொரு தொகுதியாக எஞ்சிய ஒன்பது தொகுதிகளும் வெளியிடப்பட்டன. [2]

தொகுதி 1 - 1954 ஆம் ஆண்டு - 742 பக்கங்கள்
தொகுதி 2 - 1955 ஆம் ஆண்டு - 760 பக்கங்கள்
தொகுதி 3 - 1956 ஆம் ஆண்டு - 756 பக்கங்கள்
தொகுதி 4 - 1956 ஆம் ஆண்டு - 778 பக்கங்கள்
தொகுதி 5 - 1958 ஆம் ஆண்டு - 750 பக்கங்கள்
தொகுதி 6 - 1959 ஆம் ஆண்டு - 770 பக்கங்கள்
தொகுதி 7 - 1960 ஆம் ஆண்டு - 754 பக்கங்கள்
தொகுதி 8 - 1961 ஆம்ஆண்டு - 758 பக்கங்கள்
தொகுதி 9 - 1963 ஆம் ஆண்டு - 751 பக்கங்கள்
தொகுதி 10 - 1968 ஆம் ஆண்டு - 560 பக்கங்கள்

பங்களித்தவர்கள்

  • நிர்வாகக் குழுக்கள் 5, மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 74
  • பொருட்பட்டி அமைப்புக் குழுக்கள் 21, மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 132
  • ஆய்வுக்குழுக்கள் 27, மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 66
  • கலைச்சொற் குழு 1, உறுப்பினர்கள் எண்ணிக்கை 40


ஆதாரங்கள்

  1. நினைவு அலைகள்; சாந்தா பதிப்பகம்; பக்கம் 617, 618
  2. ம. பொ. சிவஞானம். 1978 மு.ப. விடுதலைக்குப்பின் தமிழ் வளர்ந்த வரலாறு. சென்னை: பூங்கொடி பதிப்பகம்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.