தமிழ் வளர்ச்சிக் கழகம்

தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழின் முக்கிய கலைக்களஞ்சியங்கள் சிலவற்றை வெளியிட்ட ஒரு நிறுவனம். இது, 1946 ஆம் ஆண்டு சென்னை மாகாண கல்வி அமைச்சராக பணியேற்ற தி. சு. அவினாசிலிங்கம் செட்டியாரின் முயற்சியால் அமைக்கப்பட்ட நிறுவனம் ஆகும். "அரசின் கல்வி அமைச்சர்தான் அதனை துவக்கினார் என்றாலும் சுதந்திர நிறுவனமாக இயங்க அது வாய்ப்புப் பெற்றது."[1]

தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தொடக்கக் கால முக்கிய மூன்று குறிக்கோள்கள் பின்வருமாறு:

  1. தமிழில் வெளியாகும் சிறந்த நூல்களுக்கு ரொக்கப் பரிசும் பரிசுப் பத்திரமும் வழங்கி தமிழ் எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளித்தல்.
  2. ஆண்டுதோறும் வெவ்வேறு இடங்களில் தமிழ் விழா நடத்துதல்.
  3. தமிழ் மொழியில் கலைக்களஞ்சியம் தயாரித்து வெளியிடல்.

தமிழ் வளர்ச்சிக் கழக வெளியீடுகள்

ஆதாரங்கள்

  1. ம. பொ. சிவஞானம். 1978 மு.ப. விடுதலைக்குப்பின் தமிழ் வளர்ந்த வரலாறு. சென்னை: பூங்கொடி பதிப்பகம்.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.