பையா (திரைப்படம்)
பையா கார்த்தி நடித்து 2010 இல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம்
பையா | |
---|---|
![]() Release poster | |
இயக்கம் | லிங்குசாமி |
தயாரிப்பு | N. Subash Chandra Bose |
கதை | |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | மதி (ஒளிப்பதிவாளர்) |
படத்தொகுப்பு | அந்தோனி (படத் தொகுப்பாளர்) |
கலையகம் | திருப்பதி பிரதர்ஸ் |
விநியோகம் |
|
வெளியீடு | ஏப்ரல் 2, 2010 |
ஓட்டம் | 148 நிமிடங்கள் |
நாடு | இந்தியா{{{}}} |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹12 கோடிகள் ($2.4 மில்லியன்)[2] |
மொத்த வருவாய் | ₹65 கோடிகள் ($13 மில்லியன்)[2] |
கதை
நேர்முகத் தேர்வுக்காக நண்பர்களுடன் பெங்களூர் வருகிறார் கார்த்தி. அங்கு தமன்னாவை பார்த்து ஒரு தலையாக காதல் கொள்கிறார். நண்பரை அழைத்து வர, ரயில் நிலையத்துக்கு காரில் செல்கிறார் கார்த்தி. அப்போது அங்கு தவித்தபடி வருகிறார் தமன்னா. கார்த்தியை டிரைவர் என நினைத்து, ‘ரயில் டிக்கெட் தவறிவிட்டதால் சென்னையில் விட முடியுமா?’ என கேட்கிறார் தமன்னாவின் உறவினர். தமன்னாவுக்காக ஓகே சொல்கிறார் கார்த்தி. வழியில் பெட்ரோல் போடுவதற்காக உறவினர் இறங்குகிறார். அந்த நேரம் பார்த்து, உறவினரிடமிருந்து காப்பாற்றி, தன்னை மும்பைக்கு அழைத்து செல்லும்படி தமன்னா கெஞ்சுகிறார். உடனே உறவினருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தமன்னாவுடன் தப்பிக்கிறார் கார்த்தி. தமன்னாவை தேடி ஒரு ரவுடி கூட்டம் பின் தொடர்கிறது. அதே போல முன்விரோதம் காரணமாக, கார்த்தியை துரத்துகிறது இன்னொரு ரவுடி கூட்டம். அவர்களிடமிருந்து இருவரும் தப்பித்து இறுதியில் இணைந்தார்களா? இல்லையா? என்பதே இப்படத்தின் சுவாரஸ்யமான கதை.
மேற்கோள்கள்
- Moviebuzz (2010). "Paiyya - Big summer release!". சிஃபி. பார்த்த நாள் 2010-03-07.
- "Half-year BO report:Suriya rules Tamil". ரெடிப்.காம் (2010-06-23). பார்த்த நாள் 2010-06-23.
யுவன்னின் இசை இப்படத்திற்கு பலம்