ரஜினி முருகன்

ரஜினி முருகன் (ஆங்கில எழுத்துரு: Rajini Murugan) என்பது 2016ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். லிங்குசாமிக்கு சொந்தமான திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி ஆகியோர் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.[1]

ரஜினி முருகன்
சுவரொட்டி
இயக்கம்பொன் ராம்
தயாரிப்புஎன். சுபாஷ் சந்திரபோஸ்
லிங்குசாமி
கதைபொன் ராம்
இசைடி. இமான்[1]
நடிப்புசிவகார்த்திகேயன்
கீர்த்தி சுரேஷ்
சூரி
ஒளிப்பதிவுபாலசுப்ரமணியம்[1]
படத்தொகுப்புவிவேக் அர்சன்
கலையகம்திருப்பதி பிரதர்ஸ்
விநியோகம்ஈராஸ் இன்டர்நேசனல்[1]
வெளியீடுசனவரி 14, 2016 (2016-01-14) [2]
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு150 மில்லியன்
(US$2.12 மில்லியன்)
மொத்த வருவாய்850 மில்லியன்
(US$11.99 மில்லியன்)

நடிகர்கள்

கதைச்சுருக்கம்

ரஜினி முருகன் (சிவகார்த்திகேயன்) மதுரையை சேர்ந்த ஒரு வேலையில்லா இளைஞர் . அவர் தினமும் வெகுளித்தனமாக தனது நண்பர் தோத்தாத்திரியுடன் (சூரி) சுற்றிக்கொண்டிருப்பார். தினமும் தனது தாத்தாவுக்கு(ராஜ்கிரண்) உணவு கொடுப்பதே ரஜினிமுருகனின் ஒரே வேலை. அவரது தாத்தா ஐயங்காளை அந்த ஊரிலேயே நிறைய சொத்துள்ள மிகவும் மதிக்க படுகின்ற ஒரு மாமனிதன். ஐயங்காளை அவரது சொத்துக்களை தனது பிள்ளைகள் அனைவருக்கும் பிரித்து தர விரும்பினாலும் ரஜினிமுருகனின் தந்தையை (மல்லிகராஜன்) தவிர மற்ற மக்கள் அனைவரும் வெளிநாடுகளில் குடியிருந்துகொண்டு மதுரை பக்கமே வராமல் இருந்தார்கள்.

ஒரு ஜோதிடரின் கணிப்பைக் கேட்டுவிட்டு தனது குழந்தை பருவத்திலிருந்து நேசித்த கார்த்திகா தேவியை (கீர்த்தி சுரேஷ்) கவர முயற்சிக்கிறார். கார்த்திகா தேவியின் தந்தை ஒரு மிக பெரிய ரஜினிகாந்த் ரசிகர் மற்றும் மல்லிகராஜனின் நெருங்கிய நண்பராக இருந்தார்.அவர் தான் ரஜினிமுருகனுக்கு அந்த பெயரை வைத்தார். அனால் ஒரு சிறிய மனஸ்தாபத்தால் இருவரின் குடும்பமும் பிரிந்தது. அந்த சம்பவதிலிருந்து இருவரின் குடும்பமும் பேசிக்கொள்ளாமல் இருந்தனர்.

ஏழரைமூக்கன்(சமுத்திரக்கனி), அந்த ஊரில் ஒரு குண்டர் படையை வைத்து பெரிய வியாபாரிகளிடமிருந்து ஒரு லட்சம் பணம் பறித்துக்கொண்டிருந்தான். அதை ரஜினிமுருகனிடம் முயற்சி செய்யும் பொழுது தோல்வியுற்று அவன் பணத்தை இழந்தான். அந்தப் பணத்தைத் திரும்பி பெறுவதற்காக அவன் செய்யும் அக்ரமங்களை எல்லாம் எப்படி சமாளித்து அவனுக்கு அவமானத்தைத் தருகின்றனர் என்பதே இக்கதை. இந்த கதையில் நிறைய திருப்பங்களை எதிர்பார்க்கலாம்.

மேற்கோள்கள்

  1. Ramchander (19 March 2014). Sivakarthikeyan's Next Film - 'Rajini Murugan'. Oneindia Entertainment. Retrieved 21 August 2014.
  2. "Sivakarthikeyan's Rajini Murugan Movie Release Date". webgalatta.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.