சிலம்பரசன்
சிலம்பரசன் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய டி. ராஜேந்தரின் மகனாவார்.[1] இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2] 2002இல் முதல் முறையாக விஜய டி. ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார்.[2] 2006ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருதை கொடுத்துக் கௌரவித்துள்ளது.[3]
சிலம்பரசன் | |
---|---|
![]() | |
பிறப்பு | பெப்ரவரி 3, 1983![]() |
வேறு பெயர் | சிம்பு |
தொழில் | நடிகர், பின்னணிப்பாடகர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர் |
நடிப்புக் காலம் | 1987-1995;2002-தற்போது |
விருதுகள்
- பெருமை
- கலைமாமணி விருது தமிழ்நாடு அரசு (2006)[4]
- விருதுகள்
- ஐடிஎப்ஏ சிறந்த விருது - வானம் (திரைப்படம்) (2011)
- சிறந்த நடிகருக்கான எடிசன் விருது - விண்ணைத்தாண்டி வருவாயா (2010)
- பிக் எப்எம் தமிழ் பொழுதுபோக்கு விருதுகள் – சிறந்த பொழுதுபோக்குனருக்கான விருது விண்ணைத்தாண்டி வருவாயா (2010)
- இசையருவி தமிழ் இசை விருது - வேர் இஸ் த பார்டி - சிலம்பாட்டம் (2009)
- இசையருவி தமிழ் இசை விருது - சிறந்த நடனர் - சிலம்பாட்டம் (2009)
- பரிந்துரைகள்
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2002 | காதல் அழிவதில்லை | சிம்பு | |
2003 | தம் | சத்யா | |
அலை | ஆதி | ||
கோவில் | சக்திவேல் | ||
2004 | குத்து | குருமூர்த்தி | |
மன்மதன் | மதன்குமார், மதன்ராஜ் | இத்திரைபடத்தின் திரைகதையை இவரே எழுதினார் | |
2005 | தொட்டி ஜெயா | ஜெயச்சந்திரன் | |
2006 | சரவணா | சரவணா | |
வல்லவன் | வல்லவன் | ||
2008 | காளை (திரைப்படம்) | ஜீவா | |
சிலம்பாட்டம் (திரைப்படம்) | தமிழ்ழரசன், விச்சு | ||
2010 | விண்ணைத்தாண்டி வருவாயா | கார்த்திக் | தெலுங்கு பதிப்பில் கெளரவ வேடம் |
கோவா (திரைப்படம்) | மனமதன் | ||
2011 | வானம் | கேபிள் ராஜா | |
ஒஸ்தி | வேல்முருகன் | ||
2012 | போடா போடி | அர்ஜுன் | |
2015 | வாலு | சார்ப் | |
2015 | இது நம்ம ஆளு | சிவா | |
அச்சம் என்பது மடமையடா | ரஜினிகாந்த் | ||
காண் | படப்பிடிப்பில் | ||
2016 | வேட்டை மன்னன் | படப்பிடிப்பில் | |
மேற்கோள்கள்
- சிவா (ஆகத்து 5, 2011). "டி.ஆர்., சிம்பு மீது கொலை மிரட்டல் புகார் கொடுத்த திரைப்பட வினியோகஸ்தர்!". ஒன் இந்தியா. பார்த்த நாள் நவம்பர் 11, 2012.
- "சிம்பு". மாலை மலர். பார்த்த நாள் நவம்பர் 11, 2012.
- "சிலம்பரசன் ராசேந்திரன்". சினி உலா. பார்த்த நாள் நவம்பர் 11, 2012.
- "Simbu, Trisha, Vishal win award". behindwoods. பார்த்த நாள் 22 December 2011.
- "Vijay Awards 2011: List of Nominations". News365today. பார்த்த நாள் 22 December 2011.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.