ஆர். ஜே. பாலாஜி
ஆர்.ஜே.பாலாஜி (இயற்பெயர்: பாலாஜி பட்டுராஜ்) சென்னையை சேர்ந்த வானொலி ஒலிபரப்பாளர், பாலாஜி பெற்றோர் ராஜேஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்கள்,ஆர்.ஜே.பாலாஜி தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர் பிக் எப்.எம் 92.7ல் ஒலிபரப்பான டேக் இட் ஈசி மற்றும் கிராஸ் டாக் (தற்போது இல்லை) போன்ற நிகழ்ச்சிகளினால் பெரிதும் அறியப்படுகிறார். இவர் தீயா வேலை செய்யனும் குமாரு (2013) மற்றும் வடகறி (2014) ஆகிய திரைபடங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி | |
---|---|
![]() | |
பிறப்பு | பாலாஜி பட்டுராஜ்[1] 20 ஜூன் 1985 |
தேசியம் | இந்தியா |
மற்ற பெயர்கள் | கிராஸ் டாக் பாலாஜி [2] |
இனம் | தமிழர் |
பணி | வானொலி ஒலிபரப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 2006-தற்போது வரை |
திரைப்படங்களில்
வருடம் | திரைப்படம் | கதாபாத்திரம் |
---|---|---|
2013 | புத்தகம் | குரல் மட்டும் |
2013 | எதிர்நீச்சல் | அவராகவே |
2013 | தீயா வேலை செய்யனும் குமாரு | கர்ணா |
2014 | வல்லினம் | நிகழ்ச்சி தொகுப்பாளர் |
2014 | வாயை மூடி பேசவும் | அவராகவே |
2014 | வடகறி | வடகறி என்னும் கரிகாலன் |
மேற்கோள்கள்
- "Students' website on villages gives solutions to local issues". தி இந்து. 18 திசம்பர் 2011. http://www.thehindu.com/news/cities/chennai/article2725980.ece. பார்த்த நாள்: 10 மே 2013.
- Anusha Parthasarathy (2012-05-24). "Making waves". தி இந்து. பார்த்த நாள் 2013-11-07.
வெளி இணைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஆர். ஜே. பாலாஜி
- Sound Cloud தளத்தில் ஆர்.ஜே.பாலாஜி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.