வசுந்தரா தேவி
வசுந்தரா தேவி (Vasundhara Devi, 1917 - செப்டம்பர் 7, 1988)[1] தென்னிந்தியத் திரைப்பட நடிகையும், பரதநாட்டியக் கலைஞரும், கருநாடக இசைப் பாடகியும் ஆவார்.[2] இவர் பின்னாளில் பிரபலமான நடிகை வைஜெயந்திமாலாவின் தாயார் ஆவார்.[3]
வசுந்தரா தேவி | |
---|---|
![]() வசுந்தராதேவியும் ரஞ்சனும் மங்கம்மா சபதத்தில் (1943) | |
பிறப்பு | வசுந்தரா தேவி 1917 சென்னை, இந்தியா |
இறப்பு | செப்டம்பர் 7, 1988 (அகவை 70–71) |
பணி | நடிகை, நடனக் கலைஞர் |
வாழ்க்கைத் துணை | எம். டி. ராமன் |
பிள்ளைகள் | வைஜெயந்திமாலா |
வசுந்தரா 1941 ஆம் ஆண்டில் ரிஷ்யசிருங்கர் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.[2] 1943 இல் வெளியான மங்கம்மா சபதம் திரைப்படத்தில் மங்கம்மாவாக நடித்துப் புகழ் பெற்றார்.[2] வசுந்தராதேவியும், மகள் வைஜயந்திமாலாவும் இணைந்து பைகாம் (1959) என்ற இந்தித் திரைப்படத்திலும், அதன் தமிழ் மொழிபெயர்ப்பான இரும்புத்திரை திரைப்படத்திலும் நடித்தனர்.
வசுந்தரா எம். டி. ராமன் என்பவரைத் திருமணம் செய்தார். இவர்கள் பின்னர் மணமுறிப்பு செய்தனர். வசுந்தராதேவி 1988 செப்டம்பர் 7 இல் மறைந்தார்.
நடித்த திரைப்படங்கள்
- ரிஷ்யசிருங்கர், 1941
- மங்கம்மா சபதம், 1943
- நாட்டிய ராணி 1949
- இரும்புத்திரை, 1960
மேற்கோள்கள்
- வைஜெயந்திமாலா (2007). Bonding... A Memoir. Stella Publishers. http://books.google.co.in/books?id=vkKYzRKeV7IC&pg=PT17&dq=vyjayanthimala+vasundhara+devi+born&hl=en&sa=X&ei=nKP3UpnLE4ulrQeH6ICADg&ved=0CCoQ6AEwAA#v=onepage&q=vyjayanthimala%20vasundhara%20devi%20born&f=false. பார்த்த நாள்: 16 சனவரி 2016.
- ராண்டார் கை (2007-11-23). "blast from the past". தி இந்து. http://www.hindu.com/cp/2007/11/23/stories/2007112350421600.htm. பார்த்த நாள்: 2011-04-13.
- "வாள் வீச்சில் புகழ் பெற்ற ரஞ்சன்: இந்திப் படங்களிலும் வெற்றிக் கொடி நாட்டினார்". மாலை மலர். 27 பெப்ரவரி 2011. http://www.maalaimalar.com/2011/02/11141603/history-of-ranjan.html.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.