பிரபாஸ்
பிரபாஸ் இராஜூ உப்பலபட்டி (பிறப்பு 23 அக்டோபர் 1979),[1] என்பவர் தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். இவர் தெலுங்கு திரைப்படத் துறையின் முன்னணி நடிகர்களுள் ஒருவர். வர்ஷம் என்ற 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் மூலம் இவர் புகழடைந்தார். மிர்ச்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர். பெர்ஃபெக்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது வெற்றிப் படங்கள். இவர் தமிழில் நடித்த பாகுபலி, மற்றும் பாகுபலி 2 படமானது இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது.[2]
பிரபாஸ் | |
---|---|
![]() | |
இயற் பெயர் | பிரபாஸ் இராஜூ உப்பலபட்டி |
பிறப்பு | அக்டோபர் 23, 1979 சென்னை, தமிழ்நாடு, இந்தியா ![]() |
வேறு பெயர் | Young Rebel Star, Darling, Mr. Perfect |
தொழில் | நடிகர் |
நடிப்புக் காலம் | 2002 முதல் |
உறவினர் | Krishnam Raju (Paternal uncle) |
இணையத்தளம் | www.darlingprabhas.com |
திரைப்படங்கள்
ஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2002 | ஈஸ்வர் | ஈஸ்வர் | தெலுங்கு | |
2003 | ராகவேந்திரா | ராகவேந்திரா | தெலுங்கு | |
2004 | வர்ஷம் | வெங்கட் | தெலுங்கு | |
2004 | அடவி ராமுடு | ராமுடு | தெலுங்கு | |
2005 | சக்ரம் | சக்ரம் | தெலுங்கு | |
2005 | சத்ரபதி | சத்ரபதி | தெலுங்கு | |
2006 | பௌர்ணமி | சிவ கேசவா | தெலுங்கு | |
2007 | யோகி | யோகி | தெலுங்கு | |
2007 | முன்னா | முன்னா | தெலுங்கு | |
2008 | புஜ்ஜிகாடு | லிங்கராஜு (புஜ்ஜி) | தெலுங்கு | |
2009 | பில்லா | பில்லா | தெலுங்கு | |
2009 | ஏக் நிரஞ்சன் | சோட்டு | தெலுங்கு | |
2010 | டார்லிங் | பிரபாஸ் | தெலுங்கு | |
2011 | மிஸ்டர் பர்ஃபெக்ட் | விக்கி | தெலுங்கு | |
2012 | ரிபெல் | ரிசி | தெலுங்கு | |
2013 | மிர்ச்சி | ஜெய் | தெலுங்கு | |
2015 | பாகுபலி | பாகுபலி, சிவு | தமிழ், தெலுங்கு | |
2017 | பாக்மதி | - | தெலுங்கு | குணச்சித்திர தோற்றம் |
2017 | பாகுபலி 2 | பாகுபலி, சிவு | தமிழ், தெலுங்கு | |
2017 | சாஹோ | தெலுங்கு | - |
சான்றுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.