விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி (16 சனவரி 1978) தமிழ் திரைப்பட நடிகர். தமிழ்நாடு இராசபாளையத்தில் பிறந்த இவர் தன் தொழில் வாழ்க்கையை கணக்காளராகத் தொடங்கினார். கணக்காளர் பணி பிடிக்காததால் நடிப்புப் பணியை தேர்ந்தெடுத்தார். 2010இல் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் முன்னணி கதை மாந்தராக நடிக்கும் வரை 5 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் சிறு வேடங்களில் நடித்தார். இவர் பீட்சா (2012), நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் (2012) போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது சன் தொலைக்காட்சியில் நம்ம ஊரு ஹீரோ இன்னும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்

விஜய் சேதுபதி
தாய்மொழியில் பெயர்தமிழ்: விஜய் சேதுபதி
பிறப்புவிஜய குருநாத சேதுபதி
16 சனவரி 1978 (1978-01-16)
இராசபாளையம், விருதுநகர் மாவட்டம்
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்விஜய் சேதுபதி
பணிநடிகர் தயாரிப்பாளர் பாடகர் நிகழ்ச்சி தொகுப்பாளர் பாடலாசிரியர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2004 - தற்போது வரை[1]

வாழ்க்கைக் குறிப்பு

தொடக்ககால வாழ்க்கை

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் பிறந்த இவர் தன் படிப்பை விருதுநகர் மாவட்டத்திலும், சென்னையிலும் மேற்கொண்டார். பள்ளியில் தான் சராசரிக்கும் கீழான மாணவன் என்றும் விளையாட்டிலும் பாடத்திட்டம் சாரா நிகழ்வுகளிலும் தனக்கு நாட்டம் இருந்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இளநிலை வணிகவியலில் பட்டம் பெற்று 3 ஆண்டுகள் துபாயில் கணக்காளராக பணி புரிந்தார். அவ்வேலை பிடிக்காததால் 2003இல் இந்தியாவுக்குத் திரும்பினார். நிழல்படக்காரர் ஒருவர் இவரின் முகம் நிழல்படங்களில் அழகாக தெரியக்கூடிய ஒன்று என்று சொன்னது இவர் நடிப்புத்துறையை தேர்ந்தெடுக்க உந்துதலாக இருந்தது என்று கூறியுள்ளார்.

திரை வாழ்க்கை

இவர் கூத்துப்பட்டறையில் கணக்காளராக பணியில் சேர்ந்தார். அங்கு நடிகர்களை அருகில் இருந்து அவதானிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக கூறியுள்ளார். இவர் பெண் என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்தார். கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்காக பல குறும்படங்களில் நடித்துள்ளார். பீட்சா பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து பல குறும்படங்களில் பணியாற்றியுள்ளார். சிறந்த நடிகருக்கான விருதை நார்வே குறும்பட தமிழ்த் திரைப்பட விழாவில் பெற்றார்.

இயக்குநர் செல்வராகவன் புதுப்பேட்டை படத்துக்கு திறன் தேர்வு வைத்ததில் கலந்து கொண்டு தனுசுக்கு நண்பனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதைத்தொடர்ந்து தமிழ்-கன்னட இரு மொழிப்படமான அகண்ட என்பதின் தமிழ் பதிப்பில் முன்னணி கதை மாந்தராக நடித்தார், கன்னட பதிப்பில் எதிர்மாறான கதை மாந்தராக நடித்தார். இப்படம் திரைக்கு வரவில்லை. பின்பு பிரபு சாலமனின் லீ திரைப்படத்திலும் சுசீந்திரனின் வெண்ணிலா கபடிக் குழு, நான் மகான் அல்ல என்ற திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். இயக்குநர் சுசீந்திரனே முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து தன் கனவு மெய்ப்பட காரணமாக இருந்தவர் என்று கூறினார். சுசீந்திரன் இவரை தென்மேற்கு பருக்காற்று இயக்குநர் சீனு இராமசாமியிடம் அறிமுகப்படுத்தினார். பின்பு, சீனு ராமசாமி விஜய் சேதுபதிக்கு அப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரம் வழங்கினார்.

2012ல் இவர் நடித்த மூன்று திரைப்படங்களும் வணிகரீதியாக பெருவெற்றி பெற்றன. சுந்தரபாண்டியனில் இவர் கதைநாயகனுக்கு எதிரியாக நடித்திருந்தார். கார்த்திக் சுப்புராஜின் பீட்சா படத்திலும் பாலாஜி தரணிதரனின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திலும் முன்னணி கதை மாந்தராக நடித்தார். நளன் குமரசாமியின் சூது கவ்வும் என்ற படத்திலும் முன்னணி கதை மாந்தராக நடித்தார். பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தில் நடித்துள்ளார்.

தர்மதுரையில் ‘மக்க கலங்குதப்பா’ நடனம், எப்பொழுது டிவியில் ஒளிபரப்பப் பட்டாலும் பார்க்கிற ரசிகர்கள் ஏராளம். அத்தனை எதார்த்தமாக, தனது பாணியில் ஆடியிருப்பார்.[2]

படப்பட்டியல்

ஆண்டு திரைப்படம் பாத்திரத்தின் பெயர் இயக்குநர் இசை அமைப்பாளர் குறிப்புகள்
2004எம். குமரன் தா/பெ மகாலஷ்மி Uncredited extra
2006புதுப்பேட்டை
2007லீ
2009வெண்ணிலா கபடிகுழு
2010நான் மகான் அல்லகணேஷ்
2010தென்மேற்கு பருக்காற்றுமுருகன்
2011வர்ணம்முத்து
2012சுந்தரபாண்டியன்ஜெகன்
2012பீட்சாமைக்கேல் கார்த்திகேயன் பிக் எப் எம்மின் சிறந்த பொழுதுபோக்கு படத்தின் நடிகர்
2012நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்பிரேம் குமார் சிறந்த வளரும் நடிகருக்கான எடிசன் விருது
2013சூது கவ்வும்தாஸ்
2013இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா?மனோஜ் குமார்
2014ரம்மிஜோசப்
2014பண்ணையாரும் பத்மினியும்முருகேசன்
2014 ஜிகர்தண்டாஅவராகவே சிறப்பு தோற்றம்
2014கதை திரைக்கதை வசனம் இயக்கம்அவராகவே சிறப்பு தோற்றம்
2014திருடன் போலீஸ் விநாயகம் பாடலுக்கு சிறப்பு தோற்றம்
2014வன்மம் (திரைப்படம்)ராதாகிருஷ்ணன் (ராதா)
2014ஆரஞ்சு மிட்டாய்
2014இடம் பொருள் ஏவல்பாண்டி தயாரிப்புக்கு பிந்தைய பணியில் உள்ளது [3]
2015புறம்போக்குயமலிங்கம்
2015மெல்லிசை (திரைப்படம்)கதிர் தயாரிப்புக்கு பிந்தைய பணியில் உள்ளது
2015நானும் ரவுடி தான்பாண்டியன்
2016சேதுபதிகா.சேதுபதி
2016காதலும் கடந்து போகும்கதிர்
2016இறைவிமைக்கேல்
2016தர்மதுரைதர்மதுரை சீனு ராமசாமி யுவன் சங்கராஜா
2016றெக்கசிவா சிவ ஞானம் டீ. இமான்
2016ஆண்டவன் கட்டளை (2016)காந்தி எம். மணிகண்டன் கே
2017கவண்திலக் கே. வி. ஆனந்த் கிப்கொப் தமிழா
2017விக்ரம் வேதாவேதா புஸ்கர் , காயத்ரி சாம் எஸ்.சி
2017புரியாத புதிர்கதிர் ரஞ்சித் ஜெயகூடி சாம் எஸ்.சி
2017 கருப்பன் கருப்பன் ஆர். பன்னீர் செல்வம் டீ. இமான்
2018ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்எமன் ஆறுமுக குமார் ஜஸ்டின் பிரபாகரன்
2018சீதக்காதிஐயா ஆதிமூலம் என்ற நடிகர், கருப்பன் பாலாசி தரணிதரன் கோவிந்த் வசந்த்
குறும்படங்கள்
  • நீர்
  • துரு
  • பெட்டி கேசு
  • ராவணம்
  • காற்று
  • வின்ட்
  • தி ஏஞ்சல்
  • காதலித்து பார்

மேற்கோள்கள்

  1. http://articles.timesofindia.indiatimes.com/2012-12-17/news-interviews/35867844_1_tamil-films-short-films-film-institute
  2. "விஜய் சேதுபதி!". Vikatan. 10 August 2017. http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/77899-vijay-sethupathi-birthday-special-article.html. பார்த்த நாள்: 10 August 2017.
  3. "'Idam Porul Eval' shooting wrapped". The Times of India (Aug 27, 2014).

வெளியிணைப்புகள்

மைக்கேல், கைலாசம், பாண்டி... எந்தக் கதாபாத்திரத்திலும் கலக்கும் விஜய் சேதுபதி!

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.