ஜிகர்தண்டா (திரைப்படம்)

ஜிகர்தண்டா (ஆங்கிலம்: Jigarthanda) 2014ம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ் திரைப்படமாகும். தயாரிப்பாளர் கதிரேசனின் தயாரிப்பில் சித்தார்த், லட்சுமி மேனன் ஆகியோர் நடித்த[1], இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்[2]. தமிழ்நாட்டிலுள்ள மதுரையை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்திற்கான படப்படிப்பு, 2013ம் ஆண்டு சூன் மாதம் 12 ஆம் நாள் மதுரையில் தொடங்கியது[3]. இப்படத்தின் முன்னோட்டம் 2014ம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் நாள் வெளியிடப்பட்டது. 2014ம் ஆண்டு ஆகத்து மாதம் 1ம் நாள் திரைக்கு வந்தது.

ஜிகர்தண்டா
இயக்கம்கார்த்திக் சுப்புராஜ்
தயாரிப்புகதிரேசன்
கதைகார்த்திக் சுப்புராஜ்
இசைசந்தோஷ் நாராயணன்
நடிப்பு
ஒளிப்பதிவுகேவ்மிக் யுரே
படத்தொகுப்புவிவேக் அர்சன்
விநியோகம்சன் பிக்சர்ஸ்
வெளியீடுஆகஷ்ட் 2014
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்30 கோடி
(US$4.23 மில்லியன்)

கதைச்சுருக்கம்

மதுரையில் வாழும் ரவுடியான ‘அசால்ட்’ சேது என்வரின் வாழ்க்கையை அவருக்குத் தெரியாமலே அறிந்துகொண்டு, அந்தக் கதையை படமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார் இயக்குநர் கார்த்திக் சுப்ரமணி. ஒரு கட்டத்தில் இயக்குநரிடம் தனது கதையை தானே முன்வந்து கூறும் சேது, அந்தப் படத்தில் தானே நடிப்பதாக நிபந்தனை விதிக்கிறார். இதை மறுக்கமுடியாமல் இயக்குநர் வேறு வழியின்றி படத்தை எடுத்து முடிக்கிறார். படம் வெளியாகி வெற்றிபெறுகிறது. ஆனால் படத்தில் சேதுவை ஒரு ரவுடியாக சித்திரிக்காமல், அவரை ஒரு அட்டக்கத்தியாக காட்டி நகைச்சுவை பாத்திரமாக்கி விடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்தியை கொல்லத் துடிக்கிறார். ஆனால் பின்னர் ஏற்படும் மன மாற்றத்தால் அவர் தன் ரவுடி தொழிலைக் கைவிட்டு கதாநாயகன் ஆகிறார். அதே சமயம் அதை இயக்கிய இயக்குநரான கார்த்திக்கோ முன்னணிக் கதாநாயகனின் படத் தேதியை கத்திமுனையில் வாங்கி படத்தை எடுக்கும் ரவுடியாக மாறிவிடுகிறார்.

நடிப்பு

மேற்கோள்கள்

  1. "மதுரையை நோக்கி சித்தார்த்தும், லட்சுமி மேனனும்". டைம்ஸ் ஆப் இந்தியா. பார்த்த நாள் 2014-02-09.
  2. "பீட்சாவிற்கு அடுத்ததாக ஜிகர்தண்டா". டைம்ஸ் ஆப் இந்தியா. பார்த்த நாள் 2014-02-09.
  3. "பீட்சாவிற்கு அடுத்ததாக, கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா!". Sify.com. பார்த்த நாள் 2014-02-09.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.