தனுசு (சோதிடம்)

தனுசு (Sagittarius; ) என்பது தனுசு விண்மீன் தொகுப்பில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட இராசி மண்டலத்தின் ஒன்பதாவது சோதிட இராசி ஆகும். இது விண்ணின் 240 முதல் 270 பாகைகளை குறிக்கும் (240°≤ λ <270º).[1]

Sagittarius
சோதிட குறியீடுArcher
விண்மீன் குழாம்Sagittarius
பஞ்சபூதம்Fire
சோதிட குணம்Mutable
ஆட்சிJupiter
பகைMercury
உச்சம்South Node, Chiron (questionable)
நீசம்North Node, Ceres (questionable)

மேற்கத்திய சோதிடத்தில் சூரியன் நிலநடுக்கோட்டை கடந்துச் செல்லும் காலத்தின் அச்சு சுழற்சியின் விளைவாக விண்மீன் தொகுப்புடன் இந்த இராசி வரிசைப்படுத்தப்படவில்லை. தனுசு இராசியானது "ஆண் தன்மை" கொண்ட நேர்மறையான (பரந்த மனப்பான்மை கொண்ட) இராசியாகக் கருதப்படுகிறது. தனுசானது வியாழன் கோளினால் ஆளப்படுகிறது. இராசி மண்டலத்தின் ஒன்பதாவது இராசியாக இருப்பதால் இது சோதிடத்தின் ஒன்பதாவது வீட்டுடன் தொடர்புடையதாக இருக்கிறது. சூரியன் இந்த இராசியில் இருக்கும்போது பிறந்தவர்கள், தனுசு இராசியில் பிறந்தவர்கள் எனக் கருதப்படுவர்.

மாதம்

மார்கழி மாதம் தனுசுக்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் டிசம்பர் மாத பிற்பாதியும், சனவரி மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது.

மேற்கத்திய சோதிடம்

மேற்கத்திய சோதிட நூல்களின்படி நவம்பர் 22 முதல் டிசம்பர் 21 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை சிலை ராசியினர் என்று அழைப்பர்.[2]

கோள்

இந்த இராசிக்கான அதிபதி வியாழன் என்றும் உரைப்பர்.[3]

உசாத்துணை

  1. Greenwich, Royal Observatory. "Equinoxes and solstices". ROG learning team. பார்த்த நாள் 4 டிசம்பர் 2012.
  2. Oxford Dictionaries. "Saggitarian". Definition. Retrieved on: 17 ஆகஸ்ட் 2011.
  3. Heindel, பக். 81.

மூலம்

  • Heindel, Max (1919), Simplified Scientific Astrology: A Complete Textbook on the Art of Erecting a Horoscope, with Philosophic Encyclopedia and Tables of Planetary Hours (4 ed.), Rosicrucian Fellowship, OCLC 36106074

புற இணைப்புகள்


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.