தனுசு (விண்மீன் குழாம்)

தனுசு விண்மீன் குழாம் (Sagittarius constellation) என்பது இராசிச் சக்கரத்தில் உள்ள ஒரு விண்மீன் குழாம் ஆகும்.இது 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வானியலாளர் தொலெமி பட்டியலிட்ட 48 விண்மீன் குழாமத்திலும் மற்றும் 88 நவீன விண்மீன் குழாமத்தின் பட்டியலிலும் இடம்பெருகிறது. ஆங்கிலத்தில் Sagittarius என்ற பெயர் தமிழ் மொழியில் வில்வித்தை என்பதை குறிக்கும். இதன் குறியீடு (ஒருங்குறி U+2650 ♐) ஒரு அம்பின் குறி ஆகும். பொதுவாக, மனித முகத்தையும் குதிரை உடலையும் உடைய ஒரு மனிதன் வில்லில் அம்பைத் தொடுத்த நிலையிளுள்ள உருவம் உருவமை செய்யப்படும்.இது விருச்சிக விண்மீன் குழாமத்திற்கும் மற்றும் பாம்பைச் சுமந்த செல்பவர் விண்மீன் குழாமத்திற்கும் இடைப்பட்ட பகுதிக்கு மேற்கேயும் மகர விண்மீன் குழாமத்திற்கு கிழக்கேயும் அமைந்துள்ளது.

Sagittarius
{{{name-ta}}}
விண்மீன் கூட்டம்
{{{name-ta}}} இல் உள்ள விண்மீன்கள்
சுருக்கம்தனுசு
அடையாளக் குறியீடு வில்வித்தை வீரன்
வல எழுச்சி கோணம்19 h
நடுவரை விலக்கம்−25°
கால்வட்டம்SQ4
பரப்பளவு867 sq. deg.
முக்கிய விண்மீன்கள்12, 8
பேயர்/ஃபிளேஸ்டெட் குறியீடு
68
புறவெளிக் கோள்களுடைய விண்மீன்கள்32
> 3.00m ஒளிமிகுந்த விண்மீன்கள்7
10.00 பார்செக் தூரத்திற்குள் உள்ள விண்மீன்கள்2
ஒளிமிகுந்த விண்மீன்ε தனுசு (1.79m)
Messier objects15
Visible at latitudes between +55° and −90°.
ஆகஸ்ட் மாதத்தில் 21:00 (மாலை 9.00) மணிக்கு தெளிவாகக் காணலாம்.

கருதிப்பார்த்தல்

தேனீர்க்கெண்டியின் அமைப்பு.

வடக்கு அரைக்கோளப் பகுதியைப் பார்க்கும் போது, தனுசு விண்மீன் குழாமத்தின் பிரகாசமான வீண்மீன்கள் கூட்டம் தேனீர்க்கெண்டி (Teapot) உருவம் ஒன்றை உருவாக்கும். δ தனுசு , ε தனுசு, ζ தனுசு, மற்றும் φ தனுசு ஆகிய வீண்மீன்கள் தேனீர்க்கெண்டியின் உடல் அமைப்பை உருவத்தை உருவாக்கும்; λ தனுசு தேனீர்க்கெண்டியின் மூடி அமைப்பையும்; γ2 தனுசு தேனீர்க்கெண்டியின் முனை அமைப்பையும்; மற்றும் σ தனுசு மற்றும் τ தனுசு ஆகிய வீண்மீன்கள் தேனீர்க்கெண்டியின் கைப்பிடி அமைப்பை உருவத்தை உருவாக்கும்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.