வடிவுக்கரசி
வடிவுக்கரசி (பிறப்பு: சூலை 7, 1962)[1] ஒரு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் மற்றும் 10 தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.[2][3] இவர் நடித்த முதல் தமிழ்த் திரைப்படம் கன்னிப் பருவத்திலே. இத்திரைப்படத்தில் இவர் நடிகர் ராஜேஷுடன் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தொடக்கக் காலங்களில் கதாநாயகியாகவும், பின்னர் முன்னணி நடிகர்கள் பலருடனும் தாய், சகோதரி போன்ற கதாபாத்திரங்களும் ஏற்று நடித்திருக்கிறார். மேலும், சில திரைப்படங்களில் எதிர்மறையான பாத்திரங்களும் ஏற்று நடித்து உள்ளார். இவர் முன்னாள் இயக்குநர் ஏ. பி. நாகராஜனின் உறவினர் ஆவார்.
வடிவுக்கரசி | |
---|---|
பிறப்பு | 7 சூலை 1962 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகை |
செயல்பட்ட ஆண்டுகள் | 1978 - தற்போது வரை |
சமயம் | இந்து |
பிள்ளைகள் | பத்ம பிரியா |
மேற்கோள்கள்
- http://www.celebrityborn.com/biography/vadivukkarasi/9982
- S. R. Ashok Kumar (December 17, 2009). "Grill Mill-Vadivukkarasi". தி இந்து. Archived from the original on September 12, 2012. https://archive.is/5aCF.
- http://www.cinesouth.com/masala/appo/14062006.shtml
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.