மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன்

மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் (ஆகஸ்ட் 7, 1925, கும்பகோணம், தமிழ்நாடு, இந்தியா) [1] இந்தியாவின் சிறந்த உயிரியல் சூழலியல் அறிவியலாளர்களில் ஒருவர். இவர் எம்.எஸ் சுவாமிநாதன் என்று பொதுவாக அறியப்படுகிறார். இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை என்று பரவலாக அறியப்பட்டவர்.

இவரின் பெயரில் அமைந்த எம். எஸ். சுவாமிநாதன் ஆய்வு நிறுவனம் (MS Swaminathan Research Foundation) என்னும் நிறுவனத்தின் அமைப்பாளரும் இவரே.[2]

வாழ்க்கையும், கல்வியும்

இவர் பிறந்தது குடந்தையில். பள்ளிப்படிப்பு முடித்த பின்னர், திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டத்தையும், கோவை வேளாண் பள்ளியில் (தற்போது வேளாண் பல்கலைக்கழகம்) இளநிலை வேளாண்மை பட்டத்தையும் பெற்றார். பல்வேறு ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றிய பிறகு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

பணிகள்

இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்தூன்றியவர்கள் இரு தமிழர்கள். அப்போது நடுவண் அமைச்சரவையில் உணவு அமைச்சராகப் பொறுப்பு வகித்த சி. சுப்பிரமணியம். அதை முன்னின்று நடத்தியவர் சுவாமிநாதன் அவர்கள். இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராயச்சி நிர்வாகி, தலைவராக இருந்தவர். வேளாண்மைத்துறைச் செயலாளர், நடுவண் திட்டக் குழுவின் உறுப்பினர், மற்றும் துணைத்தலைவர் பதவிகளை வகித்தவர்

விருதுகள்

  • இந்தியாவிலும் உலகின் பலவேறு நாடுகளிலும் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டங்கள் வழங்கியுள்ளன
  • தேசிய, சர்வதேச அளவில் 41 விருதுகளை பெற்றவர்.
  • பெருமைமிகு மகசேசே விருது
  • கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் 'வால்வோ' விருது [3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.