காகா காலேல்கர்

தத்தாத்ரேயா பாலகிருசுனா காலேல்கர் அல்லது காகா காலேல்கர் (ஆங்கிலம்;Kaka Kalelkar;தேவநாகரி: दत्तात्रेय बाळकृष्ण कालेलकर) ( டிசம்பர் 1, 1895 - ஆகஸ்ட் 21, 1981) என்பவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரருள் ஒருவர். காந்தியவாதி. மேலும், இவர் ஒரு எழுத்தாளரும், சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். 1965 ஆம் ஆண்டு தனது குசாராத்தியப் படைப்புக்கு சாகித்ய அகடாமி விருதைப் பெற்றார்.[1]

காகா காலேல்கர்
பிறப்பு1 திசம்பர் 1885
இறப்பு21 ஆகத்து 1981 (அகவை 95)
விருதுகள்சாகித்திய அகாதமி விருது, இலக்கியம் மற்றும் கல்விக்கான பத்ம விபூசண்

வாழ்க்கை

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் உள்ள பெல்கன்டி என்ற கிராமத்தில் பிறந்தார். அவர் புனே ஃபெர்குஸன் கல்லூரியில் தனது கல்லூரி கல்வியை பயின்றார். கல்லூரிக்கு பிறகு ராஷ்டிரமத் என்ற மராட்டிய தேசிய தினசரி பத்திரிக்கையில் இதழாசிரியருடன் சிறிது காலம் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு பரோடாவில் உள்ள கங்காதர் வித்யாலாயாவில் ஆசிரியாராக பணியாற்றியுள்ளார்.

எழுத்துப்பணிகள்

காலேல்கர் எழுதிய நூல்களின் தலைப்புகளைக் கீழே காணலாம்.

  • காந்திய சிந்தனை சாரம் [Quintessence of Gandhian Thought (ஆங்கிலம்)]
  • Profiles in Inspiration (ஆங்கிலம்)
  • Stray Glimpses of Bapu (ஆங்கிலம்)
  • Mahatma Gandhi's Gospel of Swadeshi (ஆங்கிலம்)
  • ஒட்டரட்டிதேவரோ (குஜராத்தி) (மேலும் 'Even behind the Bars' என ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது)
  • உத்ர்கண்டில் பிகின்டி (மராத்தி) (மேலும், 'Even behind the Bars' என ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது)
  • மகாத்மா காந்தி கா சுதேசி தர்மா (இந்தி)
  • ராஷ்ட்ரிய சிக்ஷா கா ஆதர்ஷா (இந்தி)
  • சமரான் யாத்ரா (மராத்தி)
  • இந்தல்கியாசா பிரசாத் (மராத்தி)
  • லோக் மாதா (மராத்தி)
  • இலத்தன்சே தந்தேவா (மராத்தி)
  • இமயத்தில் பிரவேசம் (மராத்தி)
  • இமாலய வனோ பிரவேசம் (குஜராத்தி)
  • ஜீவன்-வியாவசுதா (குஜராத்தி)
  • பூர்வ ஆப்பிரக்கமான் (குஜராத்தி)
  • ஜீவவனோ ஆனந்தம் (குஜராத்தி)
  • ஜீவிதவியாவசுதா (குஜராத்தி)
  • மாரா சன்சுமரோனோ (குஜராத்தி)
  • உகமனோ தேஷ் (குஜராத்தி)
  • பிரம்மதேசனோ பிரவேசம் (குஜராத்தி)
  • இராகெத்வனோஆனந்தம் (குஜராத்தி)
  • பல பகுதி காகா காலேல்கர் கிரந்தவாலி
    • பகுதி 5: ஆத்மசரித்திரா
    • பாகம் 6: சரித்ரா கீர்த்தனைகளில்
    • பகுதி 7: கீதா தரிசனம்
    • பகுதி 8: தர்ம
    • பாகம் 9: சாகித்ய
    • பாகம் 10: டைரி
    • பாகம் 11: பாத்திர

காந்தி சரித்ரா கீர்த்தனா (இந்தி)

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.