ஜி. மாதவன்

ஜி. மாதவன் நாயர் (G. Madhavan Nair, மலையாளம்: ജി. മാധവന്‍ നായര്‍,பிறப்பு அக்டோபர் 31, 1943) இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவராகவும் இந்திய அரசின் விண்வெளித்துறை செயலராகவும் இருந்தவர். மேலும் இவர் விண்வெளி ஆணையத்தின் தலைவராகவும் பெங்களூருவிலிருந்து இயங்கும் அன்ட்ரிக்சு நிறுவனத்தின் மேலாண் அமைப்பின் தலைவராகவும் இருந்தவர். இவரது அரசுப்பணிச் சேவைகளைப் பாராட்டி இவருக்கு 2009ஆம் ஆண்டு பத்ம விபூசண் விருது வழங்கப்பட்டது.[1][2] இவர் தலைமையேற்ற ஆந்த்ரிக்சு கழகம் தேவாசு பல்லூடக நிறுவனத்துடன் சனவரி 28, 2005 அன்று ஒப்பிட்ட எசு அலைக்கற்றை பகிர்வுக்கான பேர ஊழல் தொடர்பாக இவர் மீது சனவரி 25, 2012 அன்று எந்த அரசுத்துறை பணிகளிலும் பொறுப்பேற்க இவருக்குத் தடை விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.[3] இதனையடுத்து இந்திய தொழில்நுட்பக் கழகம் பட்னாவின் ஆளுனர் குழுமத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.[4]

ஜி. மாதவன் நாயர்
இஸ்ரோ முன்னாள் தலைவர் ஜி. மாதவன் நாயர் (வலது) மற்றும் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் (சூலை 8, 2002)
பிறப்பு31 அக்டோபர் 1943 (1943-10-31)
திருவனந்தபுரம், இந்தியா
வாழிடம் இந்தியா
தேசியம் இந்தியர்
துறைவிறிசு தொழில்நுட்பம் மற்றும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல்
பணியிடங்கள்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
பாபா அணு ஆராய்ச்சி மையம்
கல்வி கற்ற இடங்கள்இளங்கலை அறிவியல் (பொறியியல் - மின்னியல் & தொலைதொடர்பு) (1966), பொறியியல் கல்லூரி, திருவனந்தபுரம்
அறியப்படுவதுஇந்திய விண்வெளித் திட்டம்
விருதுகள்பத்ம பூசன் (1998)
பத்ம விபூசண் (2009)

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

அரசு பதவிகள்
முன்னர்
கே. கஸ்தூரிரங்கன்
இஸ்ரோ தலைவர்
2003–2009
பின்னர்
கே. இராதாகிருஷ்ணன்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.