ஏ. இலட்சுமணசுவாமி

மருத்துவர் ஆற்காடு இலட்சுமணசுவாமி முதலியார் (1887–1974) சிறந்த கல்வியாளர். இவர் எழுதிய மகப்பேறு மருத்துவப் புத்தகம் இன்றளவும் தமிழ்நாட்டு மருத்துவ மாணவர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆற்காடு இராமசாமி முதலியாரும் இவரும் இரட்டையர்கள். இவரே மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் நீண்டகாலம் துணைவேந்தராகவும் (27 ஆண்டுகள்)[1] மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியில் முதல்வராகவும் பணியாற்றியவர்.

உலக சுகாதார மையத்தின் செயற்குழுத் தலைவராக இவர் 1949 மற்றும் 1950 ஆம் ஆண்டுகளில் செயல்பட்டார். எட்டாவது உலக சுகாதாரக் கூடுகையின் துணைத் தலைவராக 1955 ஆம் ஆண்டிலும் 14 ஆவது உலக சுகாதாரக் கூடுகையின் தலைவராக 1955 ஆம் ஆண்டிலும் செயற்பட்டார்.

கிராமப்புற மருத்துவ சேவை வரலாற்றில் 1959 ஆம் ஆண்டில் முதலியார் தலைமையிலான கமிட்டி அளித்த பரிந்துரைகள் குறிப்பிடத்தக்கவை.[2]

இந்திய அரசு இவருக்கு, 1963 ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.[3]

ஆற்காடு சகோதரர்கள்

ஆற்காடு சகோதரர்கள் என்பவர்கள் சர். இராமசாமி முதலியாரும் சர். இலட்சுமணசாமி முதலியாரும் ஆவர். பிறப்பால் இரட்டையர்கள். இவர்கள் அக்டோபர் 14, 1887 இல் கர்னூலில் பிறந்தனர். இவர்களது ஆரம்பக் கல்வி கர்னூலிலுள்ள நகராட்சிப்பள்ளியிலும் பின்னர் மேற்படிப்பு சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் தொடர்ந்தது. அதன்பிறகு முன்னவர் சட்டக்கல்லூரியிலும், பின்னவர் மருத்துவக் கல்லூரியிலும் தங்களது கல்வியைத் தொடர்ந்தனர். அவரவர்களது துறையில் பல்வேறு பரிமாணங்களில் சிறப்பாகப் பணியாற்றிய இவர்களது 125 ஆவது பிறந்த நாள் அக்டோபர் 14, 2013 என்பது நினைவுகூரத் தக்கது.

பாடநூல்

  • Clinical Obstetrics முதல் பதிப்பு 1938; மேனன் அவர்களால் பின்னர் மறுதிருத்தம் செய்யப்பட்டது 10th edition, ISBN 81-250-2870-6

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.