பசுமைப் புரட்சி

1940 களில் அறிமுகப்படுத்தப்பட்ட பயிர்செய்கை நுட்பங்கள் வேளாண் உற்பத்தியை பன்மடங்கு பெருக்கின. இந்த வேளாண் தொழில்நுட்பமும் அதனால் நிகழ்ந்த சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களும் பசுமைப் புரட்சி (Green Revolution) எனப்படுகிறது. இந்தியா போன்ற பல மூன்றாம் நிலை நாடுகள் பட்டினிச் சாவை எதிர்நோக்கிய அன்றைய கால கட்டத்தில் பசுமைப் புரட்சி முன்னிறுத்திய பயிர்ச்செய்கை முறைகள் பலன் தந்தது. பசுமைப் புரட்சி தொடக்கி வைத்த வேளாண் ஆராய்ச்சி கட்டமைப்புகள் தொடர்ந்தும் வேளாண் தொழில்நுட்பத்தில் பங்கெடுத்து வருகின்றன. தொலைநோக்கில் இந்தப் பயிர்ச்செய்கையின் பல்வேறு குறைபாடுகள் அறியப்பட்டு, தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டத்துக்கு செல்வது தேவையானாலும், பசுமைப் புரட்சி உலக சமூக தொழில்நுட்ப பொருளாதார அரசியல் தளங்களில் நிகழ்ந்த முக்கிய புரட்சிகளுள் ஒன்று என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கூற்று. பசுமைப் புரட்சியானது "உயர்-மகசூல் வகைகளை" உருவாக்கியதன் மூலம் விளைச்சலை அதிகரிக்க பழமையான கலப்பின முறையைப் பயன்படுத்துவதை பிரபலப்படுத்தியது. எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் மக்காச்சோளத்தின் விளைச்சல் 1900 ஆம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஹெக்டேருக்கு 2.5 டன்களாக இருந்தது. 2001 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 9.4 டன்களாக அதிகரித்தது. அதேபோன்று, உலகளாவிய சராசரி கோதுமை மகசூல் 1900 ஆம் ஆண்டு ஹெக்டேருக்கு 1 டன்னுக்கும் குறைவாக இருந்தது. 1990 ஆம் ஆண்டு ஹெக்டேருக்கு 2.5 டன்னுக்கும் அதிகமாக இருந்தது.

தென் அமெரிக்க சராசரி கோதுமை மகசூல் ஹெக்டேருக்கு 2 டன்னுக்கு குறைவாகவும், ஆப்பிரிக்காவில் ஹெக்டேருக்கு 1 டன்னுக்கு குறைவாகவும், எகிப்து மற்றும் அரேபியாவில் நீர்ப்பாசனத்தைக் கொண்டு ஹெக்டேருக்கு 3.5 முதல் 4 வரையிலுமாக இருந்தது. இதற்கு முரணாக, பிரான்ஸ் போன்ற நாடுகளின் சராசரி கோதுமை மகசூல் ஹெக்டேருக்கு 8 டன்னுக்கும் அதிகமாக இருந்தது. மகசூலில் ஏற்படும் மாற்றங்கள் காலநிலை, மரபணுக்கள், மற்றும் தீவிர விவசாய உத்திகள் (உரங்கள், ரசாயன பூச்சிக் கட்டுப்பாடு,தேக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வளர்ச்சிக் கட்டுப்பாடு) ஆகியவற்றால் ஏற்படுகின்றன.[1][2]

1921 ஆம் ஆண்டின் என்சைக்ளோபீடியாவிலுள்ள இந்தப் படம் ஆல்பால்பா நிலத்தை ஒரு டிராக்டர் உழுவதைக் காட்டுகிறது.

இந்த புரட்சி அமெரிக்காவின் Rockfeller Foudation, Ford Foundation ஆகியவற்றின் உதவிடன் தொடங்கியது. விரைவில் அமெரிக்க அரசு, இந்திய அரசு, மெக்சிக்கோ அரசு போன்ற பல்வேரு நாடுகள் பசுமைப் புரட்சியை தமது நாடுகளில் நடைமுறைப்படுத்தின. Norman Borlaug பசுமைப் புரட்சியின் தந்தை என போற்றப்படுகிறார். சாமிநாதன் இந்தியாவில் பசுமைப் புரட்சியை நடைமுறைப்படுத்துவதில் முன்னின்றவர்களில் ஒருவர்.

இந்தியாவில் பசுமைப் புரட்சி

இந்தியா விடுதலை அடைந்தபோது அதன் உணவு உற்பத்தி மிகக் கவலை தருவதாக இருந்தது.விவசாயிகள் கடன் சுமையில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.அவர்களின் கைவசம் மிகக் குறைந்த அளவு நிலமே இருந்தது.அதிலும் அவர்களின் துண்டு நிலங்களும் ஒரே இடத்தில் இருக்காமல் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.புதிய விவசாயக் கருவிகளைப் பற்றி அறிந்திருந்தவர்களிடம் அவற்றை வாங்கிப் பயன்படுத்த போதிய பணம் இல்லை.வானம் பார்த்த விவசாயம் .வானம் பொய்த்தபோது உணவு உற்பத்தியும் குறைந்தது.நிலத்தின் உற்பத்தித் திறனும் விவசாயத் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனும் மிகவும் குறைவாக இருந்தன.மக்கள் தொகையில் எழுபது விழுக்காட்டினர் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த போதும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது.

தீவிளைவுகள்

பசுமை புரட்சி பூச்சிக்கொல்லி மற்றும் கலப்பு நைட்ரஜன் போன்றவற்றை வளர்ந்த நாடுகளிடமிறந்து வளரும் நாடுகளுக்கு அளிக்க வழி செய்தது. இதன் விளைவாக வளர்ந்த நாடுகளின் நிறுவனங்கள் வளர்ந்ததே தவிர வளரும் நாடான நம் நாட்டிற்கு எந்த பயனும் இல்லை. ரசாயன உரங்களை பயன்படுத்தியதன் விளைவாக நீரிழிவு, புற்றுநோய், மலட்டுத்தன்மை, பிறவி ஊனம், கண் பார்வை குறைவு போன்ற பல நோய்கள் இன்று எங்கும் பரவியதற்கு காரணம் நம் மண்ணில் கலந்துள்ள ரசாயன மற்றும் பூச்சிக்கொல்லி இவற்றின் எச்சங்களால் தான். இப்படி நச்சு தாக்கிய மண்ணில் விளைந்த காய் கறிகளை உண்ணும் பொழுது நம் உடம்பிற்குள்ளும் நச்சு நுழைந்து விடுகிறது.[7]

“சர்வதேச ஆய்வறிக்கையின்படி மகசூலும் மண் வளமும் நேர்விகிதத்தில் உள்ளது. மண் வளத்தை பொறுத்துதான் மகசூல் உள்ளது. இந்திய மண் வளத்தை ஆராய்ந்த சர்வேதேச ஆய்வுக்குழு மண்ணில் இரும்பு, மாலிப்பிடினத்தை தவிர பிற சத்துக்களான பாஸ்பரஸ், மக்னீஷியம், போரான், துத்தநாகம் போன்றவை குறைவாக உள்ளதாக கூறிக்கின்றது.”வளமான மண் இன்று வளம் குன்றி கலங்கமானதற்கு விவசாயத்தில் ரசாயன பூச்சிக்கொல்லிகளையும் உரங்களையும் பயன்படுத்தியதே காரணம்.[7]

இரண்டாம் பசுமைப்புரட்சி

இரண்டாம் பசுமை புரட்சி அதிகம் இயற்கை வேளாண்மை நோக்கியே கவணப்படுத்தப்படுகிறது

மேற்கோள்கள்

  1. Cassman, K. (1998-12-05). "Ecological intensification of cereal production systems: The Challenge of increasing crop yield potential and precision agriculture". Proceedings of a National Academy of Sciences Colloquium, Irvine, California (University of Nebraska). http://www.lsc.psu.edu/nas/Speakers/Cassman%20manuscript.html. பார்த்த நாள்: 2007-10-11.
  2. நிலைமாற்றக் குறிப்பு: 1 புஷல் கோதுமை = 60 பவுண்டுகள் (lb) ≈ 27.215 கிலோ. 1 புஷல் மக்காச்சோளம் = 56 பவுண்டுகள் ≈ 25.401 கிலோ
  3. Tilman D, Cassman KG, Matson PA, Naylor R, Polasky S (August 2002). "Agricultural sustainability and intensive production practices". Nature 418 (6898): 671–7. doi:10.1038/nature01014. பப்மெட்:12167873.
  4. USDA NAL சிறப்புத் தொகுப்புகள். தென் சீனக் கண்டுபிடிப்புகள்:டைப்ஸ்கிரிப்ட், ஜூலை 25, 1916-செப்டம்பர் 21, 1918
  5. USDA ERS. அமெரிக்காவில் விவசாய உற்பத்தித் திறன்
  6. உணவு ஏமாற்று பொருளாதாரம்,சமூக அறிவியல் நிறுவனம்.
  7. http://sgmanarkeni.wordpress.com/2011/02/20/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-2/
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.