அ. திருமலைமுத்துசுவாமி

அ. திருமலைமுத்துசுவாமி (1928 - 1980?) தமிழ் விரிவுரையளராக வாழ்க்கைத் தொடங்கி, பொதுநூலக நூலகராகவும் கல்லூரி நூலகராகவும் பணியாற்றி, பல்கலைக் கழக நூலகத்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். தமிழறிஞர். கவிஞர். அவரது படைப்புகளை தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறை நாட்டுடைமையாக்கி இருக்கிறது.

அ. திருமலை முத்துசுவாமி
நூலகப் பேராசிரியர்
பிறப்புதிருமலை முத்துசுவாமி
1928
நாங்குநேரி
இறப்புமதுரை
இருப்பிடம்மதுரை
தேசியம்இந்தியர்
கல்விகலை முதுவர், ஆய்வு நிறைஞர், நூலக அறிவியல் முதுவர், கல்வியியல் இளவர்
பணிநூலகப் பேராசிரியர்
பணியகம்நெல்லை ம. தி. தா. இந்து கல்லூரி
நெல்லை மாவட்ட நூலக ஆணைக்குழு
மதுரை தியாகராசர் கல்லூரி
சென்னைப் பல்கலைக் கழகம்
மதுரை காமராசர் பல்கலைக் கழகம்
அறியப்படுவதுநூலகவியல்
பட்டம்அருங்கலைக்கோன்
சமயம்சைவம்
பெற்றோர்அருணாசலம் - மங்கையர்க்கரசி
வாழ்க்கைத்
துணை
பகவதி
உறவினர்கள்பேராசிரியர் முனைவர் அ. சங்கரவள்ளிநாயகம்

பிறப்பு

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி என்னும் ஊரில் வாழ்ந்த தமிழாசிரியர் அருணாசலம் பிள்ளை – மங்கையர்க்கரசி என்னும் இணையருக்குத் தலைமகனாக 1928 - ? - ? ஆம் நாள் பிறந்தார். இவருடன் சங்கரவள்ளி நாயகம், சுப்பிரமணியன், காமாட்சி மற்றும் ஒருவர் இவருடன் பிறந்தவர்கள் ஆவர்.[1]

கல்வி

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியர்கள் அ. மு. பரமசிவானந்தம், முனைவர் மு. வரதராசன் ஆகியோரிடம் பயின்று தமிழிலக்கியத்தில் சிறப்பு இளங்கலைப் பட்டம் (BA - Hons) பெற்றார். இப்பட்டம் கலை முதுவர் பட்டத்திற்கு இணையானதாகும். பின்னர் கல்வியியல் இளவர் (Bachelor of Teaching) பட்டமும் நூலக அறிவியல் பட்டயமும் (Diploma in Library Science) பெற்றார். தமிழிலக்கியத்தில் ஆய்வுசெய்து 1967ஆம் ஆண்டில் இலக்கிய முதுவர் (Master of Literature) என்னும் பட்டமும் பெற்றார். 1973 -74 ஆம் ஆண்டில் கர்நாடகப் பல்கலைக் கழகத்தில் நூலகவியல் முதுவர் பட்டப்படிப்பில் (M.Lib.Sc.) பல்கலைக் கழக முதல்வராகத் தேறி பொற்பதக்கம் பெற்றார்.[2]

பணி

திருநெல்வேலியில் உள்ள மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[3]

1953ஆம் ஆண்டில் நெல்லை மாவட்ட மைய நூலகத்தில் நூலகராகப் பணியாற்றினார்.

1955 சூன் முதல் 1960 ஏப்ரல் வரை மதுரை தியாகராசர் கல்லூரியில் நூலகத் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.

1960 சூலை முதல் 1977 வரை சென்னைப் பல்கலைக் கழக நூலகத்துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[4] 1977 ஆம் ஆண்டு முதல் தான் மறையும் வரை மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் நூலகத்துறைத் தலைவராகப் பணியாற்றினார்.

வெளிநாட்டுப் பயணம்

1965 ஆம் ஆண்டில் ஐந்து மாதங்கள் கல்வியுலாவாக அமெரிக்க நாட்டிற்குச் சென்று திரும்பினார். அதனால் கிடைத்த பட்டறிவைக் கொண்டு நூலக நாட்டில் நூற்றியிருபது நாள்கள் என்னும் நூலை எழுதினார்.

படைப்புகள்

தமிழிலும் நூலகவியலிலும் புலமைபெற்ற திருமலை முத்துசுவாமி, இவ்விரு துறைகளிலும் தமிழ். ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நூல்களை எழுதியிருக்கிறார். அவை பின்வருமாறு:

வ.எண்ஆண்டுநூல்வகைபதிப்பகம்குறிப்பு
011955 சூன்நூல்நிலையம்நூலகவியல்பண்புப் பதிப்பகம்,சென்னை
021955உரிமைப்போர்வில்லுப்பாட்டுதிண்டுக்கல் பப்ளிஷிங் ஹவுஸ், திண்டுக்கல்
031955 நவம்பர்யாப்பருங்கலக் காரிகை (வினா-விடை)இலக்கணம்
041956 செப்டம்பர்அறிவியற்சோலைதமிழ்க் கட்டுரைதிண்டுக்கல் பப்ளிஷிங் ஹவுஸ், திண்டுக்கல்
051957முதலுதவிமருத்துவம்திண்டுக்கல் பப்ளிஷிங் ஹவுஸ், திண்டுக்கல்
061957நூலக ஆட்சிநூலகவியல்திண்டுக்கல் பப்ளிஷிங் ஹவுஸ், திண்டுக்கல்
07?பொற்காலம்??1957ஆம் ஆண்டில் வெளிவந்த நூலக ஆட்சி நூலின் கடைசிப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 1959ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்நாடும் மொழியும் நூலில் இந்நூல் குறிக்கப்படவில்லை.
08?புதிய தாயகம்??1957ஆம் ஆண்டில் வெளிவந்த நூலக ஆட்சி நூலின் கடைசிப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 1959ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்நாடும் மொழியும் நூலில் இந்நூல் குறிக்கப்படவில்லை.
091958இலக்கண வழிகாட்டி (அலங்காரம் – அகப்பொருள் – புறப்பொருள்)இலக்கணம்டி.டி.சுந்தரம்
101959 சனவரிநூலக அமைப்பியல்நூலகவியல்ஒளவை நூலகம், சென்னை
111959 சூன்இலக்கியத்தில் விலங்குகளும் பறவைகளும்இலக்கியத் திறனாய்வுஒளவை நூலகம், சென்னை
121959 சூன்தமிழ்நாடும் மொழியும்தமிழக வரலாறும் தமிழ் மொழி வரலாறும்ஸ்டார் பிரசுரம், சென்னை
131959 ஆகத்துமலைவாழ் மக்கள் (நீலமலை)மானுடவியல்ஒளவை நூலகம், சென்னை
14?தேசிய நூலகங்கள்நூலகவியல்?1959ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்நாடும் மொழியும் என்னும் நூலில் குறிக்கப்பட்டு உள்ளது.
15?தமிழ் இலக்கிய வரலாறுஇலக்கியம்1959ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்நாடும் மொழியும் என்னும் நூலில் குறிக்கப்பட்டு உள்ளது.
161960மாணவர் தமிழ் இலக்கணம் – ஐந்தாம் வகுப்புஇலக்கணம்அலைடு பப்ளிஷிங் கம்பெனி, சென்னை
171960மாணவர் தமிழ் இலக்கணம் – ஆறாம் வகுப்புஇலக்கணம்அலைடு பப்ளிஷிங் கம்பெனி, சென்னை
181960மாணவர் தமிழ் இலக்கணம் – ஏழாம் வகுப்புஇலக்கணம்அலைடு பப்ளிஷிங் கம்பெனி, சென்னை
191960மாணவர் தமிழ் இலக்கணம் – எட்டாம் வகுப்புஇலக்கணம்அலைடு பப்ளிஷிங் கம்பெனி, சென்னை
201960மாணவர் தமிழ் இலக்கணம் – ஒன்பதாம் வகுப்புஇலக்கணம்அலைடு பப்ளிஷிங் கம்பெனி, சென்னை
211960மாணவர் தமிழ் இலக்கணம் – பத்தாம் வகுப்புஇலக்கணம்அலைடு பப்ளிஷிங் கம்பெனி, சென்னை
221960 மேமறுமலர்ச்சிக் கவிஞர்கள்வாழ்க்கை வரலாறுசாந்தி நூலகம், சென்னை
231960 சூன்உயர்நிலைப்பள்ளி நூலகம்நூலகவியல்மங்கை வெளியீடு, சென்னை
241960விஞ்ஞானத்தின் கதைஅறிவியல்சாந்தி நூலகம், சென்னைஇளம்பாரதியுடன் இணைந்து எழுதியது
251961 சனவரிசைவ நன்னெறிசைவமதம்மங்கை வெளியீடு, சென்னை
261961 ஆகத்துஅமெரிக்க நூலகங்கள்நூலகவியல்சாந்தி பதிப்பகம், சென்னை
271962முதல் பொதுநூலக இயக்கம்நூலகவியல்மங்கை வெளியீடு, சென்னை
281962A Bibliography of Tirukkuralநூலகவியல்மங்கை வெளியீடு, சென்னை
291967நூலக நாட்டில் நூற்றிருபது நாள்கள்நூலகவியல்மீனாட்சி புத்தக நிலையம், மதுரை
301969ABC of Library Scienceநூலகவியல்அன்னை பதிப்பகம், சென்னை
311970தமிழகப் பொதுநூலக வளர்ச்சிக்கு மாதிரித்திட்டம்நூலகவியல்அன்னை நிலையம், சென்னை
321974 JulyEssays on Library Scienceநூலகவியல்Dhanniram Publications, Dharwar
331975நூலகவியல் சிந்தனைகள்நூலகவியல்தமிழ்ப்பணி வெளியீடு, சென்னை
34?நூலகவியல் ஓர் அறிமுகம்நூலகவியல்
35?An Introduction to Tamil Literatureகட்டுரை?1975ஆம் ஆண்டில் வெளிவந்த இலக்கிய மலர்கள் நூலில் குறிக்கப்பட்டு உள்ளது.
361975 ஆகத்துஇலக்கிய மலர்கள்இலக்கியத் திறனாய்வுஅருணா பப்ளிகேஷன்ஸ், தியாகராய நகர், சென்னை
371975Public Library System - Local Library Authority Madras - A case studyநூலகவியல்?1975ஆம் ஆண்டில் வெளிவந்த இலக்கிய மலர்கள் நூலில் குறிக்கப்பட்டு உள்ளது.
381977ஆஞ்சநேய புராணம்கவிதைஆதிபராசக்தி வெளியீடு, மதுரை
391979கிராம நூலகக் கையேடுநூலகவியல்நூலகவியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை
401980மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்மருத்துவம்என்னெஸ் பப்ளிகேஷன்ஸ், மதுரை

பட்டங்களும் பாராட்டுகளும்

சைவம், தமிழ், நூலகவியல் ஆகியவற்றில் துறைபோகியவராக இருந்த திருமலை முத்துசுவாமிக்கு பின்வரும் பட்டங்களும் பாராட்டுகளும் வழங்கப்பட்டன:

  • அருங்கலைக்கோன் – குன்றக்குடி அடிகளார் வழங்கியது
  • நூலகக் கலாநிதி – மதுரை ஆதினம் சோமசுந்தரத் தம்பிரான்
  • யுனஸ்கோ மன்ற விருது
  • அறநெறிச் செல்வர் – பூவாளூர் சைவ சித்தாந்த சபை
  • சைவமணி

குடும்பம்

திருமலை முத்துசுவாமி, பகவதி என்பவரை மணந்தார்.

மறைவு

திருமலை முத்துசுவாமி மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும்பொழுது 1980ஆம் ஆண்டில் மஞ்சள் காமாலை நோய்க்கு ஆட்பட்டு மரணமடைந்தார்.

சான்றடைவு

  1. திருமலை முத்துசுவாமி; முதலுதவி; திண்டுக்கல் பப்ளிஷிங் ஹவுஸ், திண்டுக்கல்; முதற்பதிப்பு 1955; பக்.1
  2. திருமலை முத்துசுவாமி அ; நூலகவியல் சிந்தனைகள்; தமிழ்ப்பணி வெளியீடு, சென்னை; 1975; பின்னட்டை
  3. திருமலைமுத்துசுவாமி அ; நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்; மீனாட்சி புத்தக நிலையம், மதுரை; 1967; பக். 1
  4. திருமலைமுத்துசுவாமி அ; நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்; மீனாட்சி புத்தக நிலையம், மதுரை; 1967; பக். 2
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.