சுப்பையா அருணன்

சுப்பையா அருணன் (Subbiah Arunan) இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஓர் விஞ்ஞானி மற்றும் திட்ட இயக்குநர் ஆவார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தின் ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரி கிராமத்தைச் சேர்ந்தவராவார். திருக்குறுங்குடி பள்ளியிலும், பாளையங்கோட்டை சேவியர் பள்ளியிலும் படித்தார். கோவையில் இயந்திரப் பொறியியல் துறையில் பட்டம் பெற்று, 1984ல் திருவனந்தபுரத்திலுள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியில் சேர்ந்தார். தற்போது, பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரிகிறார்.[2] 2013ல் மங்கள்யான் செயற்கைக்கோளை உருவாக்கிய இந்தியாவின் செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தின் திட்ட இயக்குநராக இருக்கிறார்.

சுப்பையா அருணன்
பிறப்புதிருநெல்வேலி, தமிழ் நாடு
வாழிடம்இந்தியா
தேசியம்இந்தியன்
துறைஇயந்திரப் பொறியியல் மற்றும் விண்வெளி அறிவியல்
பணியிடங்கள்இஸ்ரோ
அறியப்படுவதுமங்கள்யான் திட்டம்[1]

பிற குறிப்புகள்

இசுரோவின் அறிவியல் அறிஞராகப் பணியில் இருந்த நம்பி நாராயணன் என்பவரின் மருமகன் ஆவார்.

மேற்கோள்கள்

  1. "Isro gears up to launch India’s first mission to Mars on November 5". டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2013-11-06. http://articles.timesofindia.indiatimes.com/2013-10-30/science/43529364_1_pslv-xl-curiosity-rover-mars-orbit. பார்த்த நாள்: 2013-11-07.
  2. ""மங்கள்யான்' செயற்கைகோள் திட்ட இயக்குநர் நெல்லையை சேர்ந்த கிராமத்து விஞ்ஞானி". Dinamalar. 2013-11-07. http://www.dinamalar.com/news_detail.asp?id=843906. பார்த்த நாள்: 2013-11-07.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.