சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்
சென்னை அண்ணா பன்னாட்டு வானூர்தி நிலையமானது சென்னைக்கு 7 கிலோ மீட்டர் தெற்கே மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இது மும்பை, தில்லி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக முக்கியமாக உள்ள வானூர்தி நிலையமாகும். 2005 ஆம் ஆண்டில் 10 மில்லியன் பயணிகள் இந்நிலைய வானூர்திகளின் மூலமாக பயணம் செய்துள்ளனர். மும்பைக்கு அடுத்தபடியாக அதிக போக்குவரத்துள்ள சரக்கு வானூர்தி நிலையமும் இதுவாகும். 1400 ஏக்கர் பரப்பளவில் கடல் மட்டத்தில் இருந்து 34 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
Chennai International Airport சென்னை அண்ணா பன்னாட்டு வானூர்தி நிலையம் | |||
---|---|---|---|
| |||
IATA: MAA – ICAO: VOMM
![]() ![]() MAA | |||
சுருக்கமான விபரம் | |||
வானூர்திநிலைய வகை | பொது | ||
உரிமையாளர் | இந்திய அரசு | ||
இயக்குனர் | இந்திய வானூர்தி நிலைய ஆணையம் | ||
சேவை புரிவது | சென்னை மாநகர பரப்பு | ||
அமைவிடம் | மீனம்பாக்கம், சென்னை | ||
உயரம் AMSL | 52 அடி / 16 மீ | ||
ஆள்கூறுகள் | 12°58′56″N 80°9′49″E | ||
ஓடுபாதைகள் | |||
திசை | நீளம் | மேற்பரப்பு | |
அடி | மீ | ||
07/25 | 12,001 | 3,658 | தார் |
12/30 | 9,596 | 2,925 | தார்/பைஞ்சுதை |
புள்ளிவிவரங்கள் (April 2014 - March 2015) | |||
Passenger movements | 14,299,200 | ||
Airfreight movements in tonnes | 303,904 | ||
Aircraft movements | 124,712 | ||
Source: DAFIF[1][2] |

வரலாறு
சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் இந்தியாவின் தொடக்ககாலத்தில் உருவாக்கப்பட்ட வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும். இது மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளதால் மீனம்பாக்கம் வானூர்தி நிலையம் என்றும் அழைக்கப்படுகின்றது. முதல் வானுர்தி (புஷ்மோத்) 1932 ஆம் ஆண்டு தரை இறங்கியது. இரண்டாம் உலகப் போரின்போது இராணுவப் பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. 1952 ஆம் ஆண்டு உள்நாட்டு வானுர்தி வாரியம் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டது. இது தற்போது சரக்கு போக்குவரத்து வானூர்திகள் வந்து செல்லுமிடமாக உள்ளது. 1984 ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பினால் 1985 ஆம் ஆண்டு மீனம்பாக்கம் அருகில் திரிசூலத்தில் புதிய நிலையம் கட்டப்பட்டது. 1989 ஆம் ஆண்டு புதிய பன்னாட்டு முனையகம் தொடங்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு புதிய பன்னாட்டு புறப்பாடு முனையகம் செயல்படுத்தப்பட்டது. இங்கு இரண்டு முனையங்கள் உள்ளன. ஒன்று அண்ணா பன்னாட்டு முனையமாகும். இரண்டாவது காமராசர் உள்நாட்டு முனையமாகும்.
தனித்துவம்
இந்நிலையம் உலகத் தரத்திற்கான அனைத்து இலவச மற்றும் கட்டண வசதிகளை கொண்டது. உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையகம் அருகருகில் அமையப்பெற்று இரண்டும் (கநோபி ) இணைக்கப்பட்டது. எதிரில் அமையப்பெற்ற திரிசூலம் புறநகர் ரயில் நிலையத்துடன் சுரங்கப்பாதை மூலம் இணைக்கப்பட்டது. இது முதல் இடத்தை பல விசயங்களில் பிடித்துள்ளது அவை:
- ISO-9001-2000 சான்றிதழை பெற்ற முதல் பன்னாட்டு முனையகம்.
- உள்நாட்டு முனையகத்தில் aerobridges எனப்படும் வானூர்தியுடன் இணைக்கும் பாலத்தை முதலில் பெற்ற நிலையம் இதுவே.
- சுற்றுச்சுழலை கருத்தில் கொண்டு வானூர்தி நிலையத்தில் காகிதக் கிண்ணத்தை (cup) அறிமுகப்படுத்திய முதல் வானூர்தி நிலையம்.
- சிறந்த வானூர்தி நிலையம் - உள்நாட்டு முனையகம் என்ற விருது குடியரசுத் தலைவரால் வழங்கப்பெற்றது.
- சுகாதாரமான இலவசக் குடிநீரை இரு முனையங்களிலும் வழங்கிய முதல் நிலையம்.
போக்குவரத்து
இந்நிலையம் தேசிய நெடுஞ்சாலை NH45யை ஒட்டியே அமைந்துள்ளது. இதன் எதிரில் திரிசூலம் புறநகர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. புதிதாக அமைய உள்ள சென்னை மெட்ரோ ரயில் இந்நிலையத்திற்குள் வந்து செல்லுமாறு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஆதலால் நகரத்தின் அனைத்து பகுதிகளுடன் போக்குவரத்து ரீதியில் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
வானூர்திச் சேவைகள் மற்றும் சேரிடங்கள்
விபத்துகள்
விமான நிலையக் கண்ணாடி உடைந்தமை
சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பன்னாட்டு முனையத்தில் மேற்கூரைக் கண்ணாடிகள் முதல் முறையாக 2013 மே 12 அன்று விழத் தொடங்கி 2016 மார்ச் 13 வரை 56 தடவைகள் உடைந்து கீழே விழுந்துள்ளன.[3] 2014 ஏப்ரல் 7 இல் 17ஆவது முறையாகவும் கண்ணாடிகள் உடைந்தன[4] 2014 சூன் 23 இல் 20ஆவது முறையாகவும்[5] 2014 நவம்பர் 28 இல் 29 ஆவது முறையாகவும்,[6] 2015 சனவரி 15 இல் 32ஆவது முறையாகவும்,[7] 2015 மார்ச் 16 இல் 36ஆவது முறையாகவும்,[8] டிசம்பர் 7,2018 அன்று 83 முறையாக கண்ணாடி உடைந்து விபத்து.
மேற்கோள்கள்
- உலக ஏரோ தரவுத்தளத்தில் VOMM குறித்த வானூர்திநிலையத் தரவுகள். தரவுகள் நடப்பு நிலவரம் அக்டோபர் 2006.மூலம்: DAFIF.
- Airport information for MAA at Great Circle Mapper. Source: DAFIF (effective October 2006).
- "சென்னை விமான நிலையத்தில் 56ஆவது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து". புதிய தலைமுறை. மார்ச்சு 13, 2016. http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/chennai/22/12059/glass-door-breaks-at-chennai-airport-for-56th-time.
- "சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்தது". தினமணி. ஏப்ரல் 7, 2014. http://www.dinamani.com/edition_chennai/chennai/2014/04/07/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3/article2154197.ece.
- "20ஆவது முறையாக சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுந்தது". ஈகரை. சூன் 23, 2014. http://www.eegarai.net/t111228-20.
- "29 ஆவது முறையாக சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுந்தது". விடுதலை. நவம்பர் 28, 2014. http://viduthalai.in/home/viduthalai/medical/91999-29--------.html.
- "சென்னை விமான நிலையத்தில் 32ஆவது முறையாக கண்ணாடி நொறுங்கியது". தினமலர். சனவரி 15, 2015. http://www.dinamani.com/edition_chennai/chennai/2014/04/07/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3/article2154197.ece.
- "ஏர்போர்ட்டில் 36ஆவது விபத்து : உள்நாட்டு முனையத்தில் 2 கண்ணாடி உடைந்து நொறுங்கியது". தமிழ் முரசு. மார்ச்சு 16, 2015. http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=71982.