தேவி அகில்யாபாய் ஓல்கர் வானூர்தி நிலையம்

தேவி அகில்யாபாய் ஓல்கர் வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: IDR, ஐசிஏஓ: VAID), இந்தோரில் உள்ள ஒரு பொது மக்கள் பயன்படுத்தக்கூடிய வானூர்தி நிலையாமாகும். மத்தியப் பிரதேசத்தின் உள்ள இவ்வானூர்தி நிலையம் இந்தோருக்கு 8 கிமீ. மேற்கே அமைந்துள்ளது. இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்தின் கணக்குப்படி, இது இந்திய வானூர்தி நிலையங்களின் தரவரிசைப்படி, வானூர்திகள் மேலாண்மையிலும், பராமரிப்பிலும் இந்திய அளவில் 20-வது[1] இடத்தில் உள்ளது. 

இவ்வானூர்தி நிலையத்திற்கு, மராட்டியப் பேரரசின் ஓல்கர் வம்சத்தைச் சார்ந்த பேரரசி அகில்யாபாய் ஓல்கர் நினைவால் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

2008 முதல் ஹஜ் புனித பயனத்திற்கு இந்தோரிலிருந்து செல்பவர்கள் இவ்வானூர்தி நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். 

வரலாறு

ஓல்கர் அரசு, நெவில் வின்சென்ட் உடனும் டாடா குழுமத்தினருடனும் கூட்டாய்வு செய்து, பிசாசன் இடத்தில் வானூர்தி நிலையம் அமைக்க 1935-ம் ஆண்டு முடிவு செய்தனர்.  இந்தோரிலிருந்து குவாலியர் Aவரையிலுமான வானூர்தி சேவை சூலை 1948-ல் துவங்கியது. ஏப்ரல் 1950-ம் ஆண்டு மத்திய நிதி மேலாண்மை அடிப்படையில் இவ்வானூர்தி நிலையம் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. பெரிய வானூர்திகள் பயனிப்பதற்கு ஏதுவாக 1966-ம் ஆண்டு 5600 அடிகள் கொண்ட புதிய வானூர்தி தளம்  15 இலட்சம் செலவில் உருவாக்கப்பட்டது. இரவு நேரங்களில் தரையிறங்குவதற்கும் வழிவகை செய்யப்பட்டது.[2]

வானூர்தி சேவை

படக்காட்சியகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.