சான்-டெனீ , ரீயூனியன்
சான்-டெனீ (Saint-Denis, French pronunciation: [sɛ̃.də.ni]) பிரான்சினால் வெளிநாட்டு நிருவாகப் பகுதியாக நிருவகிக்கப்படும் ரீயூனியனின் நிருவாகம் சார்ந்த தலைநகர் ஆகும். இது, இந்தியப் பெருங்கடலிலுள்ள ரீயூனியன் தீவின் வடக்குப் பகுதியில் சான்-டெனீ ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது.
சான்-டெனீ | |
![]() | |
பெல்லெபியர்ரியின் மீதிருந்து காணும்போது சான்-டெனீ | |
![]() | |
![]() | |
நிர்வாகம் | |
---|---|
நாடு | பிரான்சு |
Overseas region and department | ரீயூனியன் |
Arrondissement | சான் டெனீ |
Intercommunality | நார்த் து ல ரீயூனியன் (Nord de la Réunion - வடக்கு ரீயூனியன்) |
மேயர் | கில்பர்ட் ஆனெட்டி (சோசலிசக் கட்சி) (2014-2020) |
புள்ளிவிபரம் | |
ஏற்றம் | 0–2,276 m (0–7,467 ft) (avg. 23 m (75 ft)) |
நிலப்பகுதி1 | 142.79 km2 (55.13 sq mi) |
மக்கட்தொகை2 | 1,45,238 (2012) |
- மக்களடர்த்தி | 1,017/km2 (2,630/sq mi) |
INSEE/Postal code | 97411/ 97400 |
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 கிமீ² (0.386 சதுர மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து. | |
2ஒன்றுக்கு மேற்பட்ட கம்யூன்களின் வசிப்பவர்கள் (எகா: மாணவர், இராணுவத்தினர்) ஒரு முறை மட்டுமே எண்ணப்பட்டார்கள். |
1663ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நகரம் மிகவும் மெதுவாகவே வளர்ந்தது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஏற்பட்ட கிராமப்புற திரள் வெளியேற்றத்தினால் அதிகளவு மக்கள் இங்கு குடியேறினர். முன்னர் ரீயூனியனின் முக்கியத் துறைமுகமாக இந்நகரம் விளங்கியது; ஆயினும் இங்கு நிலவிய ஊகிக்க முடியாத காற்று மற்றும் கடல்நீர் மட்ட ஏற்ற இறக்கத்தினால் ஏற்பட்ட சிரமங்களால், 1880களிலிருந்து அருகிலிருக்கும் செயற்கைத் துறைமுகமான ல போர்ட் (பிரெஞ்சு மொழியில்: துறைமுகம்) சான்-டெனீயிற்கு மாற்றாக விளங்கிவருகிறது. அழகிய கடற்கரை நெடுக அமைந்துள்ள 20 கி.மீ. சாலையானது ல போர்டையும் செயிண்ட் டெனிசையும் இணைக்கின்றது. ஒரு சர்வதேச விமானநிலையம், நூலகங்கள், ஒரு இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் சட்டம், பொருளியல், ஆட்சி இயல் ஆகியவற்றைக் கற்பிக்கும் ஒரு பல்கலைக்கழகமும் இங்குள்ளன.[1]
மேற்கோள்கள்
- "செயிண்ட் டெனிஸ் - பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். பார்த்த நாள் 13 பெப்ரவரி 2016.