கயவாய்
கயவாய் (



கயவாய்கள், மனிதச் செயற்பாடுகளினால் ஆபத்துக்கு உள்ளாகியுள்ளன. இவை ஆற்றெதிர்ப் புறத்திலும் (upstream), கடலிலும் நிகழும் நடவடிக்கைகளினால் பாதிக்கப்படுவதுடன், மாசுகளும், படிவுகளும் கயவாய்களில் செறிகின்றன.
கயவாய்ச் சுற்றோட்டம்
கயவாய்கள், கடல்சார் சூழல்கள். இவற்றின் கார / அமிலத் தன்மைகள், உப்புத் தன்மை, நீர் மட்டம் என்பன, இவற்றுடன் கலக்கும் ஆறுகளிலும், தொடர்புடைய கடலிலும் தங்கியுள்ளது.
- கயவாய்ச் சுற்றோட்டம், கயவாய்களில் பொதுவாகக் காணப்படும் ஒன்றாகும். நன்னீர் அல்லது உப்புத்தன்மை குறைவான நீர் மேற்பரப்பில் ஓடி வெளியேற, அடர்த்தி கூடிய உவர் நீர், கயவாய்களின் அடிப்பகுதியை நோக்கிக் கீழ் முகமாகச் செல்கின்றது.
- எதிர்க் கயவாய் ஓட்டம்: இங்கே ஓட்டம் எதிர் முகமாகக் காணப்படும். அடர்த்தி கூடிய நீர் அடிப் பகுதியிலிருந்து வெளியேற அடர்த்தி குறைந்த நீர் மேற்பரப்புக்கு அருகில் உள்நோக்கி வரும்.
இவ்விரு தொடர்களும், கடலியலில், கயவாய்களுக்கும் அப்பால், விரிவான பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. ஏறத்தாழ-மூடிய கடல் படுகைகளில் காணும் நீரோட்டங்களை விளக்க இவை பயன்படுகின்றன.
கயவாய் வகைகள்
கயவாய்களை நீரோட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தலாம்.
- உப்புநீர் இணைவுநிலை
- உயர் அடுக்கமைவு
- குறைந்த அடுக்கமைவு
- நிலைக்குத்துக் கலப்பு
- எதிர்மறைக் கயவாய்
- இடையிட்ட கயவாய்
அமைப்பு அடிப்படையிலான வகைப்படுத்தல்.
- Bar-built கயவாய்
- புவியோட்டுக் கயவாய்
- கடற்கரைச் சமவெளிக் கயவாய்