சில்க் ஏர்

சில்க் ஏர் (சிங்கப்பூர்) வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம் (SilkAir (Singapore) Private Limited) [3] (சீனம்: 勝安航空 Shèngān Hángkōng) சிங்கப்பூரிலிருந்து இயங்கும் ஓர் வான்வழிச் சேவை ஆகும். இது சிங்கப்பூர் வான்வழிச் சேவைக்கு முழுமையாக உரிமையான ஓர் கிளை நிறுவனமாகும். இது சிங்கப்பூரிலிருந்து தென்கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, சீனா மற்றும் ஆத்திரேலியாவிலுள்ள 43 நகரங்களுக்கு திட்டமிட்ட பயணச் சேவைகளை இயக்குகிறது. சிங்கப்பூர் வான்வழிச் சேவையின் சூப்பர்அப் 1இல் ஐந்தாவது மாடியில் இதன் தலைமையகம் இயங்குகிறது.[4] சிங்கப்பூர் வான்வழிச் சேவைக் குழுமத்தின் குறைந்த தொலைவுப் பயணங்களுக்கான மண்டல பயணச்சேவை வழங்கும் நிறுவனமாக இயக்கப்படுகிறது. 2006ஆம் ஆண்டில் 1.56 மில்லியன் பயணியரை ஏற்றிச் சென்றுள்ளது.சிங்கப்பூர் டாலர் 415 மில்லியன் அளவில் விற்பனை ஆற்றியுள்ள இந்த நிறுவனத்தின் இலாபம் சி.டா 30 மில்லியனாக இருந்தது.[5] மார்ச்சு 31, 2010இல் சில்க் ஏரில் 278 ஊழியர்கள் பணி புரிந்தனர்.[6]

சில்க் ஏர்
IATA ICAO அழைப்புக் குறியீடு
MI SLK SILKAIR
நிறுவல்1976 (டிரேட்விண்ட்ஸ் சார்ட்டர்சு என)
வான்சேவை மையங்கள்சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம்
அடிக்கடி பறப்பவர் திட்டம்சிங்கப்பூர் வான்வழி#கிரிஸ்ஃபிளையர்
வானூர்தி நிலைய ஓய்விடம்கிரிஸ் ஃபிளையர் தங்க காத்திருப்பகம், சில்வர்கிரிஸ் காத்திருப்பகம்
வானூர்தி எண்ணிக்கை21 (54 தருவிக்கைகள்)
சேரிடங்கள்44
மகுட வாசகம்நினைவில் நிற்கும் மேலும் பல பயணங்கள்
தாய் நிறுவனம்சிங்கப்பூர் வான்வழிச் சேவை வரையறுக்கப்பட்டது
தலைமையிடம்சிங்கப்பூர்
முக்கிய நபர்கள்மரவின் டான் (மு.செ.அ)[1]
லெசுலி திங் (மு.செ.அ அறிவிக்கை)[2]
இணையத்தளம்www.silkair.com

மேற்கோள்கள்

  1. "SilkAir appoints new CEO". Channel NewsAsia. பார்த்த நாள் 3 September 2010.
  2. "SilkAir names new chief executive". Channel NewsAsia. பார்த்த நாள் 7 August 2012.
  3. "Singapore Airlines Annual Report 2009/2010". Singapore Airlines.
  4. "World Airline Directory." Flight International. 30 March - 5 April 2004. 68.
  5. "SilkAir passenger numbers up 25%". The Straits Times. 16 March 2007.
  6. "Singapore Airlines Annual Report 2009/2010". Singapore Airlines (2010). பார்த்த நாள் 28 October 2010.

வெளி இணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.