வான்சேவை அழைப்புக் குறியீடுகள்
வான்சேவை அழைப்புக் குறியீடுகள் (airline call signs) வணிக வான்வழிப் கோக்குவரத்து நிறுவனங்களை அழைக்கப் பயன்படுத்தப்படும் குறியீடுகளாகும். ஒரு வானூர்தியை அடையாளப்படுத்த இது பயன்படுகிறது. பெரும்பாலான வான்பயண சேவையாளர்களின் பயன்பாட்டுமொழி ஆங்கிலமாக இருப்பதால் இது கால்சைன் எனப்படுகிறது.
வான்பயண வழித்திட்டம் வானூர்தி பதிவுஎண்ணைப் பயன்படுத்துவதில்லை. இந்த வான்வழியை அடையாளப்படுத்தும் வண்ணம் தனித்தன்மையுடைய குறியீடுகள் வழங்கப்படுகின்றன:
- மூன்று எழுத்துக்களால் ஆன சேவையாளர் குறியாடு - (சில நாடுகளில் இரண்டு எழுத்துக்களைக் கொண்டதாகவும் இருக்கலாம்) இந்தக் குறியீட்டை வானூர்தி இயக்கும் நிறுவனங்கள், வான்பயணக் கட்டுப்பாட்டு ஆணையங்கள், மற்றும் பிற சேவைகளுக்கு ஐசிஏஓ வரையறுக்கிறது (ஆவணம். 8585).
- நிறுவனத்தின் வான்பயண எண்ணை ஒத்திருக்கும், ஆனால் கட்டாயமில்லை, ஒன்றிலிருந்து நான்கு இலக்கங்களைக் கொண்டிருக்கும் எண் (பன்னாட்டு வான் போக்குவரத்து சங்கம்)
- சில நேரங்களில் இரண்டு எழுத்துள்ள அடையாள பிற்சேர்க்கை.
வழக்கமாக, இந்த அடையாளக் குறியீடு திரும்பத் திரும்ப நேரும் வான்பயண வழித்திட்டங்களுக்கு (வழக்கமான வான்பயணங்கள்) மீளவும் பயன்படுத்தப்படுகின்றன.
எடுத்துக்காட்டுகள்: AFR3321 ( ஏர் பிரான்சு 3321) - RA306JC ( ஏர் பிரான்சு 301 மைக் பாப்பா) - DLH213 ( லுஃப்தான்சா 213 ) - AFL123 ( ஏரோஃப்ளோட் 123) - KAL908 ({{nobr | கொரியன் ஏர்} 908}) - KLM16P (( கேஎல்எம் 16P)
வானொலித் தொடர்பில் இது ஏஎஃப்ஆர் என்பதற்கு ஃபாக்ஸ்ட்ராட் ஆல்ஃபா ரோமியோ எனவும் டிஎல்எச் என்பதற்கு டெல்ட்டா லிமா ஹோட்டல் எனவும் குறிப்பிடப்படுகின்றன.
சில குறியீடுகளைக் கொண்டு வான்சேவை நிறுவனத்தை அடையாளம் காண்பதில் சிக்கல்கள் இருக்கலாம். இதற்கு பல காரணங்கள் உள்ளன:
- வரலாற்றுக் காரணங்கள்: தனது வரலாற்றில் நிறுவனத்தின் பெயர் மாற்றமடைந்தும் குறியீடு மாறாதிருத்தல்.
- ஏற்கனவே உள்ள பிறிதொரு வான்சேவையாளருடன் குழப்பம் நேராதிருக்க (eg Jetairfly - Callsign: Beauty).
- வணிகக் காரணங்கள்: நிறுவனத்தின் பிரதிபலிப்பிற்காக (eg Aer Lingus - Callsign: Shamrock meaning clubs, symbol of Ireland)
அழைப்புக் குறியீடுகளின் பட்டியலுக்கு, காண்க: (ஆங்கில மொழியில்) வான்சேவை நிறுவனங்களின் அழைப்புக் குறியீடுகள்.
ஐஏடிஏ வான்சேவையாளர் அடையாளக்குறி
ஐஏடிஏ வான்சேவையாளர் அடையாளக்குறி (IATA airline designators) அல்லது ஐஏடிஏ முன்பதிவு குறியீடுகள், உலகின் பல்வேறு வான்சேவையாளர்களுக்கும் பன்னாட்டு வான் போக்குவரத்து சங்கம் (IATA) வழங்கும் இரண்டு வரியுருக்களைக் கொண்ட அடையாளக் குறியீடுகளாகும். இதன் வரையறை ஐஏடிஏயின் சீர்தர அட்டவணை தகவல் செய்முறையேட்டில்,[1] விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐஏடிஏயின் வான் சேவையாளர் குறியீட்டு விவரத்திரட்டில்.[2] இவை விளக்கப்பட்டுள்ளன. (இரண்டுமே ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்படுகின்றன.)
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
- ICAO ATC Callsigns (ஆங்கில மொழியில்)
- International Civil Aviation Organization Official site
- ICAO On-line Publications Purchasing Official site
- IATA's Airline and Airport Code Search
- Airline Designator / Code Database Search (from Aviation Codes Central Web Site – Regular Updates)