சென்னை மோனோரெயில்
சென்னை மோனோரெயில் (Chennai Monorail) அல்லது சென்னை ஒற்றைத் தண்டூர்தி தமிழ்நாட்டின் சென்னை நகரின் போக்குவரத்திற்காக கட்டமைக்கப்பட உள்ள ஓர் ஒற்றைத் தண்டூர்தி விரைவுப் போக்குவரத்து அமைப்பாகும். இது சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் நெடுங்கால நகரக போக்குவரத்து திட்டத்தின் இரண்டாம் பெருந்திட்டத்தில் இது முன்மொழியப்பட்டுள்ளது.
சென்னை மோனோரெயில் Chennai Monorail | |
---|---|
தகவல் | |
அமைவிடம் | சென்னை, தமிழ்நாடு |
போக்குவரத்து வகை | ஒற்றைத் தண்டூர்தி |
மொத்தப் பாதைகள் | 3 (முதல் கட்டம்) |
தலைமையகம் | சென்னை |
இயக்கம் | |
பயன்பாடு தொடங்கியது | 2014 (மதிப்பீடு.) |
தொடர்வண்டி நீளம் | 4 பெட்டிகள் |
Headway | 3 நிமிடங்கள் |
நுட்பத் தகவல் | |
அமைப்பின் நீளம் | 57 கிமீ (முதல் கட்டம்) |
மின்னாற்றலில் | 750 வோல்ட் நேர்.மி |
சராசரி வேகம் | 65 km/h (40 mph) |
உச்ச வேகம் | 80 km/h (50 mph) |
நான்கு வழித்தடங்களில் ஒற்றைத் தண்டூர்தி விட அரசு முடிவெடுத்துள்ளது[1].
- வண்டலூர் - வேளச்சேரி (23 கிமீ)
- பூவிருந்தவல்லி - கத்திப்பாரா சந்திப்பு (16 கிமீ)
- பூவிருந்தவல்லி - வடபழனி (18 கிமீ)
- வண்டலூர் - புழல் (54 கிமீ)
முதல் 3 வழித்தடங்களில் 8,500 கோடி ரூபாய் செலவில் பணிகளை தொடங்கிவிட்டு, நான்காவது வழித்தடத்தை பின்னர் தொடங்குவது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.