தாய் ஏர்வேஸ்
தாய் ஏர்வேஸ் (Thai Airways) என்னும் சர்வதேச பொது நிறுவனம் சுருக்கமாக ‘தாய் ஏர்வேஸ்’ என்று அழைக்கப்படுகிறது. 1988 இல் தாய்லாந்தில் உருவாக்கப்பட்ட இந்நிறுவனத்தின் அலுவலக தலைமையகம் விபவாடி பாங்காங்கிலுள்ள, சட்டுச்சக் மாவட்டத்தின் ராங்க்சிட் சாலையில் உள்ளது.[1] இதன் முதன்மை செயல்பாடுகள் சுவர்ணபூமி விமான நிலையத்தில் நடைபெறுகின்றன. தாய் ஏர்வேஸ் ஸ்டார் அலையன்ஸில் ஒரு உறுப்பினராக உள்ளது. நோக் ஏர் நிறுவனத்தில் 49 சதவீத பங்குகளுடன் மிகப்பெரிய பங்குதாரராக தாய் ஏர்வேஸ் உள்ளது.[2] இந்நிறுவனத்துடன் 2012 ஆம் ஆண்டில், உள்நாட்டு பகுதிகளுக்காக தாய் ஸ்மைலி என்ற பெயருடன் விமானச் சேவையினை தாய் ஏர்வேஸ் தொடங்கியது. இதில் ஒரு புது ஏர்பஸ் ஏ320 விமானம் பயன்படுத்தப்பட்டது.[3]
.jpg)
தாய் ஏர்வேஸ், தனது தலைமையகமான சுவர்ணபூமியில் இருந்து 80 க்கும் மேற்பட்ட விமானங்களைக் கொண்டு உலகின் 35 நாடுகளில் 78 இலக்குகளுக்கு விமானச் சேவையினைப் புரிகிறது. இடைநிறுத்தமே இல்லாத வழித்தடங்களான, பாங்காக்கில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க் நகரம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் வழித்தடங்களில் செயல்படும் விமானச் சேவை நிறுவனமாக தாய் ஏர்வேஸ் இருந்தது. எரிபொருளின் விலை அதிகமானது, சரக்குப் பொருட்களின் எடை அதிகரித்தல் மற்றும் கட்டுப்பாடுகள், விலை உயர்வுக் கட்டணங்கள் போன்ற சில காரணங்களால் 2012 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு பாங்காக்கில் இருந்து செல்லும் இடைநிறுத்தம் இல்லாது செல்லும் அனைத்து விமானச் சேவைகளையும் தாய் ஏர்வேஸ் நிறுத்தியது. 2013 ஆம் ஆண்டில், பாங்காக் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட விமானச் சேவை, சியோலின் அருகேயுள்ள இங்கேயன் சர்வதேச விமான நிலையம் மூலம் செயல்படுத்தப்பட்டது.
ஐரோப்பா, கிழக்கு ஆசியா மற்றும் தெற்கு/தென்மேற்கு ஆசியா போன்ற இடங்களுக்கு விமானச் சேவை புரிந்ததன் மூலமும், தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பெர்க் மற்றும் ஓசியானாவின் ஐந்து முக்கிய நகரங்களுக்கு விமானச் சேவையினை அளித்ததன் மூலமும் தாய் ஏர்வேஸ் நிறுவனத்தின் வழித்தடங்கள் வான்வழிப் போக்குவரத்தில் ஆதிக்கம் பெற்றன. ஆசிய-பசுபிக் விமானச் சேவை நிறுவனங்களில், முதன் முதலாக லண்டனின் ஹீத்ரூ விமான நிலையத்திற்கு விமானச் சேவை செய்தது தாய் ஏர்வேஸ் ஆகும். ஆசிய-பசுபிக் விமானச் சேவை நிறுவனங்களில், ஐரோப்பாவில் செயல்படும் மிகப்பெரிய பயணிகள் விமானச் சேவைகளில், தாய் ஏர்வேஸ் நிறுவனமும் ஒன்றாகும்.
பாங்காக் யுனைடெட் மற்றும் ரெட் புல் ரேஸிங்க் போன்றவற்றிற்கு தாய் ஏர்வேஸ் அங்கீகரிக்கப்பட்ட அலுவலக ஆதரவாளர்கள் ஆவர்.
கோட்ஷேர் ஒப்பந்தங்கள்
தாய் ஏர்வேஸ் தனது கோட்ஷேர் ஒப்பந்தங்களை பின்வரும் நிறுவனங்களுடன் பகிர்ந்துள்ளது.[4][5][6]
- ஏர் லிங்கஸ்
- ஏர் ஆஸ்ட்ரல்
- ஏர் மடகாஸ்கர்
- பாங்காக் ஏர்வேஸ்
- சைனா ஏர்லைன்ஸ்
- சைனா சதர்ன் ஏர்லைன்ஸ்
- இஸ்ரேல் ஏர்லைன்ஸ்
- எமிரேட்ஸ்
- கல்ஃப் ஏர்
- கருடா இந்தோனேசியா
- ஜப்பான் ஏர்லைன்ஸ்
- ஜப்பான் டிரான்சோசியன் ஏர்
- மலேசியா ஏர்லைன்ஸ்
- லௌ ஏர்லைன்ஸ்
- மியான்மர் ஏர்வேஸ் இன்டர்நேஷனல்
- நோக் ஏர்
- பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்
- ராயல் புருனை ஏர்லைன்ஸ்
- ஸ்கான்டினாவியன் ஏர்லைன்ஸ் [7]
- துருக்கி ஏர்லைன்ஸ்
- வியட்நாம் ஏர்லைன்ஸ்
தற்போது தாய் ஏர்வேஸின் பாதுகாப்பு ஆய்வு குறித்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இது சர்வதேச வான்வழிப் போக்குவரத்து அமைப்பின் எதிர்மறையான தணிக்கை முடிவுகளின் விளைவாகத் தோன்றியுள்ளது. இது தொடர்பான விவரங்கள் வாட்சன், ஃபார்லே மற்றும் வில்லியம்ஸ் ஆகியோரால் ஆய்வு செய்யப்படுகிறது.
விமான குழு
மே 2015 இன் படி, தாய் ஏர்வேஸின் விமானக் குழுவில் பின்வரும் விமானங்கள் இடம்பெற்றுள்ளன.[8]
விமானம் | சேவையில்
உள்ளவை |
ஆர்டர்கள் | பயணிகள் | |||
---|---|---|---|---|---|---|
முதல்தர,வகுப்பு | வணிக,வகுப்பு | பொருளாதார,வகுப்பு | மொத்தம் | |||
ஏர்பஸ்
ஏ320-200 |
5 | - | - | - | 174 | 174 |
ஏர்பஸ்
ஏ330-300 |
19 | 5 | - | 42
36 |
263 | 305
299 |
ஏர்பஸ்
ஏ350-900 |
- | 12 | அறிவிக்கப்பட
உள்ளது | |||
ஏர்பஸ்
ஏ380-800 |
6 | - | 12 | 60 | 435 | 507 |
போயிங்க்
737-400 |
2 | - | - | 12 | 137 | 149 |
போயிங்க்
747-400 |
12 | - | 10
9 |
40 | 325 | 375
374 |
போயிங்க்
777-200 |
8 | - | - | 30 | 279 | 309 |
போயிங்க்
777-200 ஈஆர் |
6 | - | - | 30 | 262 | 292 |
போயிங்க்
777-300 |
6 | - | - | 34 | 330 | 364 |
போயிங்க்
777-300 ஈஆர் |
12 | 2 | 24
42 |
18
- |
306
306 |
348 |
போயிங்க்
787-8 |
5 | 1 | - | 24 | 240 | 264 |
போயிங்க்
787-9 |
- | 2 | அறிவிக்கப்பட
உள்ளது | |||
மொத்தம் | 81 | 22 |
உயர்தர வழித்தடங்கள்
தாய் ஏர்வேஸின் உயர்தர வழித்தடங்களாக புகெட் – பாங்காக், பாங்காக் – புகெட், பாங்காக் – சியாங்க் மை மற்றும் டோக்யோ – பாங்காக் ஆகிய வழித்தடங்கள் உள்ளன. இந்த வழித்தடங்களுக்கு முறையே வாரத்திற்கு 94, 87, 84 மற்றும் 55 விமானங்களை தாய் ஏர்வேஸ் செயல்படுத்துகிறது. இவை தவிர குறிப்பிட்ட காரணங்களுக்காக செயல்படுத்தும் விமான வழித்தடங்களில் ஃப்ராங்க்ஃபுர்ட் – ஸ்டாக்ஹோல்ம் மற்றும் ஸ்டாக்ஹோல்ம் – ஆம்ஸ்டெர்டேம் போன்ற வழித்தடங்கள் உள்ளன.
குறிப்பு
- "Addresses and contact numbers". Thai Airways International. பார்த்த நாள் 21 February 2009.
- "Shareholders". Nok Air. பார்த்த நாள் 2012-07-12.
- "THAI realigns plan for a better year". The Nation. பார்த்த நாள் 27 December 2011.
- "Thai Airways". Cleartrip (23 May 2015).
- "Codeshare flights". Thai Airways International.
- "Codeshare 201108.pdf". Google Docs. பார்த்த நாள் 24 April 2015.
- TG and SAS to codeshare on Bangkok-Stockholm route | Bangkok Post: news. Bangkok Post (2013-03-06). Retrieved on 2013-08-25.
- Thai Airways International Fleet ch-aviation.ch Retrieved 2015-05-15