இலங்கையின் நெடுஞ்சாலைகள்
இலங்கையின் நெடுஞ்சாலைகள் பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்தில் முக்கிய இடம் வக்கிக்கிறது. இது "ஏ","பி","சி" (A,B,C) என்ற மூன்று தரங்களாக வகைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்படுகிறது. "ஏ" மற்றும் "பி" தரப் பாதைகளின் பராமரிப்பு இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபையாலும் "சி" தரப் பாதைகளின் பராமரிப்பு இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளாலும் மேற்கொள்ளப்படுகிறது. ஏ" மற்றும் "பி" தரப் பெருந்தெருக்கள் தேசிய பெருந்தெருக்கள் என அழைக்கப்படும். இலங்கை முழுவதும் 2004 ஆம் ஆண்டு கணகெடுப்பின் படி ஏ" மற்றும் "பி" தரப் பெருந்தெருக்கள் 11,716 கிலோ மீட்டரும் "சி" தரப் பெருந்தெருக்கள் 80,191 கிலோ மீட்டரும் காணப்படுகிறது. இலங்கையின் முதலாவது அதிவேக பெருந்தெரு தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஆகும். மேலும் பல புதிய அதிவேக பெருந்தேருக்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
வகைப்படுத்தல்
பெருந்தெரு ஒன்று ஆங்கில முதல் எழுத்து ஒன்றாலும் (A,B,C மட்டும்), ஒரு இந்து-அராபிய தொடர் இலக்கம் ஒன்றாலும் குறிக்கப்படுகிறது. பெருந்தெருக்கள் அவற்றின் முக்கியத்துவத்துக்கு ஏற்றபடி "ஏ","பி","சி" என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் முக்கியத்துவம் "ஏ" தொடங்கி குறைந்து கொண்டு செல்கிறது. "ஏ" வகை பெருந்தெருக்கள் இரண்டு மாகாணங்களை இணைக்கும் பெருந்தெருக்களாகும். "பி" தர பெருந்தெருக்கள் ஒன்று அல்லது இரண்டு பிரதான நகரங்களை "ஏ" தர பெருந்தெருவுடன் இணைக்கும் பெருந்தெருவாகும். இவற்றைத் தவிர முக்கியமானது என அடையாளம் காணப்பட்ட நுழைவு பெருந்தெருக்கள் "சி" தரத்தில் வகைப்படுத்த படுகிறது. பெருந்தெருவின் பெயரில் இரண்டாவது பகுதியான இந்து-அராபிய எண் வீதியின் முக்கியத்துவதை குறிக்க பயன்படாது. மாறாக அது ஒரு தொடர் இலக்கமாகவே பயன்படுத்தப்படுகிறது.
முகாமைத்துவம்
காலப்பகுதி | முகாமை |
---|---|
1970க்கு முன்னர் | குடிசார் கட்டமைப்பு திணைக்களம் |
1970–1976 | பிரதேச குடிசார் பொறியியலாளர் |
1977–1985 | பெருந்தெருக்கள் திணைக்களம் |
1986 முதல் | வீதி அபிவிருத்தி அதிகார சபை |
ஏ-தரப் பெருந்தெருக்களின் பட்டியல்

பெருந்தெருக்கள் இல. | வழி | தூரம் (கி.மீ) |
---|---|---|
A0 | கொள்ளுப்பிட்டி-சிறீ ஜெயவர்தனபுர கோட்டை | 7.12 |
A1 | கொழும்பு-கண்டி | 115.85 |
A2 | கொழும்பு-வெள்ளவாயா, மாத்தறை ஊடாக , அம்பாந்தோட்டை | 317.78 |
A3 | பேலியகொடை-புத்தளம், ஜா-எல ஊடாக, நீர்கொழும்பு, சிலாபம் | 126.31 |
A4 | கொழும்பு-மட்டக்களப்பு, இரத்தினபுரி ஊடாக, பேரகலை, வெள்ளவாயா | 430.57 |
A5 | பேராதனை-செங்கலடி | 275.64 |
A6 | அம்பேபுசை-திருக்கோணமலை | 198.71 |
A7 | அவிசாவளை-நுவரெலியா | 118.7 |
A8 | பாணந்துறை-இரத்தினபுரி | 67.77 |
A9 | கண்டி-யாழ்ப்பாணம் | 321 |
A10 | கட்டுகஸ்தோட்டை-புத்தளம் | 124.58 |
A11 | மரதங்கடவளை-திருக்கொண்டையாமடு | 129.36 |
A12 | புத்தளம்-திருக்கோணமலை | 176.99 |
A13 | கல்குளம்-அனுராதபுரம் | 16.64 |
A14 | மதவாச்சி-தலைமன்னார் | 113.84 |
A15 | மட்டக்களப்பு-திருக்கோணமலை | 130.86 |
A16 | பெரகலை-காலி எல்லை | 40.39 |
A17 | காலி-மாதம்பை | 143.93 |
A18 | நோனாகமை-பெல்மதுளை | 87.69 |
A19 | பொல்காவளை-கேகாலை | 11.67 |
A20 | அனுராதபுரம்-இறம்பாவை | 14.48 |
A21 | கேகாலை-கரவனல்லை | 42.12 |
A22 | பசறை-மொனராகலை | 34.11 |
A23 | வெல்லவாய-கும்பல்வெளை | 30.57 |
A24 | மாத்தறை-அக்குரஸ்சை | 20.11 |
A25 | சியம்பலாண்டுவை-அம்பாறை | 57.12 |
A26 | கண்டி-பதியத்தலாவை | 105.23 |
A27 | அம்பாறை-மகா ஓயா | 57.92 |
A28 | அனுராதபுரம்-பாதெனிய | 80.52 |
A29 | கொரவப்பொத்தானை-வவுனியா | 46.02 |
A30 | வவுனியா-பறையநாளன்குளம் | 35.8 |
A31 | அம்பாறை-காரைதீவு | 24.14 |
A32 | மன்னார்-நாவற்குழி | 98.37 |
A33 | ஜா-எல-யக்கலை | 17.02 |
A34 | மாங்குளம்-முல்லைத்தீவு | 49.25 |
A35 | பரந்தன்-முல்லைத்தீவு | 52.13 |
மொத்த தூரம் | 3720.31 கி.மீ[1] | |
உசாத்துணை
- "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்த்த நாள் 25 திசம்பர் 2015.