இ-01 அதிவேக நெடுஞ்சாலை (இலங்கை)

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை (Southern Expressway) அல்லது கொழும்பு - மாத்தறை அதிவேக நெடுஞ்சாலை (Colombo–Matara Expressway, E01) என்றழைக்கப்படுவது இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலை (expressway) ஆகும். கொழும்பு கொட்டாவையிலிருந்து மாத்தறை கொடகமை வரை அமைக்கப்பட்டுள்ள இந்த நெடுஞ்சாலை 126 கிலோமீட்டர் நீளம் கொண்டது. ஒரு மணி 20 நிமிடத்தில் கொழும்பிலிருந்து மாத்தறையைச் சென்றடைய இப்பாதை வழிவகுக்கிறது[2][3].[4]

 E01 
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை
நீளம்:126 km (78 mi)
வரலாறு:27 நவம்பர் 2011 இல் திறக்கப்பட்டது (பின்னதுவை, காலி வரை- 95.3Km)
முக்கிய சந்திப்புகள்
வட முடிவு:கொட்டாவை ஏ4[1]
 வாயில் 2 → பி84 கஹதுடுவ
வாயில் 3 → ஏ8 கெலனிகம

வாயில் 4 → பி304 தொடங்கொட
வாயில் 5 → பி157 வெலிப்பனை
வாயில் 6 → பி14 குருந்துகஹஹதக்ம

வாயில் 7 → பி153 பத்தேகம
தென் end:பின்னதுவை B594
Location
Major cities:பாணந்துறை, களுத்துறை, மத்துகமை, பெந்தோட்டை, அம்பலாங்கொடை, காலி
Highway system
இலங்கையின் நெடுஞ்சாலைகள்

நிர்மாண செலவு

சுமார் 77 பில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்நெடுஞ்சாலைக்கு ஜப்பான் வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கை அரசாங்கம் மற்றும் ஏனைய நிறுவனங்கள் அனுசரணை வழங்கியிருந்தன. 2003 ஆம் ஆண்டு நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இந்த வீதியில் 22 பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. [5].

உத்தியோகபூர்வ ஆரம்பம்

இந்த தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நவம்பர் 27 2011 ஆம் திகதி சனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. ஜப்பானிய சமாதானத் தூதர் யசூசி அகாசியும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டார். [6]

பிரவேசிப்பதற்கும் வெளியேறுவதற்குமான பாதைகள்

அதிவேக நெடுஞ்சாலைக்ககுள் பிரவேசிப்பதற்கும் வெளியேறுவதற்கும் எட்டு இடங்கள் காணப்படுவதுடன் அவை கொட்டாவை, கஹதுடுவ, களனிகம, வெலிபன்ன, குறுந்துஹா, தாபம, தொடங்கொடை, பத்தேகம மற்றும் பின்னதுவ ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.[7]

கட்டணங்கள்

இந்த வீதியில் பயணிப்பதற்காக 8 இடங்களில் நுழைவாயில்கள் அமைக்கப்பட்டு கட்டணங்கள் அறவிடப்படும். கொட்டாவையிலிருந்து காலி பின்னதுவ வரை பயணிக்கும் வாகனங்கள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு 400 ரூபா 700 ரூபா, 1500 ரூபா மற்றும் 2000 ரூபா என்ற அடிப்படையில் கட்டணங்கள் அறவிடப்படும்.[8].

இதில் கார், கெப் ரக வாகனம், 9 ஆசனங்கள் வரையுள்ள சகல வாகனங்கள், எக்ஸல் 2 மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 400 ரூபாவும் 9 ஆசனங்களுக்கு அதிகமான வேன் மற்றும் 33 ஆசனங்கள் கொண்டுள்ள சகல பஸ் வண்டிகளுக்கும் 700 ரூபாவும், 22 க்கும் அதிகமான ஆசனங்களைக் கொண்ட பஸ், 6 சக்கர வாகனங்கள் மற்றும் எக்ஸல் 3 ஐ உடைய மோட்டார் லொறி, டிரெக் வாகனம் ஆகியவற்றுக்கு 1500 ரூபாவும், ஒன்றாக இணைக்கப்பட்ட கோச் 2 உடன் பயணிக்கும் பஸ், எக்ஸல் 4 மற்றும் அதற்கு அதிகமான வாகனங்களுக்கு 2000 ரூபா அறவிடப்படும். [9]

தடை விதிக்கப்பட்டுள்ள வாகனங்கள்

முச்சக்கர வண்டி, துவிச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள், உழவு இயந்திரம் போன்ற குறிப்பாக 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க முடியாத வாகனங்கள் மற்றும் அதிகளவு புகையை வெளியிடும், முறையாக நிறுத்தற் கருவிகள் (பிரேக்) செயற்படாத வாகனங்கள் வெளிச்ச, சமிக்ஞை விளக்குகள் முறையாக இல்லாத அனைத்து வாகனங்களுக்கும் இவ்வீதியில் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதசாரிகள் நடந்து செல்வதற்கு தடை

பாதசாரிகள் எவரும் நடந்து செல்வதற்கு முற்றாக தடைவிதிக்கப் பட்டுள்ளது. அவ்வாறு மீறி நடந்து செல்பவர்களுக்கு எதிராக 5ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேகம்

இந்த வீதியினூடாக ஆகக் குறைந்த வேகமாக 80 கி.மீ வேகத்திலும், ஆகக் கூடியதாக 120 கி.மீ வேகத்திலும் பயணிக்கலாம்.

போக்குவரத்துக் கடமைகள்

இந்த வீதியின் போக்குவரத்துக் கடமைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 500 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விஷேடமாக பயிற்சியளிக்கப் பட்டவர்களே இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

திடீர் விபத்துக்கள்

திடீரென விபத்துக்கள் ஏற்பட்டால் 1969 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை வரை விஸ்தரிப்பு

தெற்கு அதிவேக வீதியை அம்பாந்தோட்டை வரை விஸ்தரிப்பபதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இரண்டாம் கட்டத்தின் கீழ் அடுத்த வருடம்(2012) மாத்தறை வரையில் இந்த தெற்கு அதிவேக வீதி நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்படவுள்ளது. காலி முதல் மாத்தறை வரையான தெற்கு அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகள் 2013 ஆம் ஆண்டு நிறைவடையவுள்ளன.

மேற்கோள்கள்

  1. பயனர் வழிகாட்டி
  2. 'விந்தையின் நுழைவாயில்’ நாளை திறப்பு, தினகரன், ஆகத்து 26, 2011
  3. ‘Gateway to Wonder’ opens tomorrow, டெயிலி நியுஸ், ஆகத்து 26, 2011
  4. காலி - மாத்தறை அதிவேகப்பாதை ஜனாதிபதியினால் திறப்பு!, தமிழ்வின், மார்ச் 15, 2014
  5. Southern Expressway journey begins today President opens Rs. 77m mega project, சன்டே ஒப்சேவர், ஆகத்து 27, 2011
  6. President declares open Southern Expressway, அத தெரன, ஆகத்து 27, 2011
  7. நெடுஞ்சாலைப் பயணம் எவ்வாறு அமையும்?, வீரகேசரி, ஆகத்து 25, 2011
  8. Southern Expressway journey begins today President opens Rs. 77m mega project, சன்டே ஒப்சேவர், ஆகத்து 27, 2011
  9. நெடுஞ்சாலைப் பயணம் எவ்வாறு அமையும்?, வீரகேசரி, ஆகத்து 25, 2011
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.