சுப்பிரமணியன் சந்திரசேகர்

சுப்பிரமணியன் சந்திரசேகர் (Subrahmanyan Chandrasekhar) (அக்டோபர் 19, 1910 - ஆகஸ்ட் 21, 1995) வானியல்-இயற்பியலாளர் ஆவார். இவர் பிரித்தானிய இந்தியாவில் லாகூரில் பிறந்தவர். ஐக்கிய அமெரிக்கா, சிக்காகோவில் தனது வாழ்நாளின் பெரும் பகுதியைக் கழித்தவர்[1][2] விண்மீன்கள் பற்றிய இவரது ஆய்விற்காக இவருக்கும் வில்லியம் ஃபௌலருக்கும் 1983 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

சுப்பிரமணியன் சந்திரசேகர்

சுப்பிரமணியன் சந்திரசேகர்
பிறப்பு அக்டோபர் 19, 1910
லாகூர், பிரித்தானிய இந்தியா, (தற்போதைய பாகிஸ்தானில்)
இறப்புஆகஸ்ட் 21, 1995 (அகவை 84)
சிக்காகோ, அகூநா
வதிவு அகூநா (1937-1995)

பிரித்தானிய இந்தியா (1910-1930)

பிரித்தானியா (1930-1937)
தேசியம் அகூநா (1953-1995)

பிரித்தானிய இந்தியா (1910-1947)

இந்தியா (1947-1953)
துறைவானியல் இயற்பியல்
நிறுவனம்சிக்காகோ பல்கலைக்கழகம்
கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகம்
Alma materட்றினிட்டி கல்லுரி, கேம்பிறிட்ஜ்
சென்னை பிறெசிடென்சி கல்லூரி
துறை ஆலோசகர்ஆர்.. எஹ். ஃபௌலர்
முக்கிய மாணவர்டொனால்ட் எட்வர்ட் ஒஸ்டர்புரொக்
அறியப்பட்டதுசந்திரசேகர் எல்லை
பரிசுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (1983)
கோப்லி விருது (1984)
அறிவியலுக்கான தேசிய விருது (1967)
கார்ல் சுவார்சுசைல்டு பதக்கம் (1986)
மதம்சமய மின்மை, இறைமறுப்பு

1937 இலிருந்து 1995 இல் இறக்கும் வரை சிக்காகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். இவர் 1953இலிருந்து ஐக்கிய அமெரிக்கக் குடிமகனாவார்.

வாழ்க்கைக் குறிப்பு

C. சுப்பிரமணியன் ஐயருக்கும் சீதாலட்சுமி அம்மையாருக்கும் பிறந்தவர் சந்திரசேகர். இவருடன் கூடப் பிறந்தவர்கள் ஆறு சகோதரிகளும் (ராஜலட்சுமி, பாலபார்வதி, சாரதா, வித்யா, சாவித்திரி, மற்றும் சுந்தரி) மூன்று சகோதரர்களும் (விசுவநாதன், பாலகிருஷ்ணன், மற்றும் ராமநாதன்) [3]. லாகூரில் ஐந்து வருடங்களும், லக்னோவில் இரண்டு வருடங்களும் வாழ்ந்தபின், அவரது குடும்பம் சென்னை வந்தடைந்தது. அவரது ஆரம்பப் படிப்பு வீட்டில் தொடங்கியது; பதினோராம் வயதில் அவர் திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார் [4].

மாநிலக்கல்லூரியில் மேல்நிலைப் படிப்பு முடிந்ததும், 1927-ல் இளங்கலை (B.A. Honours) இயற்பியல் படிப்பை அதே கல்லூரியில் தொடர்ந்தார். இப்படிப்பின் போதுதான் 1928 இல் அவரது சித்தப்பா சர். சி. வி. இராமனுக்கு நோபல் பரிசு கிடைத்தது [5].

1928 இல், ஆர்னோல்ட் சம்மர்ஃபெல்ட் (Arnold Sommerfeld) இந்தியா வந்திருந்த போது, சென்னையில் மாநிலக் கல்லூரியில் சொற்பொழிவு ஆற்றினார். ஏற்கனவே அவருடைய புத்தகத்தைப் படித்திருந்த சந்திரசேகர், அவரைச் சந்தித்து இயற்பியலில் நிகழ்ந்திருந்த புதிய ஆராய்ச்சிகளைப் பற்றி அறிந்ததுடன், அவை பற்றிய புத்தகங்களைப் படிப்பதில் ஆழ்ந்த கவனமும் செலுத்தினார். அதன் விளைவாக அதற்கடுத்த வருடத்திலேயே தனது முதல் ஆராய்ச்சிக் கட்டுரையையும் பதிப்பித்தார்.[6] அவ்வருடம் சென்னையில் நடந்த இந்திய அறிவியல் மாநாட்டில் இக்கட்டுரையை ஒத்த சொற்பொழிவு மூத்த அறிவியலாளர்களின் மெச்சுதலோடு நடந்தேறியதுடன், அவரது ஆராய்ச்சிப் பயணமும் வெற்றிகரமாகத் தொடங்கியது. மேலும், அதற்கடுத்த வருடம் -- 19ஆவது வயதில், இன்னும் இளங்கலை மாணவராக இருக்கையிலேயே -- மேலும் இரு கட்டுரைகளும்[7] பதிப்பாயின [8].

1930 ஆம் ஆண்டு, இந்திய அரசாங்கத்தின் பரிசும் பண உதவியும் பெற்று, சந்திரசேகர் மேல்படிப்புக்காக கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குப் பயணித்தார்.[9]

சந்திரசேகரின் கண்டுபிடிப்பு

இவருக்கு இயற்பியல், மற்றும் விண்வெளி ஆய்வியல் போன்றவற்றில் ஆர்வம் மிகுந்து இருந்தது. அதில் இவர் சிறந்து விளங்கினார். வான இயலில் நட்சத்திரன்களின் எடையைக் குறித்து ஒரு வரையறை செய்தார். அது சந்திரசேகர் வரையறை என்று அழைக்கப்படுகிறது. வெள்ளையான சிறிய நட்சத்திரம் அதிக எடையுடன் இருப்பதால், அதன் உட்கரு 'அணுகுண்டு' போல வெடித்து பிரகாசமான 'சூப்பர் நோவா' என்ற நட்சத்திரகளைத் தோன்றுவிக்கும் என்று கண்டுபிடித்தார்.

பால்வெளி வீதியில் நட்சத்திரங்கள் பொருட்களின் நகர்த்தலை எவ்வாறு பகிர்ந்து கொள்கின்றன என்று கண்டுபிடித்தார். இதன் மூலம் நட்சத்திரகளின் சுற்றுச்சூழல்ப் புரிந்து கொள்ளமுடிந்தது. மேலும் ஏன் வானம் நீலநிறமாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தார்.[10] இதனால் பல உயரிய விருதுகளை சந்திரசேகர் பெற்றார். நட்சத்திர ஆராய்ச்சிக்காக அறிவியலுக்காக 1983 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார். 1995 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி இவர் மரணமடைந்தார்.

சந்திரசேகர் எழுதிய நூல்கள்

நூல்கள்

குறிப்புகள்

  • Chandrasekhar, S. (1943). Stochastic Problems in Physics and Astronomy. Reviews of modern physics.
  • Spiegel, E.A. (2011) [1954]. The Theory of Turbulence : Subrahmanyan Chandrasekhar's 1954 Lectures. Netherlands: Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-94-007-0117-5.
  • Chandrasekhar, S. (1983). On Stars, their evolution and their stability, Noble lecture. Stockholm: Noble Foundation.

இதழ்கள்

Chandrasekhar had published around 380 papers[11] in his life time. He wrote his first paper in 1928 when he was still an undergraduate student and last paper was in 1995. The University of Chicago Press published the papers of Chandrasekhar in six volumes.

சந்திரசேகர் பற்றிய நூல்கள்

இந்தக் கட்டுரை இந்திய மொழியில் எழுதப்பட்ட உரையை கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ கட்டங்களோ, இடம் மாறியுள்ள உயிரெழுத்துகளோ, விடுபட்ட இடைச்சொல்லோ இந்திய மொழியில் எழுதப்பட்ட உரைக்கு பதிலாக தெரியலாம்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. Bio-Chandrasekhar
  2. Autobiography, Nobel Foundation, Stockholm, Sweden
  3. Wali, 1991:47
  4. Wali, 1991:50
  5. Wali, 1991:55-61
  6. Chandrasekhar, 1929
  7. Chanrasekhar, 1930
  8. Wali, 1991:61-64
  9. Wali, 1991:67-71
  10. இந்திய விஞ்ஞானிகள் யார்? எவர்?, கானதாசன் 2004,இரவிக்குமார்பதிப்பகம்
  11. "Publications by S. Chandrasekhar". Indian Academy of Sciences. பார்த்த நாள் 15 May 2017.

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.