திதியே கெலோ

திதியே கெலோ (Didier Queloz) (பிறப்பு பிப்ரவரி 23, 1966) சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த வானவியலாளர். இவர் செனீவா பல்கலைக்கழகத்திலும் கேம்பிரிட்சு பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக உள்ளார்.[1]. திரினிட்டிக் கல்லூரியில் சிறப்புப்பேராளராகவும் உள்ளார்[2]. இவர் 2019 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை சேம்சு பீபிள்சு, மிசல் மயோர் ஆகியோருடன் இணைந்து வென்றுள்ளார். இவரின் பரிசுத் தொகை 1/4 பங்கு..[3][4]

திதியே கெலோ
Didier Queloz
ஐரோப்பிய தென் கூர்நோக்ககத்தில் கெலோ 50 ஆண்டுநிறைவுக் கொண்டாட்டத்தில். இரெசிடென்சு, மியூனிக்கு, அக்டோபர் 11, 2012.
பிறப்புFebruary 23, 1966 (1966-02-23) (வயது 53)
தேசியம்சுவிட்சர்லாந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்செனீவா பல்கலைக்கழகம்
பணிவானவியலாளர்
விருதுகள்உவுல்ஃபு பரிசு(Wolf Prize in Physics) (2017)
இயற்பியலுக்கான நோபல் பரிசு (2019)

1995 ஆம் ஆண்டு கெலோ செனீவா பல்கலைக்கழகத்தில் முனைவர்ப்பட்ட தகுதியாளராக இருந்த பொழுது இவருடைய ஆய்வு நெறியாளர் மிசல் மயோர் அவருடன் சேர்ந்து கதிரவ மண்டலத்துக்கு வெளியே பெகாசசு என்னும் விண்மீன் கூட்டத்தில் உள்ள ஒரு விண்மீனைச் சுற்றிவரும் ஒரு புறக்கோள் (exoplanet) ஒன்றை முதன்முதலாகக் கண்டுபிடித்தார். [5]. இக்கண்டுபிடிப்புக்காக இவருக்கும் இவரின் அன்றைய ஆய்வு நெறியாளர் மிசல் மயோர் அவர்களுக்கும் 2019 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல பரிசின் சரி பாதி வழங்கப்பெற்றது. 2019 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசின் முதற்பாதி பரிசை சேம்சு பீபிள்சு வென்றார்.


அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Wolf Prize in Physics


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.