தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (Tamil National Alliance) என்பது இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டணியாகும். இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணத் தமிழ் மக்களிடையே இக்கட்சி பெரும் செல்வாக்கைப் பெற்றுள்ளது. இக்கூட்டமைப்பில் இலங்கையின் மிதவாதத் தமிழக் கட்சிகள், மற்றும் முன்னாள் போராளிக் குழுக்கள் அங்கம் வகிக்கின்றன. 2001 ஆம் ஆண்டில் இருந்து இக்கூட்டமைப்பு தேர்தல்களில் பங்குபற்றி வருகிறது. 2015 செப்டம்பர் முதல் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக பதவியில் உள்ளார்.[1][2]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | |
---|---|
![]() | |
தலைவர் | இரா. சம்பந்தன் நாஉ |
செயலாளர் | மாவை சேனாதிராஜா நாஉ |
பிரதித் தலைவர் | அ. விநாயகமூர்த்தி நாஉ |
பிரதிச் செயலர்(கள்) | செல்வம் அடைக்கலநாதன் நாஉ சுரேஷ் பிரேமச்சந்திரன் நாஉ |
தொடக்கம் | அக்டோபர் 20, 2001 |
தலைமையகம் | 6, 1வது ஒழுங்கை, பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணம், இலங்கை |
கொள்கை | தமிழ்த் தேசியம் |
நாடாளுமன்ற உறுப்பினர்கள் | 16 / 225 |
மாகாணசபை உறுப்பினர்கள் | 41 / 417 |
உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் | 76 / 3,036 |
இணையதளம் | |
tnainfo.com |
இலங்கைத் தமிழர்களுக்கு சுயாட்சியை இக்கூட்டமைப்பு ஆரம்பத்தில் வலியுறுத்தி வந்திருந்தாலும், 2010 ஆம் ஆண்டில் சுயாட்சிக் கோரிக்கையைக் கைவிட்டு, பிராந்திய தன்னாட்சி அமைப்பை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது.[3]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வாக தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை ஆதரித்து வந்தது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கி. சிவநேசன், ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இக்கொலைகளை இலங்கை அரசாங்கமே செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
கூட்டமைப்பு உருவாக்கம்
2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் 2001 அக்டோபர் 20 இல் நான்கு கட்சிகள் இணைந்து இக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
- தமிழர் விடுதலைக் கூட்டணி (தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ்)
- ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எஃப் - சுரேஷ் அணி)
- தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓர் அரசியல் கட்சியாக இலங்கை தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாமையினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் சூரியன் சின்னத்தில் 2001 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 15 இடங்களைக் கைப்பற்றியது.
தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பின்னர் கூட்டமைப்பில் இருந்து விலகின. தமிழர் விடுதலைக் கூட்டணியின் சில அங்கத்தவர்கள் இரா. சம்பந்தனின் தலைமையில் கூட்டமைப்பில் தொடர்ந்து இயங்கினர். இவர்கள் முடக்கி வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தமது கட்சியாக ஏற்றனர். இக்கட்சியின் வீட்டுச் சின்னத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல்களில் போட்டியிட்டது. 2013 ஆம் ஆண்டில் வீ. ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகியன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சேர்ந்து கொண்டன. 2013 ஆம் ஆண்டில் பின்வரும் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன:
- இலங்கைத் தமிழரசுக் கட்சி
- ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எஃப் - சுரேஷ் அணி)
- தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)
- தமிழர் விடுதலைக் கூட்டணி
- தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)
தேர்தல் வரலாறு
ஆண்டு | வாக்குகள் | வாக்கு % | வென்ற இடங்கள் | +/– | அரசு |
---|---|---|---|---|---|
2001 | 348,164 | 3.89% | 15 / 225 |
![]() |
எதிர்க்கட்சி |
2004 | 633,654 | 6.84% | 22 / 225 |
![]() |
எதிர்க்கட்சி |
2010 | 233,190 | 2.90% | 14 / 225 |
![]() |
எதிர்க்கட்சி |
2015 | 515,963 | 4.62% | 16 / 225 |
![]() |
எதிர்க்கட்சி |
நாடாளுமன்றத் தேர்தல்கள்
2001 நாடாளுமன்றத் தேர்தல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முதற் தடவையாக 5 டிசம்பர் 2001 தேர்தலில் போட்டியிட்டது. இரா. சம்பந்தன் தலைமையில் 3.88% வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 225 இடங்களில் 15 இடங்களைக் கைப்பற்றியது.
தேர்தல் மாவட்டங்கள் வாரியாக ததேகூ வென்ற வாக்குகளும், இடங்களும்:
தேர்தல் மாவட்டம் | வாக்குகள் | % | இடங்கள் | செலுத்தப்பட்ட மொத்த வாக்குவீதம் | ததேகூ உறுப்பினர்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
அம்பாறை | 48,789 | 17.41% | 1 | 82.51% | அரியநாயகம் சந்திரநேரு (தவிகூ) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டக்களப்பு | 86,284 | 48.17% | 3 | 68.20% | ஜி. கிருஷ்ணபிள்ளை (தகா) யோசப் பரராஜசிங்கம் (தவிகூ) தம்பிராஜா தங்கவடிவேல் (டெலோ) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கொழும்பு | 12,696 | 1.20% | 0 | 76.31% | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
யாழ்ப்பாணம் | 102,324 | 54.84% | 6 | 31.14% | வீரசிங்கம் ஆனந்தசங்கரி (தவிகூ) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (தகா) நடராஜா ரவிராஜ் (தவிகூ) மாவை சேனாதிராஜா (தவிகூ) எம். கே. சிவாஜிலிங்கம் (டெலோ) அ. விநாயகமூர்த்தி (தகா) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
திருகோணமலை | 56,121 | 34.83% | 1 | 79.88% | இரா. சம்பந்தன் (தவிகூ) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வன்னி | 41,950 | 44.39% | 3 | 46.77% | செல்வம் அடைக்கலநாதன் (டெலோ) சிவசக்தி ஆனந்தன் (ஈபிஆர்எல்எஃப்) இராசா குகனேசுவரன் (டெலோ) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேசியப் பட்டியல் | 1 | மு. சிவசிதம்பரம் (தவிகூ), 2002 சூன் 5 இல் காலமானார். இவருக்குப் பதிலாக க. துரைரத்தினசிங்கம் (தவிகூ) தேர்ந்தெடுக்கப்பட்டார்.) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மொத்தம் | 348,164 | 3.88% | 15 | 76.03% | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்:"Parliamentary General Election 2001, Final District Results". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
2004 நாடாளுமன்றத் தேர்தல்2004 ஏப்ரல் 2 இல் இடம்பெற்ற தேர்தல்களில் சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி வெற்றி பெற்றது. இரா. சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 6.84% வாக்குகளைப் பெற்று, 22 இடங்களைக் கைப்பற்றியது.
2010 நாடாளுமன்றத் தேர்தல்2010 ஏப்ரல் 8 இல் இடம்பெற்ற தேர்தல்களில் மகிந்த ராசபக்ச தலைமையில் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி வெற்றி பெற்றது. இரா. சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2.9% வாக்குகளைப் பெற்று, 14 இடங்களைக் கைப்பற்றியது. ததேகூ வென்ற தேர்தல் மாவட்டங்கள்
2015 நாடாளுமன்றத் தேர்தல்2015 ஆகத்து 17 இல் இடம்பெற்ற தேர்தல்களில் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெற்றது. இரா. சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4.62% வாக்குகளைப் பெற்று, இரண்டு தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 16 இடங்களைக் கைப்பற்றி நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக வந்தது. முக்கிய கட்சிகளான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுகூ) ஆகியன முறையே 106, 95 இடங்களைக் கைப்பற்றியிருந்தன. ஐதேக ஆட்சியமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், இரண்டு முக்கிய கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தன. இதனால் 16 இடங்களைக் கைப்பற்றி மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் 2015 செப்டம்பர் 3 இல் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][4][5] ததேகூ வென்ற தேர்தல் மாவட்டங்கள்
மாகாணசபைத் தேர்தல்கள்2008 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றவில்லை. 2013 இல் நடைபெற்ற 1வது வட மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. 2012 கிழக்கு மாகாணசபைத் தேர்தல்2012 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டு மொத்தமுள்ள 37 இடங்களில் 11 இடங்களைக் கைப்பற்றியது.[6]
2013 வடக்கு மாகாணசபைத் தேர்தல்2013 செப்டம்பர் 21 இல் நடைபெற்ற வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டு மொத்தமுள்ள 38 இடங்களில் 30 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று 1வது வட மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்றியது.[7]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |