சிவஞானம் சிறீதரன்

சிவஞானம் சிறீதரன் (பிறப்பு: டிசம்பர் 8, 1968) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

சிவஞானம் சிறீதரன்

நாடாளுமன்ற உறுப்பினர்
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2010
தனிநபர் தகவல்
பிறப்பு 8 திசம்பர் 1968 (1968-12-08)
நெடுந்தீவு, யாழ்ப்பாணம்
அரசியல் கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
சார்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
வாழ்க்கை துணைவர்(கள்) சிவஞானகுமாரி
இருப்பிடம் 882 ஆறுமுகம் வீதி, வட்டக்கச்சி, இலங்கை
தொழில் ஆசிரியர்
சமயம் இந்து
இனம் இலங்கைத் தமிழர்
இணையம் www.shritharan.com

ஆரம்ப வாழ்க்கை

யாழ்ப்பாண மாவட்டம், நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவஞானம் பின்னர் கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சிக்கு இடம் பெயர்ந்தார். ஆசிரியரான இவர் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றினார்.[1] இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த இராணுவத் தளபதியாக இருந்த பிரிகேடியர் தீபன் என்ற வேலாயுதபிள்ளை பகீரதகுமாரின் சகோதரியைத் திருமணம் செய்தார்.

அரசியல் வாழ்க்கை

சிறீதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு 10,057 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[2] 2015 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் அதிகப்படியான விருப்பு வாக்குகள் (72,058) பெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[3][4]

மேற்கோள்கள்

  1. "SLA soldiers obstruct ITAK candidate from campaigning in Ki'linochchi". தமிழ்நெட். 12 March 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31349. பார்த்த நாள்: 14 ஏப்ரல் 2010.
  2. "preferences/Jaffna pref GE2010.pdf Parliamentary General Election - 2010 Jaffna Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  3. "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo.
  4. "Preferential Votes". டெய்லிநியூசு. 19 ஆகத்து 2015. http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.