செல்வம் அடைக்கலநாதன்

செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan; பிறப்பு: சூன் 10, 1962) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தற்போதைய தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும் ஆவார்.

செல்வம் அடைக்கலநாதன்
நாஉ
தலைவர், தமிழீழ விடுதலை இயக்கம்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
1986
முன்னவர் சிறீ சபாரத்தினம்
வன்னி மாவட்டம் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2000
தனிநபர் தகவல்
பிறப்பு அமிர்தநாதன் அடைக்கலநாதன்
சூன் 10, 1962 (1962-06-10)
அரசியல் கட்சி தமிழீழ விடுதலை இயக்கம்
பிற அரசியல்
சார்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இருப்பிடம் மடிவெல, கோட்டே, இலங்கை
சமயம் கத்தோலிக்கம்
இனம் இலங்கைத் தமிழர்

வாழ்க்கைக் குறிப்பு

வடக்கு இலங்கையின் மன்னாரைச் சேர்ந்த அடைக்கலநாதன், தனது 15வது அகவையில் டெலோ இயக்கப் போராளியாக இணைந்தார்.[1] டெலோ இயக்கத் தலைவர் சிறீ சபாரத்தினம் 1986 மே 5 இல் கொல்லப்பட்டதை அடுத்து செல்வம் அடைக்கலநாதன் அவ்வியக்கத்தின் தலைவரானார்.[1]

அரசியலில்

அடைக்கலநாதன் வன்னி மாவட்டத்தில் டெலோ கட்சியின் சார்பில் 2000ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[2]

2001 ஆம் ஆண்டில் டெலோ, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியன இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற அரசியல் கூட்டணியை ஆரம்பித்தன. அடைக்கலநாதன் 2001 தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ததேகூ சார்பில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] பின்னர் 2004, 2010 தேர்தல்களிலும் வெற்றி பெற்றார்.[4][5]

மேற்கோள்கள்

  1. "We are on the correct path'". புரொண்ட் லைன் 21 (21). 9 அக்டோபர் 2004. http://www.frontlineonnet.com/fl2121/stories/20041022000905200.htm.
  2. "General Election 2000 Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  3. "General Election 2001 Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  4. "General Election 2004 Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  5. "Parliamentary General Election - 2010 Vanni Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.