ரஞ்சித் சியம்பலாபிட்டிய
ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya , பிறப்பு: மே 1, 1961), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கேகாலை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். தொலைதொடர்பு, தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர். சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று எரிசக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3]
ரஞ்சித் சியம்பலாபிட்டிய இலங்கை தொலைதொடர்பு, தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் | |
---|---|
![]() | |
கேகாலை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2010 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | மே 1, 1961 இலங்கை |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
பணி | அரசியல்வாதி |
சமயம் | பௌத்தம் |
வாழ்க்கைக் குறிப்பு
வென்டலவத்தை, ருவன்வெலையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.
உசாத்துணை
- ரஞ்சித் சியம்பலாபிட்டிய நாடாளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளம்
மேற்கோள்கள்
- "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ் (4 செப்டம்பர் 2015). பார்த்த நாள் 4 செப்டம்பர் 2015.
- http://www.priu.gov.lk/Govt_Ministers/Indexministers.html
- http://www.news.lk/news/sri-lanka/item/9565-new-ministers-sworn-in