மாவை சேனாதிராஜா

மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) என அழைக்கப்படும் சோமசுந்தரம் சேனாதிராஜா (பிறப்பு: அக்டோபர் 27, 1942) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார்.

மாவை சேனாதிராஜா
நாஉ
தேசியப் பட்டியல் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1989–1994
முன்னவர் அ. அமிர்தலிங்கம், தவிகூ
பதவியில்
1999–2000
முன்னவர் நீலன் திருச்செல்வம், தவிகூ
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2000
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 27, 1942 (1942-10-27)
தேசியம் இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
சார்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இருப்பிடம் 241/5, டபிள்யூ. ஏ. சில்வா ஒழுங்கை, வெள்ளவத்தை, இலங்கை
படித்த கல்வி நிறுவனங்கள் இலங்கைப் பல்கலைக்கழகம்
சமயம் இந்து

வாழ்க்கைக் குறிப்பு

சேனாதிராசா 1942 அக்டோபர் 27 இல் பிறந்தார்.[1][2] வீமன்காமம் பாடசாலையிலும், நடேசுய்வரா கல்லூரியிலும் கல்வி கற்ற பின்னர்,[2] இலங்கைப் பல்கலைக்க்ழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.[2]

அரசியலில்

சேனாதிராசா இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் செயல்பட்டு 1961 சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றினார்.[2] இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் 1962 இல் இணைந்தார்.[2] 1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார்.[2] 1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு எட்டு வெவ்வேறு சிறைச்சாலைகளில் மொத்தம் ஏழாண்டுகள் சிறையில் கழித்தார்.[2] 1972 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவரியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[2]

சேனாதிராஜா 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈஎன்டிஎல்எஃப்/ஈபிஆர்எல்எஃப்/டெலோ/தவிகூ கூட்டணி சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு கூட்டணியின் வேட்பாளர்களில் 13வதாக வந்து தோல்வியடைந்தார்.[3][4] ஆனாலும், அ. அமிர்தலிங்கம் 1989 சூலை 13 இ படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவரின் இடத்திற்கு சேனாதிராசா தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.[5] 1999 சூலை 29 இல் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றார்.[5][6]

2000-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[7] 2001 அக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தவிகூ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற கூட்டமைப்பை நிறுவின.[8][9] 2001 தேர்தலில் ததேகூ சார்பாக யாழ் மாவடத்தில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[10] 2004, 2010, 2015 தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[11][12][13][14]

செப்டம்பர் , 2014இல் சேனாதிராசா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.[15]

தேர்தல் வரலாறு

தேர்தல் தொகுதி / மாவட்டம் கட்சி வாக்குகள் முடிவு
1989 நாடாளுமன்றத் தேர்தல்[4]யாழ்ப்பாண மாவட்டம்தவிகூ2,820தெரிவு செய்யப்படவில்லை
2000 நாடாளுமன்றத் தேர்தல்[7]யாழ்ப்பாண மாவட்டம்தவிகூ10,965தெரிவு
2001 நாடாளுமன்றத் தேர்தல்[10]யாழ்ப்பாண மாவட்டம்தவிகூ33,831தெரிவு
2004 நாடாளுமன்றத் தேர்தல்[11]யாழ்ப்பாண மாவட்டம்தவிகூ38,783தெரிவு
2010 நாடாளுமன்றத் தேர்தல்[12]யாழ்ப்பாண மாவட்டம்தவிகூ20,501தெரிவு
2015 நாடாளுமன்றத் தேர்தல்[16]யாழ்ப்பாண மாவட்டம்தவிகூ58,782தெரிவு

மேற்கோள்கள்

  1. "Directory of Members: Mavai S. Senathirajah". இலங்கை நாடாளுமன்றம்.
  2. de Silva, W. P. P.; Ferdinando, T. C. L.. 9th Parliament of Sri Lanka. Associated Newspapers of Ceylon Limited. பக். 306. Archived from the original on 2015-06-23. https://web.archive.org/web/20150623233447/http://noolaham.net/project/148/14715/14715.pdf.
  3. "Result of Parliamentary General Election 1989". Department of Elections, Sri Lanka.
  4. de Silva, W. P. P.; Ferdinando, T. C. L.. 9th Parliament of Sri Lanka. Associated Newspapers of Ceylon Limited. பக். 182. Archived from the original on 2015-06-23. https://web.archive.org/web/20150623233447/http://noolaham.net/project/148/14715/14715.pdf.
  5. "Terror unleashed on Tiger supporters in North-East". Transcurrents (20-11-2005).
  6. "Senathirajah - new TULF MP". தி ஐலண்டு (இலங்கை) (15-08-999).
  7. "General Election 2000 Preferences". Department of Elections, Sri Lanka. மூல முகவரியிலிருந்து 2010-08-26 அன்று பரணிடப்பட்டது.
  8. டி. பி. எஸ். ஜெயராஜ். "Tamil National Alliance enters critical third phase - 1". The Daily Mirror. Archived from the original on 4-04-2010. https://web.archive.org/web/20100404042520/http://www.dailymirror.lk/print/index.php/opinion1/6933.html.
  9. "Tamil parties sign MOU". தமிழ்நெட். 20-10-2001. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=6400.
  10. "General Election 2001 Preferences". Department of Elections, Sri Lanka.
  11. "General Election 2004 Preferences". Department of Elections, Sri Lanka.
  12. "Parliamentary General Election - 2010 Jaffna Preferences". Department of Elections, Sri Lanka.
  13. "Parliamentary General Election - 2010 Jaffna Preferences". Department of Elections, Sri Lanka.
  14. "Ranil tops with over 500,000 votes in Colombo". The Daily Mirror. 19-08-2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo.
  15. "இலங்கை வடக்கு மாகாணம் தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜா தேர்வு" 3. தீக்கதிர் தமிழ் நாளிதழ் (8 செப்டம்பர் 2014). பார்த்த நாள் 8 செப்டம்பர் 2014.
  16. Jayakody, Pradeep (28-08-2015). "The Comparison of Preferential Votes in 2015 & 2010". Daily Mirror. http://www.dailymirror.lk/85309/the-comparison-of-preferential-votes-in-2015-2010.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.