வெள்ளவத்தை
வெள்ளவத்தை கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் நகரின் ஒரு பகுதி ஆகும். இப்பகுதி கொழும்பு -06 என்று பாகுபடுத்தப்பட்டுள்ளது. இதன் அஞ்சற் குறியீடு 00600 ஆகும். இங்கே பெரும்பாலான வீடுகள் அடுக்கு மாடி வீடுகள் ஆகும். வெல்ல என்ற சிங்களச் சொல்லின் பொருள் மணல் என்பதாகும் வத்த எனபது தோட்டம் ஆகும். இது முன்னாளில் இப்பகுதியானது ஓரு மணற் தோட்டமாகக் காட்சியளித்தைக் குறிக்கின்றது. இங்கு வாழ்கின்ற சிங்களவர்களில் குறிப்பிடத்தக்க அளவானோர் சரளமாகத் தமிழில் உரையாடுவார்கள்.
வெள்ளவத்தை | |
---|---|
புறநகர் | |
நாடு | ![]() |
மாகாணம் | மேல் மாகாணம் |
மாவட்டம் | கொழும்பு மாவட்டம் |
நேர வலயம் | Sri Lanka Standard Time Zone (ஒசநே+5:30) |
அஞ்சற் குறியீடு | 00600 |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.